அமெரிக்காவை சேர்ந்த ஜே ப்ரூவர் பகிர்ந்த வீடியோ ஒன்றுதான் இன்ஸ்டாவில்
செம வைரல்.
கலிஃபோர்னியாவில் பாம்பு, பல்லி போன்ற ஊர்வனவற்றுக்காக ஒரு பூங்காவை நடத்தி வருகிறார் ஜே.ப்ரூவர் அந்தப் பூங்காவுக்கு புதுவரவாக ஒரு வானவில் மலைப் பாம்பு வந்திருக்கிறது.
ரொம்பவே அரிதான இந்த வகை பாம்பின் உடல் பலவண்ணங்களில் ஜொலிக்கும். அதனால் இந்தப் பெயர்.
இந்தப் பாம்புக்கு விஷம் கிடையாது.6 அடி வரை வளரும். ஆண் பாம்பைவிட பெண் பாம்பின் நீளம் அதிகம்.
நாய்,பூனை போன்ற செல்லப்பிராணிகள் போல மனிதர்களுடன் பழகக்கூடியது.
மேற்கத்திய நாடுகளில் உள்ள பெரும்பணக்காரர்கள் தங்களின் வீட்டில் இந்தப் பாம்பை வளர்க்கின்றனர். ஒரு குட்டியின் விலையே சில லட்சங்களில் இருக்கும்.
வானவில் மலைப்பாம்புடன் ஜே ப்ரூவர் இருக்கும் வீடியோவை 2 கோடிக்கும் அதிகமானோர் பார்த்து வைரலாக்கிவிட்டனர். 10 லட்சம் பேர் அந்த வீடியோவை லைக் செய்துள்ளனர்.