அசைக்க முடியாத தைரியத்துடன் வாழ்க்கையை வென்ற சாம்பியன் – ஜோ பிடனின் கதை இதோ…!
ஜனநாயக வேட்பாளர் ஜோ பிடன் அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியாக இருக்க வாய்ப்புள்ளது என்று பல செய்திகள் வெளிவந்துகொண்டு இருக்கின்றன..
இது அவரைப் பற்றிய ஒரு சிறிய தகவல்.
1942 இல் பிறந்த ஜோ பிடென் பென்சில்வேனியாவின் ஸ்க்ரிண்டனில் பிறந்தார்.
இவரது தாய் ஜேன், தந்தை ஜோசப். தந்தை ஜோசப் பயன்படுத்திய கார்களை விற்பனை செய்யும் வியாபாரியாக இருந்து வந்தார். மற்றும் அவரது வருமானம் அடிக்கடி மாறியதாகக் கூறப்படுகிறது.பிடனின் தந்தை ஆரம்பத்தில் பணக்காரர், ஆனால் பிடன் பிறந்த நேரத்தில் பல நிதி பின்னடைவுகளை சந்தித்தார்.
அந்த குடும்பத்தில் உள்ள குழந்தைகளில் மூத்தவர் ஜோ பிடன். அவர்கள் ஒரு பாரம்பரிய ஐரிஷ் கத்தோலிக்க குடும்பம்.
நிதி சிக்கல்கள் காரணமாக, பல ஆண்டுகளாக பிடென் தனது குழந்தைப் பருவத்தை தாய்வழி தாத்தா பாட்டியுடன் வாழ்ந்து வந்தார்.
“என் அப்பா எப்போதும் சொல்லுவார் வீரனே நீ கீழே விழுந்து அடிபட்டாலும் மீண்டும் எழுந்து விளையாட்டிற்குள் வர வேண்டும்” என்று பிடன் கூறினார்.
பாடசாலையில் அவர் கல்வியில் மட்டும் அல்ல, விளையாட்டிலும் சிறந்து விளங்கினார். அவர் அமெரிக்க கால்பந்து மற்றும் பேஸ்பால் ஆகியவற்றில் சிறந்து விளங்கினார்.
1965 இல் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார்.
சட்டப் பள்ளியில் பட்டம் பெற்ற பிறகு, பிடென் டெலாவேரின் வில்மிங்டனுக்கு குடிபெயர்ந்தார். அதாவது ஒரு வழக்கறிஞராக தனது வாழ்க்கையைத் தொடங்க வேண்டும் என்பதற்காக.
1966 இல் அவர் தனது முதல் மனைவி நெலியா ஹண்டரை மணந்தார்.
அவர்களுக்கு இரண்டு மகன்கள் – பயோ மற்றும் ராபர்ட் – மற்றும் ஒரு மகள், நவோமி.
பிடென் முதன்முதலில் 1972 இல் செனட்டில் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் சில மாதங்களுக்குப் பிறகு, அவர் தனது மனைவியையும் பின்னர் ஒரு வயது மகளையும் கார் விபத்தில் இழந்தார். இந்த விபத்தில் இரண்டு மகன்களும் காயமடைந்த போதிலும், அவர்கள் உயிர் தப்பினார்கள். பின்பு அவர் தனது அரசியல் வாழ்க் கையை தொடர்ந்தார்.
ஜோ பிடேனுக்கு ஆதரவாக டிரம்பை விமர்சித்துப் பேசியுள்ள முன்னாள் அதிபர் பாராக் ஒபாமா டிரம்ப் வேலையில் எந்த வித ஆர்வத்தையும் காட்டவில்லை. எனத் தெரிவித்துள்ளார்.
வழமையாக வாக்களிப்பு தினத்தில் இரவு அல்லது அடுத்த நாள் காலையில் அடுத்த ஜனாதிபதி யார் என்று தெரிந்துவிடும். ஆனால் இம் முறை அதை சரியாக கூற முடியாது என்று தேர்தல் அதிகாரிகள் கூறுகின்றனர். உத்தியோகபூர்வமான இறுதி முடிவு அறிவிக்கப்பட சில நாட்கள் ஆகலாம் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதி யார் என்று கொஞ்சம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
தமிழ் வருடங்கள் 60ம் தமிழர் அறிய வேண்டிய தமிழ்ப் பட்டியல்களும்
மேலும் அறிந்து கொள்ள மேல் உள்ள தலைப்பை அழுத்தவும்