கனவுகளும் பலன்களும்
கனவுகளுக்கான பலன்களை தெரிந்து கொண்டு முன்னெச்சரிக்கையுடன் இருங்கள். ஏனென்றால் சில கனவுகள் தீமைகள் நடைபெறுவதற்கு முன்னெச்சரிக்கையாக கூட இருக்கும்.
கூடை நிறைய முட்டைகள் இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும் என்பதைக் குறிக்கின்றது.
சாம்பலை கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் நெருக்கடியான சூழ்நிலைகள் ஏற்படப் போவதை குறிக்கின்றது.
என்னுடைய துணியானது முட்செடியில் மாட்டிக் கொண்டிருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.
கடல் கொந்தளிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் மனதில் பல தரப்பட்ட சிந்தனைகளால் குழப்பமான சூழ்நிலைகள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.
வெள்ளை நிற புறாக்களை கனவில் கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் செய்கின்ற பணிகளில் மாற்றமான சூழ்நிலைகள் காணப்படும் என்பதைக் குறிக்கின்றது.
ஆசிரியர்களை கனவில் கண்டால்என்ன பலன்? ஆசிரியர்களை கனவில் கண்டால் செல்வாக்கு மேம்படும் என்பதைக் குறிக்கின்றது.
பெருமாளை கனவில் கண்டால் என்ன பலன்? பெருமாளை கனவில் கண்டால் தொழில் சார்ந்த முயற்சிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.
காக்கை கூட்டத்தை கனவில் கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் உடனிருப்பவர்களிடம் சிந்தித்து செயல்பட வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.
மலர்கொத்துகளை கனவில் கண்டால் என்ன பலன்? மலர்கொத்துகளை கனவில் கண்டால் செய்யும் முயற்சிகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.
வெள்ளை மயிலை கனவில் கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் தம்பதிகளுக்கு இடையே ஒற்றுமையான சூழ்நிலைகள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.
முகக் கவசம் அணிந்திருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் மனதில் இருந்துவந்த கவலைகள் குறையும் என்பதைக் குறிக்கின்றது.
மானை கனவில் கண்டால் என்ன பலன்? மானை கனவில் கண்டால் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.
பால் வாங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் சுபகாரியம் தொடர்பான செயல்பாடுகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும் என்பதைக் குறிக்கின்றது.
அறுகம்புல் அரளி பூ உடன் சேர்ந்த மாலையை வாங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றமான சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.
பேனாவை கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் எதிர்பாராத சில நிகழ்வுகளால் மாற்றமான சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.
நாய் இறந்து கிடப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் மனதிற்கு நெருக்கமானவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறையும் என்பதைக் குறிக்கின்றது.
மேலும் பல கனவுகளும் பலன்களும் பாகங்களைப் பார்ப்பதற்கு மேலே உள்ள தலைப்பை அழுத்தவும்