Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
Likes
  • எங்களை பற்றி
Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்

அனுமன் ஜெயந்தி விரதம் இருப்பதால் கிடைக்கும் பலன்கள்!!

  • January 12, 2021
  • 266 views
Total
10
Shares
10
0
0

இணைய வாசகர்களுக்கு இனிய வணக்கங்கள்!! இணையத்தில் படித்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றோம். அறியாததை அறிந்து கொள்வோம்.

அனுமன் ஜெயந்தி

மாதங்களில் சிறப்பு பெற்றது மார்கழி. இதுபோல், திதிகளில் நிறைவானதாக கருதப்படுவது அமாவாசை. அறிவு, ஞானத்தின் அடையாளமாக திகழ்வது மூல நட்சத்திரம். இத்தகைய மூன்றும் இணைந்திருக்கும் இந்த நல்ல நாளில் அஞ்சனையின் மகனாக அவதரித்தவரே ஆஞ்சநேயர். அவர் பிறந்த தினமே அனுமன் ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது.

அந்த வகையில் இந்த வருடம் அனுமன் ஜெயந்தி இன்று செவ்வாய்க்கிழமை அனைத்து அனுமன் கோவில்களிலும் வெகு விமர்சையாக அனுமன் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.

அனுமன் ஜெயந்தி விரதம் இருக்கும் முறை

Lord Hanuman Mountain Taken In Hand Jai Bajrang Bali - Hanuman With  Mountain - 1920x1080 Wallpaper - teahub.io
image source

அனுமன் ஜெயந்தி அன்று விரதம் இருப்பவர்கள் பிரம்ம முகூர்த்த வேளையிலேயே குளித்து, ராம நாமம் சொல்லி வணங்கி, உபவாசம் தொடங்க வேண்டும்.

அருகில் இருக்கும் ராமர் அல்லது அனுமன் கோவிலுக்குச் சென்று, அனுமனுக்கு துளசி மாலை சாற்றி வழிபட வேண்டும். அல்லது வெற்றிலை மாலை, வெண்ணெய்க் காப்பு சாற்றியும் வணங்கலாம்.

அன்று ஸ்ரீராமஜெயம் எழுதுவது நல்ல பலன்களை அளிக்கும்.

பொரி, பழம், அவல், கடலை, சர்க்கரை, வெண்ணெய், தேன், பானகம், இளநீர் போன்றவைகளை நைவேத்தியமாக படைக்கலாம்.

காலையில் துளசி தீர்த்தம் மட்டுமே பருகி உபவாசம் இருக்க வேண்டும்.

மதிய வேளையில் உணவு எடுத்துக்கொள்ளலாம்.

மாலையில் ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று ஆஞ்சநேயருக்கு வடை மாலைகளை சாற்றி வழிபடலாம். இந்த முறையில் ஆஞ்சநேயரை வழிபடுவதால் உங்கள் வாழ்வில் ஏற்படும் துக்கங்கள், கஷ்டங்கள் நீங்கும். பீடைகள் ஒழியும். கிரக தோஷங்கள் குறிப்பாக சனிக்கிரக தோஷங்கள் நீங்கும்.

இரவில் ஆஞ்சநேயர் ஸ்தோத்திரம், ராமநாமம், ஆஞ்சநேயர் அஷ்டோத்திரங்கள், ஸ்லோகங்கள் கூறி வழிபட வேண்டும்.

விரதம் இருப்பதால் கிடைக்கும் பலன்கள் :

Full Hd Hanuman Ji - 1920x1080 - Download HD Wallpaper - WallpaperTip
image source
  • அனுமன் ஜெயந்தி, ஜெயந்திகளுக்கு எல்லாம் ஜெயந்தி.
  • அன்றைய தினம் நாம் விரதம் இருந்தால் சகல மங்களங்களும் உண்டாகும்.
  • நினைத்த காரியம் கைகூடும்
  • துன்பங்கள் விலகும். 
  • இன்பங்கள் பெருகும்.
  • குறிப்பாக சனியின் பிடியில் உள்ளவர்கள் அனுமனை வணங்கி வருவது பல சங்கடங்களைப் போக்கும்.

ஆஞ்சநேயர் காயத்ரி மந்திரம் :

  • ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே,
  • வாயுபுத்ராய தீமஹி,
  • தந்தோஹனுமன் ப்ரசோதயாத்

சகல ஆனந்தங்களையும் அள்ளித்தருபவர் ஆஞ்சநேயர். சிவனையும், திருமாலையும் ஒன்றிணைக்கும் தெய்வமாக விளங்குபவர் ஆஞ்சநேயர். எனவே இவரை வணங்கி அளவில்லாத ஆனந்த நிலையினைப் பெறுவோம்.

ஸ்ரீ ராம ஜெயம்

அஞ்சனை மைந்தனின் அனுமன் ஜெயந்தி

இந்தக் கட்டுரை போன்ற பக்திக் கட்டுரைகளுக்கு எமது கலாச்சாரம் பகுதிக்கு செல்லவும்.

wall image

Post Views: 266
Total
10
Shares
Share 10
Tweet 0
Pin it 0
Niranjan Perumal

Previous Article
ஷிவானி

சிங்கப்பெண் ஷிவானி வெளியேறினார்

  • January 11, 2021
View Post
Next Article
தூக்க முடக்கம் என்றால் என்ன ? அது உருவாகும் 4 காரணங்களும்

தூக்க முடக்கம் என்றால் என்ன ? அது உருவாகும் 4 காரணங்களும்

  • January 12, 2021
View Post
You May Also Like
பால்குடம்
View Post

பால்குடம் எதற்காக எடுக்கப்படுகிறது? அதன் நன்மைகள் என்ன?

ஐயப்ப
View Post

ஐயப்பனுக்கு நெய் கொண்டு செல்வது ஏன்?

ஐயப்பனின்
View Post

ஐயப்பனின் பதினெட்டு படி உணர்த்தும் குணங்கள்..!

சபரி
View Post

சபரிமலையில் நடக்கும் இந்த விஷயங்கள் உங்களுக்கு தெரியுமா?

தீ மிதி
View Post

தீ மிதிப்பது ஏன்? அதன் அறிவியல் காரணம் என்ன தெரியுமா?

சபரி
View Post

சபரிமலைக்கு முதல் முறையாக மாலை அணிந்தவரா?

சடாரி
View Post

சடாரியை ஏன் தலையில் வைக்கிறார்கள்? சடாரி வைப்பதால் என்ன பலன்?

சபரிமலை
View Post

சபரிமலையின் ஏழு அம்சங்கள்..!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe

Subscribe now to our newsletter

Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்

Input your search keywords and press Enter.