செய்தி மற்றும் சுகாதார வசதிகளை (Messaging & health) நோக்கமாகக் கொண்ட புதிய ஸ்மார்ட்வாட்சை (smartwatch) அறிமுகப்படுத்த பேஸ்புக் தயாராக இருப்பதாக the information தகவல் வலைத்தளம் தெரிவித்துள்ளது.
2022 ஆம் ஆண்டில் சந்தைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படும் இந்த ஸ்மார்ட்வாட்ச் ஏற்கனவே அடிப்படை வளர்ச்சியை அடைந்துள்ளது என்றும் பேஸ்புக், மெசஞ்சர், வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற பேஸ்புக் சேவைகளை பயன்படுத்தி மெசேஜிங் செய்யக்கூடியதாகவும், ஹெல்த் மற்றும் ஃபிட்னஸ் ( Health and fitness features)அடிப்படை அம்சங்களாக பயன்படுத்தி வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.
பேஸ்புக் ஏற்கனவே தங்கள் வன்பொருள் சாதனங்களில் (Hardware devices) இயங்குவதற்காக தங்கள் சொந்த இயக்க முறைமையை (Operating system) உருவாக்கி வருவதாக வதந்தி உள்ளது,எனவே இந்த ஸ்மார்ட்வாட்ச் கூகிள் வேர் ஓஎஸ் ( Google Wear OS) மூலமாகவோ அல்லது பேஸ்புக் உருவாக்கிய ஓஎஸ் (Operating system) வழியாகவோ இயக்கப்படும் என்ற அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இதுவரை தெரிவிக்கப்படவில்லை.
இருப்பினும், பயனர்களின் தரவைப் பாதுகாப்பதில் ஏற்கனவே சர்ச்சைக்குள்ளாகியுள்ள பேஸ்புக் நிறுவனத்தின் இந்த ஸ்மார்ட்வாட்ச் எந்த வகையான அங்கீகாரத்தைப் பெறுகிறது என்பது குறித்து கருத்து பரவலாக பலரிடேயே பேசப்பட்டு வருகிறது. குறிப்பாக, விளம்பர நிறுவனங்களுக்கு பேஸ்புக் பயனர் உடல்நலம் மற்றும் ஃபிட்னஸ் ( (health and fitness) தொடர்பான தகவல்களை மூன்றாம் தரப்பு நிறுவனங்களுக்கு அனுப்பக்கூடும் என்ற சந்தேகம் ஏற்கனவே உருவாகியுள்ளது.
விலை நிர்ணயம் அல்லது பிற விவரக்குறிப்புகள் (Specs, materials) போன்றவற்றின் தகவல்கள் இதுவரை எந்தவொரு செய்தியும் வெளியாகவில்லை என்பதுடன், மேலும் ஆப்பிள் வாட்ச் தொடர் 6 மற்றும் வாட்ச் எஸ்இ (Apple Watch series 6 & Watch SE) ஆகியவற்றை விட குறைந்த விலையில் பேஸ்புக் அதை வெளியிட முயற்சிக்கும் என்றும் பலர் ஊகிக்கின்றனர்.
இது போல் மேலும் பல சுவாரஸ்யமான தகவல்களை அறிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்..