என்ன ஆர்வம் Elon Musk க்கு ?
மனித சமூகத்தின் நிலைத்திருப்புக்கு மூலாதார அபாயத்தை ஏற்படுத்தும்
செயற்கை நுண்ணறிவின் அளவில்லாத இயலுமைகள் தொடர்பாக வல்லுநர்கள் எப்பொழுதுமே எச்சரித்துள்ளனர். Elon Musk தனது ட்விட்டர் பக்கத்தில், மேம்படுத்தப்பட்ட செயற்கை நுண்ணறிவை நிர்மாணித்துக்கொண்டிருக்கும் டெஸ்லா உட்பட அனைத்து நிறுவனங்களும், தம்மை சீர்ப்படுத்திக்கொள்ள வேண்டும்.” என தெரிவித்துள்ளார் Musk னுடைய டுவீட்டானது, அவரால் உப-நிறுவுகை செய்யப்பட்ட OpenAI எனும் நிறுவனத்தின், இரகசியத்தன்மையும் , பண நோக்கம் கொண்டதும், செயற்கை நுண்ணறிவின் ஆபத்துக்கள் பற்றிக் கவலைப்படாததுமான செயற்பாடுகள் பற்றி MIT Technology நிறுவனம் எழுதிய மதிப்பாய்வினை சுட்டி நிற்கிறது.
குற்றச்சாட்டுகளுக்குள் உள்வாங்கப்பட்டு இருந்தாலும், Musk செயற்கை நுண்ணறிவு தொடர்பான ஒழுங்கு முறைகளில் உறுதியான நிலைப்பாட்டை வெளிப்படுத்துகிறார். இந்த தலைமை அதிகாரி மீண்டும் மீண்டும் செயற்கை நுண்ணறிவின் ஆபத்துக்கள் தொடர்பாக சுட்டிக்காட்டுவதோடு அதனை “மனித சமூகத்தின் நிலைத்திருப்புக்கு எதிரான மூலாதார அபாயம்” என்றும் தெரிவிக்கும் அளவுக்கு சென்றுவிட்டார். நீங்கள் ஒரு பல மில்லியன் டாலர்கள் தேற்றும், முழுமையான தன்னிச்சை கார்களை தயாரிக்கும் ஒரு நிறுவனத்தின் அதிபராக இருந்துகொண்டு தெரிவுசெய்யும்போது இது சற்று சுவாரசியமான நிலைப்பாடுதான்.
செயற்கை நுண்ணறிவானது முழுமையான தன்னிச்சையை பெற்றுக்கொண்டதும் எவ்வாறு முழுமையான பேரழிவுகளை உருவாக்குகின்றன என நீங்கள் Terminator மற்றும் Avengers: Age of Ultron முதலான திரைப்படங்களில் பார்த்திருப்பீர்கள். இவை நமக்கு கற்பனைக் கதைகளாகவே தற்போது தோன்றினாலும், Musk கருத்துப்படி, இந்த பிரச்சனைகள் நமக்கு தெரிவதை விட ஆபத்தான மற்றும் நெருக்கமான அளவில் அதிகரித்து விட்டதை நாம் உணரவில்லை என்கிறார். 2018இல் Recodeன் Kara Swisher இடம் கருத்து தெரிவிக்கும்பொழுது, “நாம் நுண்ணறிவு உடைய மற்றும் வளர்த்துக் கொள்கின்ற அரசாங்க செயற்குழு ஆரம்பிக்க வேண்டும்”என்கிறார். அப்படி செய்தால், செயற்கை நுண்ணறிவுத் தொகுதிகளின் அபிவிருத்தி தொடர்பாக ஒரு கண் வைத்துகொள்ளலாம். இவற்றோடு Musk மக்கள் தவறான காரணங்களுக்காக பயப்படுவதாகவும் கூறுகின்றார்.
“மிக ஆபத்தானது மட்டுமல்லாது நம் கட்டுப்பாட்டுக்குள் வளைத்துப் போடுவதற்கு கடினமானதுமான இவை ஸ்தூலமானவை (தொடுகைக்குரியவை) அல்ல; ஆழ்ந்த நுண்ணறிவு வலையமைப்புகள் இவை. ”
நாம், எதிர்பார்ப்பதுபோல மனித குலத்தை அழிக்க சபதம் பூண்ட நுண்ணறிவு மிக்க ரோபோக்களின் படை நம்மை எதிர்க்கப்போவதில்லை, பதிலாக நமது சர்வதேச நுண்ணறிவுத் தொகுதிகள் விட்டுக்கொடுத்துவிடும் எனவும் விளங்கப்படுத்தியுள்ளார் அவர். அதாவது உங்களுடைய தனிப்பட்ட தகவல்கள், அரசாங்க இரகசியங்கள், NASA குறியீடுகள் மற்றும் இன்னும் பல.இதைத்தான் Musk செயற்கை நுண்ணறிவானது, அணு ஆயதங்களை விட ஆபத்தானவை எனக்குறிப்பிடுகிறார். கணினிகளின் நுண்ணறிவு நம்முடையதைக் கடந்து வளருமாயின் அவை எவற்றையெல்லாம் செய்யும் தகமைகளை கொண்டிருக்குமோ ?
Elon Musk போன்று இந்த துறையில் இருப்பவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நாம் ஒழுங்குமுறைகள் தொடர்பாக எதிர்வினைத் தன்மையை விட முற்போக்குத்தன்மையுடன் இருப்பது நல்லது. செயற்கை நுண்ணறிவு தொடர்பான ஒழுங்குமுறைகளை வகுப்பதற்கான ஒரு செயற்குழு என்பது நேர்மையானதும் பாதுகாப்பானதுமான வழியாகும். எவ்வாறாயினும், இவ்வாறான ஒரு செயற்குழு நடைமுறையில் வராது என்பதையும் அவர் தனது கருத்துக்களில் பின்னர் சேர்த்துக்கொண்டார்.
எலானுடைய ஏனைய வெற்றிகளைக் காண இங்கே செல்லவும்.
image source:https://outthisyear.com/elon-musk-warns-of-the-dangers-of-ai-development/