இணைய வாசகர்களுக்கு இனிய வணக்கங்கள்!!
மணிரத்னத்தின் இயக்கத்தில் வெளிவர போவதாக இன்று தமிழ் திரையுலகையே ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கின்றது ஒரு முக்கியமான திரைப்படம் தான் பொன்னியின் செல்வன்.
உண்மையில் இந்த பொன்னியின் செல்வன் என்பது என்ன இதற்கு ஏன் இவ்வளவு ஆர்வம் ?
எழுத்தாளர் கல்கி அவர்களை நம் எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அவருடைய உண்மைப் பெயர் கிருஷ்ணமூர்த்தி. புதின இலக்கியத்தில் கல்கி என்ற புகழ்பெற்ற இவரது இந்த பெயருக்கு காரணம் அவர் உருவாக்கி வெளியிட்ட கல்கி என்ற பத்திரிக்கை ஆகும்.
அவர் வெறும் படைப்பாளி மட்டுமல்ல இந்திய தேசிய விடுதலைக்கு பாடுபட்டு சிறையிலும் வாழ்ந்தவர். கல்கி இதழின் பொன்னியின் செல்வன் ஒரு முழுநீள தொடராக புதினமாக வெளியிடப்பட்டது.
அந்த பொன்னியின் செல்வன் கதையானது சோழர்களுடைய காலத்திலே நாம் அனைவரும் போற்றத்தக்க மாபெரும் மன்னனாகிய ராஜ ராஜ சோழன் ஆட்சியினை பெற்றுக் கொள்வதற்கு முன்பு காலமாகும்.
அந்தக் காலத்தில் நடைபெற்ற விடயங்களும் ராஜராஜ சோழன் ஆட்சிக்கு வரும் முன்பு நடைபெற்ற சோழ ராஜ்ஜியத்தின் கதையும் அழகிய வர்ணனையோடு நமக்கு எடுத்துக் காட்டி இருப்பார் கல்கி அவர்கள்.
அந்த கதையிலே வருகின்ற அடுத்து முறையிலே வாசிக்கும் ஒவ்வொருவருக்கும் கண் முன்னே திரைப்படம் ஓடுவது போன்ற அழகிய கற்பனையானது இருக்கும்.
அவருடைய எழுத்துக்களில் ஆல் உருவாக்கப்பட்ட ஆதிக்கத்தில் தங்களுடைய பிள்ளைகளுக்கு வந்தியதேவன், அருள்மொழிவர்மன், பூங்குழலி என்றெல்லாம் பெயர் வைத்துக் கொண்டாடிய எத்தனையோ பெற்றோர்கள் அன்றைய காலம் முதல் இன்றைய காலம் வரை இருந்து வருகிறார்கள்.
பத்திரிகை வெளியீட்டைத் தாண்டி மீண்டும் தனியா புத்தகமாக வெளி வந்த போதும் தொடர்ச்சியாக பல ஆண்டுகளைக் கடந்து தசாப்தங்களாக மக்கள் மனதில் நிலைத்து நிற்கின்ற ஒரு முழு நீள கதை இந்த பொன்னியின் செல்வன்.
புத்தகமாக எடுத்துப் பார்த்தால் ஐந்து முக்கியபாகங்களைக் கொண்டது ஒவ்வொரு பாகமும் தனித்தனியே 400 பக்கங்களை உள்ளடக்கியதாகவும் ஐந்தாவது பாகம் மட்டும் 700 பக்கங்களில் உள்ளடக்கியதாகவும் இருக்கக்கூடிய ஒரு தன்னிகரற்ற இலக்கியம் இந்த பொன்னியின் செல்வன்.
பல தசாப்தங்களாக மக்கள் மனதிலே வாழ்கின்ற இந்தக் அதை எவ்வாறு திரைப்படமாக்கப்பட்ட போகின்றது என்கின்ற எதிர்பார்ப்பிலேயே பலரும் தவித்துக் கொண்டிருப்பதுதான் பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கான எதிர்பார்ப்புக்கான காரணம்.
image source:https://www.youtube.com/watch?v=3EzU2hGU2Jo