இந்த வைரஸ் பரவுகின்ற காலத்தில் தமிழர்கள் மட்டுமல்லாமல் அனைத்து நாட்டினரால் அதிகமாக தேடப்பட்டு பயன்படுத்தப்பட்ட ஒரு பொருளான வேம்பின் மருத்துவ குணங்கள் மற்றும் அதில் அடங்கி இருக்கும் சில அருமையான விடயங்கள் இதோ…
தினசரி பயன்பாட்டில் வேம்பின் மருத்துவம்
வேப்பம் குச்சியால் பல் துலக்கினால் பல்லிலும், ஈரிலும் நாற்றம் போய் சுத்தமாவதோடு பயோரியா எனப்படும் பயங்கர நோயும் அணுகாது.
மாலையிலும் வெறும் வயிற்றில் ஒரு பிடி வேப்பம் கொழுந்தை தினசரி மென்று தின்பவர்களை பாம்பு விஷம் கூட ஒன்றும் செய்யாது என்று பெரியவர்கள் கூறுகிறார்கள்.
வேப்பம் பூவை வாட்டி தலையில் கட்டி வைத்தால் பேன் ஈறு முதலியன நீங்கும். உச்சித் தலையில் வைத்துக் கட்டினால் தலைபாரம் நீங்கும். கூந்தல் செழித்து வளரும். மயிர்க் கால்களில் வழியே கசம்பு நீரையும் பூச்சி புழுக்களையும் அழிக்கும்.
வேப்பம்பூ சாப்பிடுவதால் குடல் சுத்தமாகிறது. அஜீரணம் நீங்கி பசி எடுக்கிறது. வேப்பம் பூவையும் மிளகாயையும் (தூள்) நெய்யில் பொரித்து உப்புடன் பிசிறி சாதத்தில் கலந்து உண்டால் பித்தம் தெளியும்.
வேப்பங் கொழுந்தையும் உப்பையும் வைத்து அரைத்து அந்த விழுதை வெறும் வயிற்றில் விழுங்கினால் வயிற்றிலுள்ள பூச்சிகள் அழிந்துவிடும்.
புண், சொறி ,சிரங்கு இருந்தால் வேப்பிலை கொழுந்தையும் மஞ்சளையும் அரைத்து தடவலாம். அரிசி மற்றும் பருப்பு தானிய வகைகளை போட்டு வைக்கும் பேணியில் காய்ந்த வேப்பிலை குச்சிகள் போட்டு வைத்தால் பூச்சிகள் வராது.
நல்லெண்ணெயில் அல்லது தேங்காய் எண்ணையில் வேப்பம் பூவை போட்டு, முறியக் காய்ச்சி வடிகட்டி தலைக்குத் தடவிக்கொண்டு வந்தால் பொடுகு நீங்கி கூந்தல் நன்கு வளரும்.
ஆக மொத்தத்தில், வேப்ப மரம் வீட்டில் இருந்தாலே நல்லது. இதே போல மருத்துவ குணம் நிறைந்த விளாம்பழம் தொடர்பாக பார்க்க இந்த பக்கத்துக்கு செல்லவும்.