இணைய வாசகர்களுக்கு இனிய வணக்கங்கள்!!
ஒருவனின் வாழ்க்கை எப்போது இனிய கீதமாக இருக்கும்?
பொருளாதார சுருதி சேரும்போது
நம்மவர் எதற்கு முன் நிற்பார்கள் எதற்கு பின் நிற்பார்கள்?
பஸ் பிடிக்க முந்துவார்கள் பஸ் தள்ள சொன்னால் தயங்குவார்கள்
பந்திக்கு முந்து வார்கள் மண்வெட்டி பிடிக்கச் சொன்னால் தயங்குவார்கள்.
வீரம் இல்லாதவரிடம் செல்வம் இருந்தால்அது வேலி இல்லாத பயிர் போன்றது நொண்டி ஆடியே அதை அழித்துவிடும்
உலகம் எப்படி போய்க்கொண்டிருக்கிறது மனிதன் வாசிக்கும் புத்தகங்களும் சுவாசிக்கும் காற்றும் அசுத்தமாய்போய்க்கொண்டிருக்கிறது.
இதயமில்லாதது எது ?
காதல். மரணப்படுக்கையில் இருக்கும் தாய்க்கு கண்ணீர் சிந்தாமல் காதலிக்கு தலைவலி என்றால் இருதயம் இரத்தம் சிந்துமாயின் அதுவே கீழ்த்தரமானது
காதலிக்கும் மனைவிக்கும் உள்ள வித்தியாசம் என்ன?
காதலி உப்பில்லா பண்டம் இட்டால் அது இரைப்பையில்மனைவி உப்பில்லா பண்டம் இட்டால் அது குப்பையில்
எவன் கொடியவன்?
இரத்தம் சிந்தி வளர்த்த பெற்றோரில் இரத்த பாசமில்லாதவன்இரத்தப்பிடையன் பாம்பிலும் கொடியவன்
வறுமை வந்தால்: இரவு வந்தால் நட்சத்திரம் தெரியும் வறுமை வந்தால் உண்மை நண்பனைத்தெரியும்
எவன் அறிவாளி?
தன் அறிவையும் தன் அறியாமையையும் அறிந்தவனே அறிவாளி
தலைக்கனம் நல்லதா?
தலைக்கனம் உள்ள குண்டூசியால் வெகுதூரம் போக முடியாது தலைக்கணம்இல்லாத தையல் ஊசியால் வெகுதூரம் போக முடியுமல்லவா?
வாழ்வுக்கு மகிழ்ச்சி அளிக்கும் தத்துவங்களை கேள்வி-பதில் முறையில்தந்திருப்பது பயனளிப்பதாக இருக்கும் என நம்புகிறேன்
இப்படிக்கு உங்கள் அன்பின் இணைய நண்பி
-திவ்யா விஸ்வலிங்கம்-