உங்கள் வீட்டை முழுமையாக சுத்தம் செய்யும்போது நீங்கள் ஏற்கனவே வைத்திருக்கும் நிறைய சாதாரண விஷயங்கள் மிகவும் உதவியாக இருக்கும் – அவற்றைப் பயன்படுத்துவதற்கான சரியான வழிகளை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.இந்தக் கட்டுரையில் நாங்கள் ஒரு சாதாரண எலுமிச்சைக்கு 16 அசாதாரண பயன்பாடுகளின் பட்டியலை ஒன்றாக இணைத்துள்ளோம். இந்த புளிப்பு பழத்தை ஒரு புதிய கோணத்தில் பார்க்க அவை உங்களுக்கு உதவும்!
உங்களையும் வீட்டையும் புத்துணர்வாக்கும் எலுமிச்சை தந்திரங்கள்
16. அனைத்து நோக்கங்களையும் நிறைவேற்றும் துப்புரவாளரை உருவாக்குதல்
ஒரு எலுமிச்சம் பழத்தை தோலுரித்து, அதன் மீது 5 திரவ அவுன்ஸ் (150 ml) வினிகரை ஊற்றி ஒரு இரவு முழுதும் விட்டு விடுங்கள். காலையில், 5 திரவ அவுன்ஸ் (150 ml) தண்ணீர் சேர்க்கவும். அவ்வளவுதான்! கலவையை ஒரு வெற்று தெளிப்பு பாட்டில் ஊற்றி, உங்கள் வீடு முழுவதும் இயற்கையான துப்புரவக்கல் தீர்வாக பயன்படுத்தவும்.
15. உங்கள் வெட்டு பலகையை சுத்தம் செய்தல்
உங்கள் வெட்டு பலகையை சுத்தமாக வைத்துக் கொள்ளவும் நீண்ட காலம் பாதுகாக்கவும், பாதி எலுமிச்சம் பழத்தை ஒரு ஸ்போஞ் போலவும், உப்பினை ஒரு சுத்தமாக்கி போலவும் பயன்படுத்தி தேய்க்கவும். இது முடிந்ததும், 10-15 நிமிடங்களுக்கு பலகையை விட்டு, பின்னர் இந்த நடைமுறையை இன்னும் ஒரு முறை செய்யவும்.
14. பிரகாசமான வெள்ளை நிறத்தைப் பெற நல்ல தீர்வு
உங்கள் வெள்ளை ஆடைகளின் சலவை வெண்மையாக இருக்க, எலுமிச்சை சாறு மற்றும் பேக்கிங் சோடா கலவையில் கழுவுவதற்கு முன் குறைந்தது அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
13. நகப் பரமாரிப்பு
உங்கள் நகங்களை வலுவாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க புத்துணர்ச்சியூட்டும் குளியல் ஒன்றை தயார் செய்யுங்கள். செய்முறை மிகவும் எளிதானது: வெதுவெதுப்பான நீரில் சில துளிகள் எலுமிச்சை சாறு சேர்க்கவும்.
12. குறும் புள்ளிகளை அகற்றுவது
தேவையற்ற குறும் புள்ளிகள் அல்லது வயது புள்ளிகளை காணமல் ஆக்கி உங்கள் முகத்தை ஒளிரச் செய்ய எலுமிச்சை உதவும். ஒரு எலுமிச்சம் பழத்தை நறுக்கி, உங்கள் முகத்தில் மெதுவாக தேய்க்கவும்.
11. செரிமானத்தை மேம்படுத்துதல்
வெறும் வயிற்றில் காலையில் தேனீருடன் ஒரு கிளாஸ் சூடான எலுமிச்சம் பழ நீரைக் குடிப்பது செரிமானத்தை மேம்படுத்தவும், உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவும்.
10. ஒரு உணவு மேசையை சரியாக அமைத்தல்
கைகளில் நிறங்கள் ஒட்டிக்கொள்ளக் கூடிய மசாலா போன்ற உணவுகளைக் கொண்ட ஒரு விருந்தை தயார் செய்யும் போது, விரல்களைக் கழுவுவதற்கு எலுமிச்சை நீரில் நிரப்பப்பட்ட சிறிய விரல் கிண்ணங்களை வழங்குவது நல்லது.
9. இலத்திரனியல் உபகரணங்களில் புத்துணர்ச்சியைப் பெற்றுக்கொள்தல்
எலுமிச்சம் பழ சாற்றில் நனைத்த ஸ்போஞ் மூலம் உங்கள் குளிர்சாதன பெட்டியை துடைக்க முயற்சி செய்யுங்கள், அங்கிருக்கும் விரும்பத்தகாத வாசனை மறைந்தே போய்விடும். எலுமிச்சையைப் பயன்படுத்தி, நீங்கள் உங்கள் வீட்டில் சொந்த ஏர் ஃப்ரெஷனரையும் செய்யலாம். டிஷ்வாஷர் காலியாக இருக்கும்போது எலுமிச்சம் பழ சாற்றைச் சேர்த்து, அதை ஒரு முறை முழு சுழற்சியை இயக்க விடுங்கள் அல்லது ஈரப்பதமூட்டியில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்துப் பாருங்கள். இந்த எல்லாமே சேர்ந்து நிச்சயமாக உங்கள் வீட்டை சிறப்பாக மாற்றும்.
8. வளரும் முளைகள்
முளைகளை வளர்ப்பதற்கும் எலுமிச்சம் பழத்தை பயன்படுத்தலாம். சாற்றை கசக்கி வெளியேற்றிவிட்டு, விதைகளை எலுமிச்சை பாதியில் வைக்கவும். பின்னர் ஒரு எலுமிச்சை பாதியுடனேயே நாற்றுகளை தரையில்/ சாடியில் நடவும்.
7. காலணி துர்வாசனையிலிருந்து விடுபடுவது
நாற்றங்களை உறிஞ்சுவதற்கு ஒரு இரவு முழுவதும் புதிய எலுமிச்சம் பழ தோல்களை உங்கள் காலணிகளில் விடவும்.
6. மெழுகுவர்த்தி தாங்கிகள்
எலுமிச்சை, தேசிக்காய் அல்லது ஆரஞ்சு ஆகியவற்றின் பாதிகள் உங்கள் சொந்த தனித்துவமான மெழுகுவர்த்தி தாங்கிகளை உருவாக்குவதற்கான சிறந்த, அழகிய பொருட்கள். நீங்கள் உள்ளே உள்ள சதை மற்றும் சாற்றுப் பகுதிகளை அகற்றி, உருகிய மெழுகுடன் அந்த இடங்களை நிரப்ப வேண்டும். மெழுகுவர்த்தி திரி பற்றி மறந்துவிடாதீர்கள்! உங்கள் மெழுகுவர்த்தி தாங்கியின் அடிப்பகுதியில் பசையிட்டு திரியை ஒட்டுங்கள்.
5. உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்துதல்
எலுமிச்சம் பழச்சாறு மற்றும் பேக்கிங் சோடாவின் கலவையானது காரத்தன்மை, செரிமான மற்றும் நீக்குதல் பண்புகளைக் கொண்டுள்ளது. இது கெட்ட கொழுப்பின் அளவை ஒழுங்குபடுத்துகிறது, கல்லீரலை சுத்திகரிக்கிறது, மேலும் வைட்டமின் சி ஒரு நல்ல அழகை நமக்கு அளிக்கிறது. ஒரு டீஸ்பூன் பேக்கிங் சோடா மற்றும் அரை எலுமிச்சம் பழச்சாறு ஆகியவற்றை ஒரு கிளாஸ் சுத்தமான குடிநீரில் சேர்த்து காலையில் குடிக்கவும். தொடர்ச்சியாக இரண்டு வாரங்கள் இந்த கலவையை எடுத்துக்கொள்ளுங்கள், பின்னர் இன்னும் இரண்டு நாட்களுக்கு நிறுத்தவும், பின் மீண்டும் தொடரவும்.
4. துருப்பிடிக்காத எஃகு பகுதிகளை சுத்தம்
எலுமிச்சம் பழத்தோல்கள் மற்றும் பேக்கிங் சோடா ஆகியவற்றைக் கலந்து உபயோகிப்பது உங்கள் எஃகு பொருட்களை பிரகாசிக்க வைக்கும். முக்கியமாக உங்களுடைய அழுக்கு மற்றும் துர்நாற்றம் பிடித்த சலவை பேசின்களை சுத்தம் செய்ய இது சிறந்தது.
3. உணவுக் கறைகளை நீக்குதல்
நீங்கள் புதிய சாறுமிக்க பழ உணவுகளைத் தயாரிக்கும்போது, உங்கள் கைகளை கறைபடுத்துவீர்கள். எலுமிச்சம் பழச்சாறு உங்கள் சருமத்திலிருந்து நிறத்தை அகற்ற உதவும். உங்கள் துணிகளில் இருந்து உணவுக் கறைகளை அகற்றுவதும் எளிதானது. முதலில், துணியை குளிர்ந்த நீரில் கழுவவும், பின்னர் உங்கள் துணிகளை எலுமிச்சை சாற்றில் சில நிமிடங்கள் ஊற வைக்கவும்.
2. பூச்சிகளை விரட்டுதல்
எறும்புகளை உங்கள் வீட்டிலிருந்து வெளியே விரட்ட வேண்டுமா ?, ஜன்னல் சட்டங்கள் மற்றும் வீட்டு வாசல்களில் சிறிது எலுமிச்சை சாற்றை ஊற்றவும். மேலும் கொசுக்களில் இருந்து விடுபட, கிராம்புகளை எலுமிச்சை பாதியில் குத்தி வைக்கவும்..
1. கைக்கீழ் பகுதிகளை (அக்குள்) வெளுத்தல்
எலுமிச்சம் பழத்தை விட அழுக்கான அக்குளை வெளுக்க சிறந்தது எதுவும் இல்லை. இதன் அமிலத்தன்மை உங்கள் சருமத்தை ஒளிரச் செய்யவும், இறந்த சரும கலங்களை வெளியேற்றவும் உதவும். ஒவ்வொரு நாளும் உங்கள் முழுகல் அல்லது குளியலுக்கு முன், எலுமிச்சம் பழத்தின் சாறு அடர்த்தியான துண்டுடன் உங்கள் அடிக்கையை தேய்க்கவும். உங்கள் குளியல் முடிந்தபின் கொஞ்சம் மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்த மறக்காதீர்கள், ஏனெனில் எலுமிச்சை உங்கள் சருமத்தை உலர வைக்கும். 7 நாட்களுக்குப் பிறகு நீங்கள் நல்ல முடிவைக் காண்பீர்கள்.
இது போன்ற கட்டுரைகள் உங்களுக்கு உதவியாக இருக்கிறதா ? மேலும் சிலவற்றை வாசிக்க பெண்ணியம் பகுதிக்குச் செல்லுங்கள்.
நன்றி : பிரைட் சைட்