COVID – 19 தகவலறி இணையத்தளம்
COVID – 19 இன் நிலவரங்கள் தொடர்பான தரவறிதலில் ஈடுபட்டுள்ள தேர்ச்சியாளர்கள் தேடிக் கொண்டிருக்கும் மென்பொருள் குறியீட்டுத் திறன் இந்த 17 வயது சிறுவனுடையதாக கூட இருக்கலாம்.
அமெரிக்காவின் சியாட்டலை சேர்ந்த 17 வயதே ஆன ஒரு சிறுவன், கொரோனா வைரசினுடைய பரவலை தொடரும் ncov2019.live எனும் இணையப் பக்கத்தை வடிவமைத்ததன் மூலமாக COVID – 19 க்கு எதிரான போராட்டத்தில் ஒரு முன்னோடியாக விளங்குகிறார்.
Avi Schiffmann, சுயகற்றல் மூலமாக மென்பொருள் குறியீட்டாக்கத்தை கற்றுக் கொண்டவரும் இந்த துறைக்கு புதியவருமாவார்.இவர் 2019 டிசம்பர் இறுதியில் இந்த பக்கத்தை உருவாக்ககியதிலிருந்து இதுவரை 500 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்களால் பார்வையிடப்பட்டுள்ளது.
இந்த பக்கத்தை அவர் உருவாக்கியபோது மொத்த கொரோனா வைரஸ் நோயாளர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை விட குறைவாகவே அவையும் சீனாவின் வுஹான் மாகாணத்தை மையப்படுத்தியே இருந்தன. அப்போதிலிருந்து, தற்போது மில்லியன் கணக்கான எண்ணிக்கைக்கு தொகையானது உயர்ந்துள்ளது.
இந்த பக்கமானது நிமிடத்துக்கு ஒரு முறை புதுப்பிக்கப்படுகிறது
நிமிடத்துக்கு ஒரு முறைபுதுப்பிக்கப்படும் இந்த தளத்தின் ஊடாடும் வரைபடம் மற்றும் வளங்கள் “web scraping” எனப்படும் ஒரு குறியீட்டு முறையின் மூலமாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றன.
“எல்லா வகையானவற்றிலிருந்தும் [வளங்களில்] தகவல்களை எடுக்க கூடிய ஒரு வலைத்தளம் இருந்தால் எவ்வளவு சிறப்பாக இருக்குமென நான் சிந்தித்தேன்” என Schiffmann தெரிவித்துளார்.
அதிலுள்ள தகவல்கள் உலக சுகாதார மையம், நோய் கட்டுப்பாட்டு மையம், மற்றும் தென்கொரியாவின் செய்தி முகவரமைப்பு உட்பட்ட பல்வேறு வளங்களுடன் குறுக்குசோதனை செய்யப்படுகிறது.
அணுகக்கூடியது மற்றும் இலகுவாக புரிந்துகொள்ளக் கூடியது.
Democracy Now! உடனான அண்மைய நேர்காணல் ஒன்றின்போது Schiffmann, மக்களுக்கு வைரஸ் பற்றிய தகவல்கள் மற்றும் தரவுகளை இலகுவாக அணுகக்கூடிய ஒரு கருவியை உருவாக்குவதே தனது நோக்கம் என தெரிவிக்கிறார்.
“நீங்கள் உங்கள் கையடக்க தொலைபேசியில் சென்று உடனடியாக தருவகளை அறியலாம். பாதிக்கப்பட்ட மற்றும் மரணித்தவர்களின் மொத்த எண்ணிக்கையை காணலாம்.” என அவர் தெரிவித்தார்.
கொரோனா வைரஸ் பற்றிய தவறான தகவல்களை முறியடித்தல்
எல்லா வகையான தகவல்களையும் வழங்குவது மட்டுமல்லாமல் தவறான தகவல்கள் பரவுவதை தடுக்கவும் தனது இணைய பக்கம் உதவுமென அவர் நம்பிக்கை தெரிவித்துளார்.
“மக்கள் பதற்ற நிலை வாங்கலை தவிர்க்க திட்டங்கள் மற்றும் களஞ்சியப்படுத்தல்களை மேற்கொள்ள வேண்டும்.” என மற்றுமொரு நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
குணப்படுத்துவதற்கான திட்டங்கள்
மேலதிக தரவுகள்
Schiffmann ஐ தொடர்பு கொள்ள அவரது ட்விட்டர் ஆன @avischiffmann அல்லது மின்னஞ்சலுக்கு coronaviruswebsite@gmail.com இனை பயன்படுத்தவும்.
அவருக்கு ஏதேனும் நன்கொடைகள் மூலம் உதவ விரும்பினால் https://ko-fi.com/avischiffmann.