இணைய வாசகர்களுக்கு இனிய வணக்கங்கள்!! இணையத்தில் படித்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றோம். தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்
சில வியப்பூட்டும் தகவல்கள்..!!
வாழைப்பழத்தை மட்டும் பிரசாதமாக வைப்பதன் காரணம் என்னனு தெரியுமா?
கடவுளிடம் மறுபிறவி எடுக்காமல் மோட்சம் அடைய வேண்டும் என்று என்ணற்ற மக்கள் வேண்டி கொள்வார்கள். அதை கடவுளுக்கு உணர்த்தும் விதமாகத்தான் வாழைப்பழத்தை வைக்கிறார்கள். வாழைப்பழத்தின் கொட்டைகளை எடுத்து மீண்டும் முளைக்க வைக்க முடியாது. அதன் கட்டைகளை கொண்டே நடவு செய்து வளர்க்க முடியும். ஆனால் மற்ற மரங்கள் அல்லது செடிகளின் விதைகளை கொண்டு மீண்டும் மீண்டும் உருவாக்கலாம். அதற்காகத்தான் வாழைப்பழத்தை மக்கள் கடவுளுக்கு வைத்து படைப்பதற்கான காரணம்.
கோவில் சிலைகளுக்கு அபிஷேகம் எதற்காக செய்கிறார்கள்?
கோவில்களில் எண்ணற்ற சிலைகள் உள்ளது. ஏதேனும் நல்லது நடக்க வேண்டும் என்று நினைத்து மக்கள் சிலைக்கு பூஜை செய்வார்கள். பால், எண்ணெய், மஞ்சள் போன்றவற்றை கொண்டு பூஜை செய்வார்கள்.
சிலைகள் அனைத்தும் கற்களால் ஆனவை. எனவே, அவை வறண்டு போனால் வெடிப்பு ஏற்பட்டு உடைந்து விடும். அவற்றை தவிர்க்க தண்ணீர், பால் ஆகியவற்றால் பூஜை செய்வார்கள். அக்காலத்தில் சிலை செய்யும் போது கரிதுண்டுகள், வெள்ளி, தங்கம் போன்றவற்றை கலந்து செய்தார்கள். அவை மருத்துவ குணம் நிறைந்ததால், மஞ்சள், பால் போன்ற மருத்துவ குணங்கள் நிறைந்த பொருட்களால் பூஜை செய்து மக்களுக்கு பிரசாதமாக வழங்கி வந்தார்கள்.
செவ்வாய்க்கிழமை ஏன் முடி வெட்டக்கூடாது என்று தெரியுமா?
பண்டைய காலத்தில் நமது முன்னோர்கள் அதிகம் விவசாயம் செய்து வந்தார்கள். நாம் தற்போது எப்படி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளாக எடுத்துக் கொள்கிறோமோ, அப்போது அவர்கள் விடுமுறையாக திங்கட்கிழமையை எடுத்து கொண்டனர். அந்த நாளில் அனைவரும் முடிவெட்டிக் கொள்வார்கள்.
அன்று முழு கூட்டமாக இருப்பதால், செவ்வாய்க்கிழமை அன்று முடிவெட்டுபவர்கள் ஓய்வெடுத்து கொள்வார்கள். அதனால் செவ்வாய்க்கிழமை முடிவெட்டமாட்டார்கள். மற்றும் செவ்வாய்க்கிழமை வீட்டில் லட்சுமி கடாட்சம் நிறைந்த நாள் செவ்வாய்க்கிழமை முடி வெட்டினால் வீட்டில் தரித்திரம் பிடிக்கும் என்று நம் முன்னோர்கள் சொல்வதுண்டு.
சிலருக்கு உணவு உட்கொண்டதும் தூக்கம் வருகின்றது எதனால்?
குருதி, உடலின் எல்லாப் பகுதிகளுக்கும் ஒரு குறிப்பிட்ட விகிதத்திலேயே சென்று கொண்டிருக்கிறது. ஆனால் இந்த விகிதமானது மாறுபடக்கூடியது. நாம் உணவு உட்கொண்டதும் இரைப்பையின் தொழிற்பாடு துரிதமடைவதால், அந்தப் பகுதிக்கு குருதி அதிகம் தேவைப்படுகின்றது. இதனால் மூளைக்கு செல்லும் குருதியின் அளவு குறைவதால், மூளையின் செயற்பாட்டுத் திறனும் குறைவடையும்.
இதுவே உணவு உட்கொண்டதும் ஒரு மந்த நிலை ஏற்படுகின்றது. உணவு உட்கொண்டதும் தூக்கம் வருவதற்கும் இதுவே காரணமாகும்.