OPPO நிறுவனம் மடிக்கக்கூடிய ஸ்மார்ட் போனை(foldable smartphone) அறிமுகப்படுத்தத் தயாராகி வருவதாக நீண்ட காலமாக தகவல்கள் கசிந்த நிலையில் கடந்த மாத இறுதியில் OPPO நிறுவனம் தானே இதை உறுதிசெய்துள்ளதாக தெரியவருகிறது.
இதுவரை,நம்பகமான லீக்கரான(leaker) டிஜிட்டல் சாட் ஸ்டேஷன்( Digital Chat Station) OPPO இன் முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் பற்றிய சில தகவல்களை வெளியிட்டுள்ளது,
மேலும் OPPO இன் முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்(foldable smartphone) Huawei Mate X2 சாதனத்தைப் போலவே இருக்கும் என்றும் அது 2K+ resolution மற்றும் 120Hz refresh rate வீதத்துடன் 7.8 – 8 அங்குலமுடையது எனவும் இதில் foldable OLED displayயும் காணப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
மேலும் இதில் பின்புற கேமராவில் 50 எம்பி சோனி ஐஎம்எக்ஸ் 766 முதன்மை கேமரா (50MP Sony IMX766 primary camera) மற்றும் 32 எம்பி முன் எதிர்கொள்ளும் கேமரா(32MP front-facing camera), பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார்(side-mounted fingerprint sensor) ஆகியவை அடங்கும்.
இத் தொலைபேசி குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 சிப்செட் (Qualcomm Snapdragon 888 chipset) மூலம் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் டிப்ஸ்டரின்(tipster) கூற்றுப்படி, இச் சாதனம்(device) ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான கலர் ஓஎஸ் 12 (ColorOS 12) இல் இயக்கும் என கூறப்படுகிறது.
இந்த ஸ்மார்ட்போனுக்கான வெளியீட்டு தேதியை OPPO இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும், 2022 ஆம் ஆண்டின் முதல் பாதியில் இது வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹானர்(Honor)பிராண்ட் சீனாவின் மூன்றாவது பெரிய ஸ்மார்ட்போன் பிராண்டாக மாறும்..!