தமிழ் மொழியில் லட்சோப லட்சம் பாடல்கள் உள்ளன. அவற்றில் அனைவருக்கும் பிடிக்கக் கூடிய வகையில் முற்று முழுதாக சிறந்த வகையில் அமைக்கப்பட்டுள்ள பாடல்கள் என்று ஏராளமானவை உள்ளன. ஆனால் 80களின் தத்துவத்தாலும் 2000களின் கடும் இசையாலும் மறக்கப்பட்ட 90களின் மற்றும் ஆரம்ப 2000களின் சிறந்த தமிழ்ப் பாடல்களை வாராந்தம் உங்களிடம் கொண்டு வந்து சேர்ப்பிக்கும் தொகுதியாக இந்த மறந்த கவித்துவமிக்க தமிழ்ப் பாடல்கள் இருக்கிறது. இந்த வாரத்துக்கான பாடல் மூங்கில் காடுகளே;
ஒவ்வொரு பாடலுக்கும் உருவாக்கப்பட்ட சிறந்த கவர்களை இந்தக் கட்டுரைகளோடு வழங்குகிறோம். வாசித்து கேட்டு மகிழுங்கள்.
மூங்கில் காடுகளே
பாடகர்கள் : திப்பு ஹரிஹரன்
இசையமைப்பாளர் : ஹரிஸ் ஜெயராஜ்
திரைப்படம் : சாமுராய்
வரிகள் : வைரமுத்து
ஆண்டு : 2002
மூங்கில் காடுகளே
வண்டு முனகும் பாடல்களே
தூர சிகரங்களில் தண்ணீர்
துவைக்கும் அருவிகளே
மூங்கில் காடுகளே
வண்டு முனகும் பாடல்களே
தூர சிகரங்களில் தண்ணீர்
துவைக்கும் அருவிகளே
இயற்கை தாயின்
மடியில் பிறந்து இப்படி
வாழ இதயம் தொலைந்து
சலித்து போனேன் மனிதனாய்
இருந்து பறக்க வேண்டும்
பறவையாய் திரிந்து திரிந்து
பறந்து பறந்து
மூங்கில் காடுகளே
வண்டு முனகும் பாடல்களே
தூர சிகரங்களில் தண்ணீர்
துவைக்கும் அருவிகளே
சேற்று தண்ணீரில்
மலரும் சிவப்பு தாமரையில்
சேறும் மணப்பதில்லை பூவின்
ஜீவன் மணக்கிறது
வேரை அறுத்தாலும்
மரங்கள் வெறுப்பை உமிழ்வதில்லை
அறுத்த நதியின் மேல் மரங்கள்
ஆனந்த பூசொறியும்
தாமரை பூவாய்
மாறேனோ ஜென்ம
சாபல் எங்கே காணேனோ
மரமாய் நானும் மாறேனோ
என் மனித பிறவியில்
உய்யேனோ ஓ ஓ
வெயிலோ முயலோ
பருகும் வண்ணம் வெள்ளை
பனி துளி ஆவேனோ
மூங்கில் காடுகளே
வண்டு முனகும் பாடல்களே
ஓஹோ தூர சிகரங்களில் தண்ணீர்
துவைக்கும் அருவிகளே
உப்பு கடலோடு
மேகம் உற்பத்தி ஆனாலும்
உப்பு தண்ணீரை மேகம்
ஒரு போதும் சிந்தாது
மலையில்
விழுந்தாலும் சூரியன்
மறித்து போவதில்லை
நிலவுக்கு ஒளியூட்டி
தன்னை நீட்டித்து
கொள்கிறதே
மேகமாய் நானும்
மாறேனோ அதன் மேன்மை
குணங்கள் காண்பேனோ
சூரியன் போலவே மாறேனோ
என் ஜோதியில் உலகை
ஆளேனோ
ஜனனம் மரணம்
அறியா வண்ணம் நானும்
மழை துளி ஆவேனோ
மூங்கில் காடுகளே
வண்டு முனகும் பாடல்களே
வண்டு முனகும் பாடல்களே
தூர சிகரங்களில் தண்ணீர்
துவைக்கும் அருவிகளே
இயற்கை தாயின்
மடியில் பிறந்து இப்படி
வாழ இதயம் தொலைந்து
சலித்து போனேன் மனிதனாய்
இருந்து பறக்க வேண்டும்
பறவையாய் திரிந்து திரிந்து
பறந்து பறந்து
இதைப் பாடலின் பெயரைக் கேட்டதும் மறக்கப்பட்ட இன்னொரு பாடல் நியாபகம் வருகிறதா ? மறக்காமல் கருத்துப் பெட்டியில் சொல்லுங்கள். அடுத்தடுத்த வாரங்களில் அப்பாடலை உங்கள் பெயரோடு நாங்கள் உலகுக்கு நினைவூட்டுவோம்.
இது போன்ற தொடர்ச்சியான புத்துணர்வூட்டும் இசைக் கட்டுரைகளுக்கு மற்றும் புத்தம்புது சினிமா செய்திகளுக்கு சினிமா செய்திகள் பக்கத்தை பார்வையிடுங்கள்.
4000+ சொந்தங்களுடன் எமது பேஸ்புக் பக்கத்தில் இணைந்து தவறாமல் செய்திகளை பெறுங்கள்