மாரடைப்பு ஏன் வருகிறது? வாருங்கள் உள்ளே போய் பார்க்கலாம்.
இதயத்திற்கு இரத்த ஓட்டத்தை கொடுக்கிற இரத்த குழாய்களை முடியுரு நாடிகள் அல்லது இதய நாடிகள் என அழைப்பர் இவற்றில் ஒன்றில் அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட அவற்றில் அடைப்பு ஏற்படும்போது இதயத்திற்கான குருதி ஓட்டம் ஒட்சிசன் வாயு கிடைப்பது பாதிப்படைகிறது. பொதுவாக ஒரு இரத்தக்கட்டி அடைப்பு நாளிலேயே இது நேர்கிறது இரத்தம் கட்டி என்று அழைப்பதற்கு காரணம் இருதய நாடிகளில் கொழுப்பு படிந்து அதன் விட்டம் முழுவதும் வழுவழுப்புத் தன்மையை இழப்பதும் தான்
அறிகுறிகள்
நெஞ்சில் வலி இருக்கும் பாரம் அழுத்தம் எரிவு போன்ற எதுவும் அலட்சியப்படுத்த கூடியவை அல்ல கழுத்து தோள், மூட்டு, புஜம் இடது மேல்முதுகு மேல்வயிறு போன்ற இடங்களில் வலி ஏற்படலாம் பல தருணங்களில் நெஞ்சுவலியுடன் இணைந்து வரும் மூச்சு எடுப்பதில் சிரமம் இளைப்பு ஏற்பட்டாலும் கவனம் எடுக்க வேண்டும்.
தலைப்பாரம் தலைச்சுற்று மயக்கம் வருதல் போல் இருத்தல் வயிற்றுப் பிரட்டு அல்லது வாந்தி அல்லது இரண்டும் சேர்ந்து வழமைக்கு மாறான வியர்வை மனம் பதற்றம் படுதல் அமைதி இழத்தல் நெஞ்சு படபடப்பு இருதயம் வேகமாகத் துடித்தல் வருமுன் காப்பது நல்லது.
இருதய நோய் வராமல் தடுக்க நீங்கள் பின்வருவனவற்றை செய்யலாம்
- புகைப்பவர் ஆயின் அதை நிறுத்துங்கள்
- ஆரோக்கியமான உணவு முறையைக் கடைப்பிடியுங்கள்
- எண்ணெய் கொழுப்பு கொலஸ்ட்ரால் நிறைந்த உணவு முறையை தவிர்த்து சமச்சீரான உணவுகளை உட்கொள்ளுங்கள்
- தினசரி உடற்பயிற்சி செய்யுங்கள்
- உயர் இரத்த அழுத்தம் நீரிழிவு கொலஸ்டரோல் போன்ற பிரச்சனைகள் இருந்தால் அவற்றைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருங்கள்
- நெருக்கீடுகளைப் புறந்தள்ளி அமைதியான மன நிறைவான வாழ்க்கையை நடத்துங்கள்.
- மருத்துவரை ஒழுங்கான கால முறையில் சந்தித்த ஆரோக்கிய நிலையை அறிந்து கொள்ளுங்கள்
இப்போது நெஞ்சு வலியோடு இருப்பவரை உங்களால் துணிவோடு அணுக முடியும் என நம்புகிறேன்.
image source:https://www.dnaindia.com/jaipur/report-diabetic-people-likely-to-have-heart-disease-at-early-age-doctor-2709956