Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
Likes
  • எங்களை பற்றி
Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
பொங்கல்

பொங்கல் பண்டிகை என்பது சூரிய வழிபாட்டு பண்டிகையாகும்

  • January 14, 2021
  • 260 views
Total
1
Shares
1
0
0

இணைய வாசகர்களுக்கு இனிய வணக்கங்கள்!! இணையத்தில் படித்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றோம். அறியாததை அறிந்து கொள்வோம்.

பொங்கல் பண்டிகை என்பது சூரிய வழிபாட்டு பண்டிகையாகும். தை மாதம் முதல் தேதியை தைப்பொங்கல் என்று கொண்டாடுகிறோம். தை மாத முதல் நாளில் சூரியன் வடக்கு நோக்கித் திரும்பி சஞ்சரிக்கத் தொடங்குவதால் இதற்கு உத்தர அயனம் என்று பெயர். அன்று சூரியன் மகர ராசியில் பிரவேசிப்பார்.

பொங்கல் பண்டிகையான தமிழர் திருநாளன்று விளைந்த பயிரை அறுவடைசெய்து, அதன் பலனை அடையும் பருவமே தைப்பொங்கல். தைப்பொங்கலில் இடம்பெறும் தலைவாழை இலையில் தொடங்கி அரிசி, கரும்பு, கிழங்கு என ஒவ்வொன்றுக்கும் ஓர் ஆரோக்கியப் பலன் உண்டு.

பொங்கல் பானையை சுற்றி கட்டிவைக்கப்படும் மஞ்சள்குழை கிருமிநாசினியாக செயல்படும். பானையை சுற்றிக் கட்டிவைக்கப்படும் அந்த மஞ்சள்குழையில் உள்ள கிழங்கை கீறி எடுத்து மறுநாள் சிறியவர்களின் நெற்றியில் வைத்து ஆசி வழங்குவார்கள்.

Turmeric, Curcuma longa, plant facts
image source

தமிழர் திருவிழாவில் ஆவாரம்பூவிற்கு முக்கிய இடமுண்டு. காப்புக் கட்டுதலில் தொடங்கி மாட்டுப்பொங்கல் வரை ஆவாரம்பூவைப் பயன்படுத்துவார்கள். இது சிறந்த கிருமிநாசினி. நோய்களைத் தடுக்க பொங்கலின்போது ஆவாரம்பூவை வீட்டின் கூரைகளில் சொருகி வைப்பார்கள்.

மண்பானையில் சமைப்பதால் நுண் துளைகளின் வழியாக நீராவியும், காற்றும் உணவின் மீது சீராகவும், மெதுவாகவும் பரவும். இதனால் சுத்தம் செய்யப்படாத அரிசி, காய்கறிகளாக இருந்தாலும் மண்பானையில் சமைக்கும்போது கிருமிகள் அழிந்துவிடும். அடுப்பைவிட்டு இறக்கினாலும் சூடு ஆறாமல், அதன் தன்மை கெடாமல் பாதுகாக்கும். உணவின் சத்துக்கள் அனைத்தும் பாதுகாக்கப்பட்டு எளிதாக செரிமானமாகும். தரமான உணவு கிடைக்கும்.

The Festival of Pongal – Tamilnadu's Pride – Sweet Karam Coffee
image source

பொங்கல் பண்டிகையின்போது தலைவாழை இலையில் அனைத்து உணவுகளையும் வைத்து படைப்பார்கள். சூரியனுக்குப் படைத்த பிறகு வாழை இலையில் பரிமாறப்படும் பொங்கலை சாப்பிடுவதால் இலையில் உள்ள இயற்கைச் சாறு உறிஞ்சப்பட்டு உடலில் சேரும். இது தோல்நோய் உருவாகாமல் தடுக்கும். ரத்தத்தைச் சுத்திகரிக்கும்.

பொங்கல் பண்டிகைக்கே இனிமை சேர்ப்பது வெல்லம்தான். இது வாதம், செரிமான நோய்களைக் குணப்படுத்தும். வெல்லத்தை அளவுடன் சேர்த்துக்கொண்டால் வயிற்றுப்புண்ணை ஆற்றும். இரும்பு, கால்சியம் போன்ற சத்துக்களும் இதில் உள்ளன.

பொங்கல் பண்டிகையில் முக்கிய இடம்பிடிப்பது கரும்பு. கரும்பில் நார்ச்சத்துக்கள், வைட்டமின் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. கரும்பை கடித்து சாப்பிடுவதால் பற்கள் உறுதி பெறுகிறது.

பொங்கல் பண்டிகையின் முக்கிய பங்காக இருக்கும் கரும்பானது உழைப்பின் அருமையை நமக்குக் கற்றுத்தருகிறது. அதன் மேல்பகுதி உப்புத்தன்மையுடனும், அடிக்கரும்பு இனிமைமிக்கதாகவும் இருக்கும். வாழ்க்கையும் அப்படித்தான். இளமையில் கஷ்டப்பட்டு உழைக்க எந்தவித தயக்கமும் கொள்ளக்கூடாது. அப்படியானால் தான் முதுமையில் சிரமமில்லாமல் இனியவாழ்வு வாழ முடியும். இந்த உண்மையை உணர்ந்து கரும்பை சுவைக்க வேண்டும். உழைத்து வாழ்வில் முன்னேற்றம் பெற கரும்பு நமக்கு ஒரு நல்ல உதாரணம் என்றால் அது மிகையாகாது.

சூரிய வழிபாடு செய்ய தை முதல் நாள் உகந்த நாளாகும். அதனால் இக்கடவுளுக்கு விருப்பமான சர்க்கரைப் பொங்கல், கரும்பு முதலிய பொருட்களைப் படைக்கிறோம். சூரியனை வழிபடுவதால் உலகில் அடைய முடியாத ஒன்று எதுவும் இல்லை.

தை பிறந்தால் வழி பிறக்கும்

Cheல்லாவின் இனிய தைப்பொங்கல் – 2021 நல்வாழ்த்துக்கள்

wall image

Post Views: 260
Total
1
Shares
Share 1
Tweet 0
Pin it 0
Niranjan Perumal

Previous Article
Cheல்லாவின் இனிய தைப்பொங்கல் - 2021 நல்வாழ்த்துக்கள்

Cheல்லாவின் இனிய தைப்பொங்கல் – 2021 நல்வாழ்த்துக்கள்

  • January 14, 2021
View Post
Next Article
ஜல்லிக்கட்டு போராட்டம் மூலம் தமிழிணைந்து  இன்றுடன் 5 வருடங்கள்

ஜல்லிக்கட்டு போராட்டம் மூலம் தமிழிணைந்து இன்றுடன் 5 வருடங்கள்

  • January 15, 2021
View Post
You May Also Like
பால்குடம்
View Post

பால்குடம் எதற்காக எடுக்கப்படுகிறது? அதன் நன்மைகள் என்ன?

ஐயப்ப
View Post

ஐயப்பனுக்கு நெய் கொண்டு செல்வது ஏன்?

ஐயப்பனின்
View Post

ஐயப்பனின் பதினெட்டு படி உணர்த்தும் குணங்கள்..!

சபரி
View Post

சபரிமலையில் நடக்கும் இந்த விஷயங்கள் உங்களுக்கு தெரியுமா?

தீ மிதி
View Post

தீ மிதிப்பது ஏன்? அதன் அறிவியல் காரணம் என்ன தெரியுமா?

சபரி
View Post

சபரிமலைக்கு முதல் முறையாக மாலை அணிந்தவரா?

சடாரி
View Post

சடாரியை ஏன் தலையில் வைக்கிறார்கள்? சடாரி வைப்பதால் என்ன பலன்?

சபரிமலை
View Post

சபரிமலையின் ஏழு அம்சங்கள்..!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe

Subscribe now to our newsletter

Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்

Input your search keywords and press Enter.