நமது விருப்பத்துக்குரிய வில்லன்களின் கையில் கூடிய சீக்கிரத்தில் இருந்தே நம்மால் ஐபோன்களை பார்க்க முடியாமல் போகப்போகிறது.
வில்லன்களுக்கு மட்டும் ஏன் ?
ஒரு மர்ம திரைப்படத்தில் வில்லன் யார் என்று நீங்கள் கண்டுபிடிக்க உங்களுக்கு இந்த முறை உதவினாலும் உதவலாம். திரைப்படம் முழுவதும் அவர்கள் கையில் எந்த வகையான செல்லிடத் தொலைபேசி வைத்திருக்கிறார்கள் என்று பாருங்கள். அவர் கையில் இருப்பது ஐபோன் தவிர்ந்த வேறு ஏதேனும் ஒரு போன் ஆக இருந்தால் அவர்தான் திரைப்படத்தின் வில்லன் அல்லது தீய கதாபாத்திரம்.
Vanity Fair உடனான ஒரு நேர்காணலில் Knives Out திரைப்படத்தின் இயக்குனர் Rian Jhonson தெரிவித்ததாவது, அப்பிள் நிறுவனமானது தன்னுடைய திரைப்படத்தின் தீய கதாபாத்திரங்களை ஐ போன்களை பயன்படுத்த அனுமதிக்கவில்லை என்பதாகும். ” அப்பிள்… அவர்கள் திரைப்படங்களில் ஐ போன்களை பயன்படுத்த அனுமதித்திருக்கிறார்கள். ஆனால் இது ஒரு மர்மமான திரைப்படத்தில் மிகவும் முக்கியம் ஏனெனில், தீய கதாப்பாத்திரங்கள் ஐபோனை கேமரா முன்பு பயன்படுத்துவது தடையாகும்.
இதனை நீங்கள் விரும்பலாம் அல்லது வெறுக்கலாம். நீங்கள் மர்ம திரைப்படத்தில் வில்லனை கண்டுபிடிக்க எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் கள்ளச்சாவி ; அல்லது படத்தின் மர்மத் தன்மையை குலைக்கும் கீழ்த்தரமான குறுக்கு வழி உங்களுடைய சுவை பொறுத்து இந்த முடிவு இரண்டு வகையாகவும் மாறுபடலாம்.
Jhonson நேர்காணலில் நகைச்சுவையாக, “தன்னுடைய திரைப்படத்தில் ஒரு வில்லனை கொண்டிருக்கின்ற ஒவ்வொரு தனிப்பட்ட இயக்குனர்களும் காக்கும் ஒரு முக்கியமான ரகசியம் இது. இதனை சொன்னதால் தற்பொழுது அவர்கள் என்னை கொலை செய்யக்கூட காத்துக் கொண்டிருக்கலாம்” என தெரிவித்ததோடு, “எனது திரைப்படத்தில் Harlan Thrombey வின் உடைய மரணத்துக்காக எக்கச்சக்கமான கதாபாத்திரங்கள் சந்தேகிக்கப்பட்டு கொண்டிருக்கும் ஒரு கதை களத்தில் இது மிகவும் முக்கிய புள்ளி, இந்தத் திரைப்படத்தை நீங்கள் இன்னும் பார்க்கவில்லை ஆயின் உங்களுடைய கண்கள் அப்பிள் தவிர்ந்த வேறு போன்களை தேடுவதில் கவனமாய் இருக்கட்டும்” எனவும் கூறியுள்ளார்.
MacRumors கருத்துப்படி, அப்பிள் நிறுவனம் தனது உற்பத்திகளின் பயன்பாடு பற்றி “சிறந்த வெளிச்சத்தை காட்டும் பக்கத்தில், அதாவது செயலோ அல்லது சூழலோ, ஆப்பிள் நிறுவனத்துக்கு மற்றும் உற்பத்திகளுக்கு சார்பான முறையில் பிரதிபலிக்கப்பட வேண்டும்.” என தெரிவிக்கிறது.
அப்பிள் நிறுவனமானது தன்னுடைய உற்பத்திகள் ஒரு திரைப்படத்தின் தீய கதாபாத்திரங்களோடு இணைந்து காட்டப்படுவதில் விருப்பமின்றி காணப்படுவது தர்க்கரீதியானதே. “இதே வகையிலே தான் பிரபலமான மென்பான கம்பெனிகள் தங்களுடைய வியாபார நாமம் ஒரு டின் வடிவத்தில் நசுக்கப்பட்டு குப்பைத் தொட்டிகளில் தூக்கி எறியப்படுவதனை தமது வாடிக்கையாளர்கள் காணக்கூடாது என எதிர்பார்க்கின்றனர் ” பார்வையாளர்கள் இக்காட்சிகளை உள் வாங்கி ,அது மானசீக ரீதியாக அந்த கம்பெனிகளின் மீது ஒரு எதிர்மறையான பிம்பத்தை உருவாக்கலாம் என அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
கடந்த வருடம்,New York times அறிக்கைகளின் படி, அப்பிள் தனது உற்பத்தியான அப்பில் தொலைக்காட்சி + ஒளிபரப்பு சேவைகள் ஆகியவற்றுக்கு தன்னுடைய ஏனைய உற்பத்திகளை கொண்டு விளம்பரம் செய்வதை விரும்பவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. Wired எனும் நிறுவனத்தின் கட்டுரையின் படி 24 என்கின்ற திரைப்படத்தில் வருகின்ற நல்ல கதாபாத்திரங்கள் அனைத்தும் iMac பயன்படுத்துவதாகவும் தீய கதாபாத்திரங்கள் Windows PC பயன்படுத்துவதாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளதாக 2002 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.
எது எவ்வாறாயினும் இனிமேல் வில்லன்களின் கைகளில் ஐபோன்கள் இருக்கப்போவதில்லை. இது போன்ற மேலும் சில செய்திகளுக்கு
image source:https://www.lightbox.co.nz/movie/knives-out