இணைய வாசகர்களுக்கு இனிய வணக்கங்கள்!!
நாம் நம்முடைய புலன்களுக்கு எட்டக்கூடிய விடயங்களை வைத்து என்று பல்வேறு முடிவுகளை எடுத்துக் கொண்டிருக்கிறோம். நான் பார்த்தேன் அவன் அவ்வாறு செய்தான் என்று கூறுகின்றோம். குற்றம் சாட்டுகிறோம் பிரச்சினைகள்மேற்கொள்கிறோம். எல்லாவற்றையும் நாம் கண்ணால் கண்டும் காதால்கேட்டதையோ வைத்துக்கொண்டு முடிவு செய்கிறோம்.
ஆனால் உண்மையில் நம் கண்களால்பார்க்கும் விடயங்களில் நூற்றுக்கு எத்தனை வீதம் உண்மையானது என்பது கேள்விக்குறி.
ஆம் நண்பர்களே..நம் கண்முன்னே அசையாமல் கிடக்கின்ற ஒரு கல்லை எடுத்துக் கொள்வோம்.நம்மைப் பொருத்தவரை அது வெறுமனே அசையாமல் கிடக்கின்ற ஒரு கல்.அதில் எந்த ஒரு சிறிய அசைவுமே இல்லை. அது அதனூடாக காற்று அல்லது நீர்எதுவும் செல்ல முடியாத அளவு இறுக்கமான ஒரு திடப்பொருள்.
ஆனால் உண்மையான விஞ்ஞானம் என்ன சொல்கிறது..? அந்தக் கல்லானது காபன் சிலிக்கன் போன்ற வெவ்வேறு கனிமங்கள் கொண்டு உருவானது.
அந்த ஒவ்வொரு கனிமங்களும் அடிப்படையிலே ஒரு கருவினாலும் அதனைசுற்றிவரும் இலத்திரன்களாலும் உருவானது. ஒவ்வொரு அணுவும் நூற்றுக்கு90% வெற்றிடத்தை கொண்டது. அத்துடன் இலத்திரன்கள் நாம் எண்ணிப் பார்க்க முடியாத அளவு வேகத்தில் அதாவது ஒரு செக்கனுக்கு 2200 கிலோமீட்டர்கள் என்கின்ற வேகத்தில் பயணித்துக் கொண்டிருக்கின்றன.
ஆக, நம் கண்களுக்கு அசையாமல் கிடக்கின்ற கல்லுக்குள்ளே இவ்வளவு விதமான இலத்திரன்கள்அசைந்து கொண்டிருக்கின்றன. நம் கண்களுக்கு முழுவதுமாக மூடி இருப்பதாகதெரிகின்ற ஒரு கல்லுக்குள்ளே 90% வெற்றிடமாக தான் இருக்கிறது.
இது விஞ்ஞானப்படி நாம் கொடுக்கக்கூடிய விளக்கம் தான். நம்முடையவாழ்க்கையில் நம் கண்களுக்குத் தெரிந்ததைத் தாண்டி ஒவ்வொருவர்வாழ்க்கைக்கு பின்னாலும் வெவ்வேறு கதைகள் இருக்கக்கூடும்.
அவரே நமக்கு தெரிந்ததை வைத்துக்கொண்டு முடிவு செய்யாமல் தீர ஆராய்ச்சி செய்த பின்னேஒரு முடிவுக்கு வரவேண்டும்.
image source:https://apkpure.com/atomus-live-wallpaper/com.StarWallpapers.Atomus103