1940 களில் தற்செயலாக முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட மைக்ரோவேவ் இப்போது ஒவ்வொரு வீட்டிலும் ஒரு பெரிய சமையலறை சாதனங்களில் ஒன்றாகும். சமையல் மற்றும் மீண்டும் சூடாக்குவதற்கான வசதியாக இது இருப்பினும், இதில் சமைக்க முடியாத குறிப்பிட்ட வகை உணவுகள் உள்ளன. அவற்றை மைக்ரோவேவில் சமைப்பதைத் தவிர்க்க வேண்டும்.
மைக்ரோவேவ் ஓவனில் சூடாக்கக் கூடாத உணவுகள்
வேகவைத்த முட்டை
மைக்ரோவேவில் வேகவைத்த முட்டையை நீங்கள் சூடாக்கும் போது, நீர் மூலக்கூறுகளிலிருந்து நீராவி உருவாகிறது. முட்டைகளுக்கு மெல்லிய சவ்வு மற்றும் ஓடு இருப்பதால், அவை எல்லா அழுத்தங்களையும் தாக்குப் பிடிக்காது. இது மைக்ரோவேவில், உங்கள் தட்டில், அல்லது நீங்கள் கடிக்கும் போது கூட மிகவும் சூடான வெடிப்புக்கு வழிவகுக்கும்!
கேரட்
கேரட்டை மைக்ரோவேவில் சமைத்து சூடாக்க முடியும் என்றாலும், பச்சையாக உள்ள கேரட், குறிப்பாக தோல்/மேற்பரப்பு சீவப்படாமல் உள்ளவை ஆபத்தானவை. கேரட் சரியாகக் கழுவப்படாவிட்டால் மற்றும் அழுக்குகளின் எச்சம் இருந்தால், மண்ணில் உள்ள தாதுக்கள் மைக்ரோவேவில் தீப்பொறிகளை ஏற்படுத்தக்கூடும், இது அர்சிங் என்றும் அழைக்கப்படுகிறது. இது தொடர்ந்து நடந்தால், உங்கள் மைக்ரோவேவ் கடுமையான சேதத்துக்கு உள்ளாகலாம்.
பதப்படுத்தப்பட்ட இறைச்சி
எல்லாவற்றுக்கும் முன், பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள் அதிக அளவு சத்தானவை அல்ல. ஏனெனில் அவை அதிக அளவு உப்பு, சேர்க்கைகள், ரசாயனங்கள் மற்றும் பாதுகாப்புகளைக் கொண்டுள்ளன. ஆனால் உங்களுக்கு பிடித்த இவ் இறைச்சிகள் மற்றும் பேணியிலடைக்கப்பட்ட உணவுப் பொருட்களில் மைக்ரோவேவ் கதிர்வீச்சைச் சேர்க்கும்போது, உங்கள் கொழுப்பின் அளவு அதிகரிக்கக்கூடும். இது இதய பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். உங்கள் இறைச்சிகள் மற்றும் தொத்திறைச்சிகளை சூடாக்குவதற்கான பாதுகாப்பான வழி கிரில் பயன்படுத்தல் அல்லது அடுப்பைப் பயன்படுத்துவதே.
நீர்
மைக்ரோவேவில் தண்ணீரை சூடாக்குவது உங்கள் விருப்பங்களில் எளிமையான மற்றும் மிகவும் தொந்தரவில்லாதது போல் தோன்றலாம். ஆனால் ஆய்வுகள்படி பல தீக்காயங்கள் மைக்ரோவேவில் சூடேற்றப்பட்ட தண்ணீரில் இருந்து வருகின்றன. குறிப்பாக குழந்தைகளால் கையாளப்படும் போது. மைக்ரோவேவ் அடுப்பில் உள்ள மின்காந்த அலைகள் தண்ணீரை மிகவும் அதிகளவு சூடு செய்யக்கூடும். இது நீர் மூலக்கூறுகளை நிலையற்றதாக்குகிறது மற்றும் தீவிரமான கொதிநிலை மற்றும் வெடிப்புகளையும் கூட ஏற்படுத்தும்!
மிளகாய்
மிளகாய், குறிப்பாக மிகவும் காரமானவை, அதிக அளவு கேப்சைசின் கொண்டிருக்கின்றன, அவை மிகவும் எரியக்கூடியவை. கேப்சைசின் ஒரு மைக்ரோவேவில் உள்ள மின்காந்த அலைகளுக்கு வெளிப்படும் போது, அது புகைபிடிக்கத் தொடங்குகிறது, மேலும் நெருப்பைப் பிடிக்கும் வாய்ப்புள்ளது! மைக்ரோவேவிலிருந்து வெளியேறும் தீ மற்றும் புகை தோல் எரிச்சல் மற்றும் எரியும் உணர்வுகளை ஏற்படுத்தும்.
கோழி
சால்மோனெல்லா குறைபாடு பரவுவதற்கு சிக்கன் ஒரு பிரபலமான காரணம், குறிப்பாக அது சரியாக சமைக்கப்படாதபோது! நீங்கள் பச்சையாக கோழியின் ஒரு பகுதியை மைக்ரோவேவில் சமைக்கும்போது, சமமாகவும் முழுமையாகவும் சமைப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவாகும். இது பாக்டீரியா மூலம் மாசுபடுவதற்கான அபாயத்தை ஏற்படுத்துகிறது.பச்சை இறைச்சியின் மற்ற பகுதிகளுக்கும் இதேதான் நடக்கும் என்பதை நினைவில் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில், ஒரு கிரில்லில் அல்லது அடுப்பில் இருக்குமாறு வைத்து, நேரடி வெப்பத்திற்கு மேல், இறைச்சியை நன்கு சமைப்பது நல்லது.
தக்காளி & தக்காளி சாஸ்
வேகவைத்த முட்டைகளைப் போலவே, தக்காளியும் மைக்ரோவேவில் அதிக நேரம் வைக்கப்படும்போது வெடிக்கும் நிலையை ஏற்படுத்தும். புதிய தக்காளி மற்றும் தக்காளி சாஸில் உள்ள திரவ உள்ளடக்கம் காரணமாக, அழுத்தம் அதிகரிப்பதால் அவை குமிழி மற்றும் திரவ கொந்தளிப்பை உண்டாக்குகின்றன. இதனால் உங்கள் மைக்ரோவேவ் முழுதும் சிறிய துணுக்குகள் தெறித்து அழுக்கடையும்.
மேலும் அறிந்து கொள்ள மேல் உள்ள தலைப்பை அழுத்தவும்
இது போன்ற கட்டுரைகள் உங்களுக்கு உதவியாக இருக்கிறதா ? மேலும் சிலவற்றை வாசிக்க பெண்ணியம் பகுதிக்குச் செல்லுங்கள்.