கூகுள் குட்டப்பா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது..!
கே.எஸ்.ரவிகுமார் தயாரித்து, நடித்துள்ள கூகுள் குட்டப்பா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.
2019-ம் ஆண்டு மலையாளத்தில் ரதீஷ் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளியாகி, பெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘ஆண்ட்ராய்டு குஞ்சப்பன்’
இந்தப் படத்தின் தமிழ் ரீமேக் உரிமையைக் கைப்பற்றி தயாரித்து, நடித்து வருகிறார் கே.எஸ்.ரவிகுமார். ‘கூகுள் குட்டப்பா’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு. இதனை சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.
இந்த படத்தில் கே.எஸ்.ரவிகுமார், தர்ஷன், லாஸ்லியா நாயகியாக நடித்துள்ளார். மேலும், யோகி பாபு, மனோபாலா, மாரியப்பன், ப்ராங்ஸ்டார் ராகுல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்தப் இசையமைப்பாளராக ஜிப்ரான், பாடலாசிரியராக மதன் கார்க்கி ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.
இதுபோன்ற சுவாரசியமான சினிமா செய்திகளுக்கு எமது சினிமா பக்கத்தை நாடவும்.