கனவுகளும் பலன்களும்!!
திருமணம் நடைபெறுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?
திருமணம் நடைபெறுவது போல் கனவு கண்டால் சுப விரயம் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.
சாமி வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்?
இந்த மாதிரி கனவு கண்டால் எதிர்கால சிந்தனைகள் மற்றும் முயற்சிகள் மேம்படும் என்பதைக் குறிக்கின்றது.
அழகிய பெண் கனவில் வந்தால் என்ன பலன்?
அழகிய பெண் கனவில் வந்தால் விருப்பங்கள் நிறைவேறும் என்பதைக் குறிக்கின்றது.
நாய்களை கனவில் கண்டால் என்ன பலன்?
நாய்களை கனவில் கண்டால் சுபிட்சம் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.
மிளகாயை கனவில் கண்டால் என்ன பலன்?
மிளகாயை கனவில் கண்டால் அபிவிருத்திக்கான சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.
நாய் இறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?
நாய் இறப்பது போல் கனவு கண்டால் நெருக்கமானவர்களின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.
திருட்டுப்போவது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் முக்கிய முடிவுகளில் பெரியோர்களின் ஆலோசனைகளை கேட்டு முடிவு செய்வது நன்மை பயக்கும் என்பதைக் குறிக்கின்றது.
அம்மனுக்கு அபிஷேகம் செய்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?
அம்மனுக்கு அபிஷேகம் செய்வது போல் கனவு கண்டால் காரியசித்தி உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.
மலை மீதுள்ள முருகனை கனவில் கண்டால் என்ன பலன்?
இந்த மாதிரி கனவு கண்டால் தடைகள் அகலும் என்பதைக் குறிக்கின்றது.
பசு கன்று போடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?
இந்த மாதிரி கனவு கண்டால் செய்யும் முயற்சிகளால் வளர்ச்சி உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.
வீடு கட்டுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?
வீடு கட்டுவது போல் கனவு கண்டால் புதிய வாய்ப்புகளால் முன்னேற்றமான
சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.
சிலிண்டர் வெடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?
சிலிண்டர் வெடிப்பது போல் கனவு கண்டால் வாழ்க்கையில் மாற்றமான
சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.
தீப்பிடித்தது போல் கனவு கண்டால் என்ன பலன்?இந்த மாதிரி கனவு கண்டால் வாழ்க்கையில் எதிர்பாராத சில செயல்களின் மூலம் மாற்றமான சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.
வீட்டை காலி செய்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?
வீட்டை காலி செய்வது போல் கனவு கண்டால் கிடைக்கும் வாய்ப்புகளில்
கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கிறது.
குரங்கு இறந்தது போல் கனவு கண்டால் என்ன பலன்?
இந்த மாதிரி கனவு கண்டால் நெருங்கிய உறவினர்களிடம் மற்றும் நண்பர்களிடம்
ஏற்பட்ட மனக்கசப்புகள் நீங்கி நன்மைகள் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.
தேன் எடுப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? தேன் எடுப்பது போல் கனவு கண்டால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.
ஒரு பெண்ணுக்கு பேய் பிடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?
இந்த மாதிரி கனவு கண்டால் மனதில் இருக்கும் ரகசியங்கள் வெளிப்படும்
என்பதைக் குறிக்கிறது.
பாம்பு பால் அருந்துவதை கனவில் கண்டால் என்ன பலன்?
பாம்பு பால் அருந்துவதை கனவில் கண்டால் திட்டமிட்ட காரியத்தில்
தடை, தாமதங்கள் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.
ஆற்றில் மீன் பிடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?
இந்த மாதிரி கனவு கண்டால் மனதில் இருக்கும் ஆசைகள் யாவும் நிறைவேறும்
என்பதைக் குறிக்கின்றது.
அண்ணன் இறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?
இந்த மாதிரி கனவு கண்டால் உடல் ஆரோக்கியம் சார்ந்த குறைபாடுகள் தீரும்
என்பதைக் குறிக்கின்றது.
வீட்டிற்குள் பாம்பு வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் மறைந்திருந்த சில விஷயங்கள் வெளிப்படும்
என்பதைக் குறிக்கின்றது.
அடிக்கடி மலம் கழிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?
இந்த மாதிரி கனவு கண்டால் பொருள் லாபம் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.
ஏசுவை கனவில் கண்டால் என்ன பலன்? ஏசுவை கனவில் கண்டால் மனதில்
அமைதி உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.
நெருப்பை கனவில் கண்டால் என்ன பலன்?
நெருப்பை கனவில் காண்பது பாக்கியம்உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.
வாகனம் ஓட்டுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?
வாகனம் ஓட்டுவது போல் கனவு கண்டால் செய்யும் தொழிலில் மேன்மையான
சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.
கோவிலில் இருந்து அர்ச்சனை பூ கொண்டு வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்?
கோவிலில் இருந்து அர்ச்சனை பூ கொண்டு வருவது போல் கண்டால் மனதில் நினைத்த காரியம் ஈடேறும் என்பதைக் குறிக்கின்றது.
யானையை கனவில் கண்டால் என்ன பலன்?
யானையை கனவில் கண்டால் எதிர்பார்த்த இடமாற்றம் சாதகமாகும் என்பதைக்
குறிக்கிறது.
பன்றி துரத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்?
உத்தியோகஸ்தர்கள் பணியில் உள்ள உயர் அதிகாரிகளிடம் நிதானமாக நடந்துக்கொள்ள வேண்டும் என்பதைக் குறிக்கிறது.
விறகு வெட்டுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?
விறகு வெட்டுவது போல் கனவு கண்டால் அனுபவமில்லாத புதிய துறையில் ஈடுபட்டு மனவருத்தங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் ஏற்படலாம் என்பதைக் குறிக்கிறது.
தங்கையின் திருமணம் நிற்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?
தங்கையின் திருமணம் நிற்பது போல் கனவு கண்டால் நெருக்கடியான சூழல்
குறையும் என்பதைக் குறிக்கிறது.
நமக்கு நாமே தீ வைத்துக்கொள்வது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் பழக்க வழக்கங்களில் மாற்றங்கள் உண்டாகும்
என்பதைக் குறிக்கின்றது.
காளையை கனவில் கண்டால் என்ன பலன்? காளையை கனவில் கண்டால் புதிய
முதலீடுகளில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.
நீங்கள் கருவுற்று இருப்பதாக கனவு கண்டால் என்ன பலன்?
நீங்கள் கருவுற்று இருப்பதாக கனவு கண்டால் புதிய வாய்ப்புகள் உண்டாகும்
என்பதைக் குறிக்கின்றது.
மேலும் பல கனவுகளும் பலன்களும் பாகங்களைப் பார்ப்பதற்கு இங்கே செல்லவும்