இணைய வாசகர்களுக்கு இனிய வணக்கங்கள்!! மழைக்காலங்களில் அதிகமாக பலருக்கும் சளி ஏற்படுவது வழக்கம் தான். ஒரு நாள் இரண்டு நாள் என்றால் அதோடு விட்டு விடலாம் .ஆனால் தொடர்ச்சியாக இருக்கும் சளி தொற்றக் கூடியது. ஆகவே அதனை கவனமெடுத்து சரி செய்வது கட்டாயமாகும். சளியை தீர்க்க சில இயற்கையான வைத்திய முறைகள்.
அருகம்புல் வேப்பிலை ஆகிய இரண்டையும் சம அளவு எடுத்து சுத்தம் செய்து தேவையான அளவுக்கு தண்ணீர் ஊற்றி காய்ச்சி கசாயம் செய்து வைத்துக்கொண்டு காலையில் வெறும் வயிற்றில் 50 மில்லி லிட்டர் அளவுக்கு குடித்து வரவேண்டும். விரும்பினால் இதில் ஒரு தேக்கரண்டி அளவுக்கு மஞ்சள் பொடியை கலந்து செய்யலாம்.
ஒரு கரண்டியில் நெருப்புத் துண்டுகளை எடுத்துக்கொண்டு அதன் மீது சிறிது சாம்பிராணி தூள் மஞ்சள் தூள் ஆகியவற்றை தூவி புகை வரவழைத்து அந்தப் புகையை மூக்கினால் உள்ளிழுத்தால் சளித் தொல்லை நீங்கும்.
ஒரு விளக்கில் விளக்கெண்ணெய் ஊற்றி திரி விட்டு எரிய வைத்து அந்தத்திரையில் மஞ்சளை சுட்டு அதன் புகையை மெதுவாக உறிஞ்சி இழுத்தால் சளி நீங்கும்.
முருங்கை இலையைப் பிழிந்து சாறு எடுத்து அதோடு சம அளவு தேன் சேர்த்து குடித்தாலும் சளி நீங்கும்.சளித் தொல்லையின் காரணமாக தலை பாரமாக இருந்தால் ஏலக்காய் கிராம்பு ஆகிய இரண்டையும் அம்மியில் வைத்து சிறுது வெற்றிலை சாறு விட்டு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைப்பாரம் குறையும்.
image source:https://www.wikiwand.com/en/Common_cold