அனைவர்க்கும் பிரியமான Need for Speed: Hot Pursuit மறுவடிவமைப்பு செய்யப்படுகிறது. இந்த மறுவடிவமைப்பு அடுத்த மாதம் வெளிவர உள்ளது.
இது உங்கள் சாதாரண கணனிகள், பிஎஸ் 4, எக்ஸ்பாக்ஸ் ஒன் மற்றும் நிண்டெண்டோ சுவிட்ச் ஆகியவற்றில் பயன்படுத்தக் கூடியவாறு வருகிறது.
Need for Speed: Hot Pursuit வெளியீடு
Need for Speed: Hot Pursuit மாற்றியமைக்கப்பட்ட வடிவம் கணினி, பிளேஸ்டேஷன் 4 மற்றும் எக்ஸ்பாக்ஸ் ஒன் ஆகியவற்றில் நவம்பர் 6 ஆம் தேதி மற்றும் நிண்டெண்டோ சுவிட்சில் நவம்பர் 13 ஆம் தேதி வெளியிடப்படவுள்ளது.
இந்த போலீசார் எதிர் ரேஸ் ஓட்டுநர் விளையாட்டின் அசல் வடிவம் 2010 இல் வெளிவந்தது. எனவே நீங்கள் கவனிக்க வேண்டிய மிகத் தெளிவான விஷயம், தற்போதைய மேம்படுத்தல் தற்கால வன்பொருட்களான ரம் , கிராபிக்ஸ் கார்ட் போன்றவற்றை முழுமையாக பயன்படுத்தக் கூடிய காட்சி மேம்படுத்தல் ஆகும். இவ்விளையாட்டு குறுக்கு-தள பல்நபர் விளையாட்டை ஆதரிக்கும், அதாவது உங்கள் நண்பர்கள் எந்த அமைப்பில் (கணினி/எக்ஸ்பாக்ஸ்/நின்டென்டோ) இருந்தாலும் நீங்கள் அவர்களுடன் விளையாடலாம்.
F1 : உலகின் அதிவேக தரைப்பந்தயத்தின் மிக மோசமான விபத்துக்கள்
மீளவடிவமைக்கப்பட்ட Need for Speed: Hot Pursuit அசல் விளையாட்டுக்காக வெளியிடப்பட்ட அனைத்து டி.எல்.சி களையும் கொண்டுள்ளது. புதுப்பிக்கப்பட்ட புகைப்படமெடுக்கும் முறை (photo mode) மற்றும் புத்தம் புதிய போட்டி சாதனைகளுடன்(Achievement) வருகிறது. ஓடோலொக் (Autolog), முதலாவது வெளியீட்டில் உங்கள் நண்பர்களுடன் குழு சேர்ந்து விளையாட உங்களை அனுமதித்த அந்த அதே தொழில்நுட்பம், கவுண்டி தெருவின் (போட்டியில் இருக்கும் கற்பனை தெரு ) மீதான உங்கள் உரிமை நிலை நாட்டல் போட்டிகளை கொண்டு நடத்த உதவும் வகையில் மீண்டும் வருகிறது.
நீங்கள் எந்த தளத்தில் விளையாடுவீர்கள் என்பதைப் பொறுத்து, வெவ்வேறு பிரேம் விகிதங்களிலும் 4K யிலும் கூட நீங்கள் இவ்விளையாட்டை அனுபவிக்க முடியும். பிளேஸ்டேஷன் 4, எக்ஸ்பாக்ஸ் ஒன் மற்றும் நிண்டெண்டோ சுவிட்சில், விளையாட்டு 1080p இல் 30fps இல் இயங்குகிறது. பிளேஸ்டேஷன் 4 ப்ரோ மற்றும் எக்ஸ்பாக்ஸ் ஒன் எக்ஸ் பிளேயர்கள் 1080p 60fps செயல்திறன் பயன்முறை மற்றும் 4K 30fps “நம்பக முறை”க்கு இடையில்உங்களை விளையாட அனுமதிக்கின்றன. கணினியில், நீங்கள் அதிகபட்சமாக 60fps வேகத்தில் 4K இல் விளையாடலாம். மல்டிபிளேயரில் சமமாக விளையாடும் ஒரு ஆடுகளத்தை உருவாக்க அந்த பிரேம் ரேட் கேப் உள்ளது என விளையாட்டின் டெவலப்பர்கள் இருவர் கடந்த வாரம் ஒரு பத்திரிகை சந்திப்பில் தெரிவித்தனர்.
எமது பக்கத்தின் கேமிங் பக்கத்தைப் பார்வையிட கீழே அழுத்தவும்
முகப்பு பட உதவி : CDN