பணத்தை உங்களிடம் தக்க வைத்துக் கொள்ள இதை செய்து பாருங்கள்
இணைய வாசகர்களுக்கு இனிய வணக்கங்கள்!! பணம் எப்பொழுதும் உங்களிடம் தங்கி இருக்கணுமா சிலர் பாக்கெட்டில் பணம் வைத்து கொள்ளுவார்கள் ஒரு சிலர் மட்டும் பணப்பை (Wallet ) வைத்துக்கொள்ளுவர்கள்.ஒரு சிலருக்கு பணம் கையில் வந்ததும் எப்படியாவது செலவழிந்து விடும்.
உங்கள் பாக்கெட்டில் அல்லது பணபையில் பணம் தங்கி இருக்க வேண்டுமா இதை செய்து பாருங்கள்
நம்முடைய பாக்கெட்டில் அல்லது பண பையில் ஒரு ரூபாய் நாணயம், உங்களால் முடிந்த அளவு ஒரு பத்து ரூபாய் சரி உங்கள் பாக்கெட்டில் அல்லது பண பையில் இருக்க வேண்டும் அதை மட்டும் எக் காரணம் கொண்டும் செலவழிக்கவே கூடாது.
என்னதான் கஷ்டம் வந்தாலும் அதை மட்டும் எடுத்து செலவழிக்கவே கூடாது.நாம் வைத்திருக்கும் பணப்பை எங்களுக்கு பிடித்த அம்மா, அப்பா, மனைவி, நண்பர்கள் என பிரியமானவர்கள் யாராவது வாங்கிக் கொடுத்தால் இன்னும் பணம் நம் பணப்பையில் வந்து சேரும்.
பாக்கெட்டில் அல்லது பணப்பையில் இருக்கும் நோட்டுக்கள் கசங்காமல் பார்த்துக் கொள்வது மிகவும் அவசியம்,பண நோட்டுகள் அல்லது நாணயம் கீழே விழுந்தால் அதை எடுத்த உடன் கும்பிட்டு விட்டு மறுபடியும் பாக்கெட்டில் வைத்துக் கொள்ளவும்.
ஒரு பட்டுத் துணி எடுத்து அதை மஞ்சள் தண்ணீரில் கழுவி விட்டு பின் ஒரு பேப்பரில் ஏலக்காய் பச்சைக் கற்பூரம் போட்டு அதை பணப்பை அல்லது பாக்கெட்டில் வைத்தால் பணம் வீண் ஆகாமல் இருக்கும்.நாங்கள் கடன் வாங்குவதையும் தடுக்கும்.யாரிடம் சரி கடன் வாங்க எண்ணம் வராமல் செய்யும் வங்கியில் கடன் இருந்தாலும் அதை மீட்டு தரும்.
- முடியுமானால் செவ்வாய் கிழமை தோறும் லக்ஷ்மி அம்பாளை கும்பிட்டு வர செல்வம் தானாக வந்து சேரும்,
- மற்றும் வீட்டில் உள்ள பூஜை அறையில் ஒரு துணியில் பச்சை கற்பூரம் கட்டி வைத்தால் மேலும் நல்லது.
- செவ்வாய் வெள்ளிக் கிழமைகளில் பணம் கொடுக்கல் வாங்கல்களை தவிர்க்கவும்.
- அன்றைய நாள் முடி வெட்டுதல் சவரம் செய்தல் நகம் வெட்டுதல் ஆகியவற்றை தவிர்க்கவும்.
- விளக்கேற்றியபின் வீடு பெருக்கக் கூடாது.
.