இணைய வாசகர்களுக்கு இனிய வணக்கங்கள்!! பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது. இந்த நிகழ்ச்சி தமிழில் தொடங்கப்பட்டு மற்றும் மூன்று பருவங்கள் வெற்றிகரமாக முடிக்கப்பட்டன. இப்போது கமல்ஹாசன் சீசன் 4 இணையும் தொகுத்து வழங்குகிறார்.
பிக்பாஸ்ல நல்லதே நடக்காதா என்று மக்கள் கேட்கிறார்கள் போட்டியாளர்களை மக்கள் விவாதிக்கிறார்கள்.. சண்டை போடுகிறார்கள்… சமாதானம் அடைகிறார்கள்…. வீட்டிற்குள் இருப்பவர்களுக்கு நடப்பதைப் போலவே வெளியி உள்ளவர்களுக்கும் தரிசனம் கிடைக்கிறது. அதுவே இந்த நிகழ்ச்சியினால் கிடைத்த நன்மை என்று பெருமையாக சொன்னார் கமல்ஹாசன்.
மற்ற பிக்பாஸ் பார்த்தால் எப்படியெல்லாம் திட்டுறாங்க நீங்க மட்டும் ஏன் அதைச் செய்ய கூடாது ? என்னைக் மக்கள் கேட்கிறார்கள் என்று சனிக்கிழமை கமல்ஹாசன் கூறினார். என் வலி அது அல்ல நான் அப்படிச் செய்ய மாட்டேன். அன்பு மற்றும் பொறுமையால் தான் ஒருவரிடம் உண்மையான மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்று கமல்ஹாசன் கூறினார்.
நீங்கள் எல்லாம் தெரியாமல் தவறு செய்வீங்க ஆனால் தெரிந்தே யாரும் தப்பு பன்ன நான் விட மாட்டேன். தட்டிக் கேட்பேன் என்று சொன்னார் கமல்ஹாசன் ஒரு தவறு செய்தால் அது தெரிந்து செய்தால் எம்.ஜி.ஆர் பாடல் வரியை பாடினார்.
இவ்வளவு நாட்களில் ஆரி பொதுவாக அதிகம் உணர்ச்சிவசப்பட்டு யாரும் பார்த்ததில்லை. அவருடைய மகள் வந்த போது கூட பிக்பாஸ் விதிகளை கடைப்பிடித்தவர். ஆனால் இன்று அவர் அதிகம் உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கியதை பார்க்க முடிந்தது. பாலாஜியை அழைத்த அவர் ரூல்ஸ்லாம் புக்ல இருந்தா போதும். ஃபாலோ பண்ணத் தேவையில்லை. உன் ஸ்போர்ட்மேன் பற்றி கேள்வி கேட்டதுக்காக மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் என்று கண்களில் நீர் வழிய சொன்னார்.
கயிற்றை பிடிக்கும் டாஸ்க்கில் ரியோவும் கேபியும் முன்னணியில் இருப்பது தான் ஆரியின் கோபம். சரி யோசிக்க வேண்டாம் நாம நேர்மையா விளையாடுவோம் என்று ஆரியின் கண்களை பாலாஜி துடைத்து விட்டது பார்ப்பவர்களை கொஞ்சம் அழ வைத்தது.
நான் வெளியில் போனால் கூட உங்க கிட்ட அறிவுரைகள் கேட்பேன்.என்று பாலாஜி ஆரியிடம் சொன்னார்.
அகம் டிவி வழியாக உள்ளே வந்த கமல்ஹாசன் இறுதிப் போட்டியாளராக தேர்வான சோமை வாழ்த்தி அதற்கான சான்றிதழை வழங்கியதோடு கட்அவுட் ஒன்றையும் திறந்து வைக்கச் சொன்னார்.இதற்குத் தகுதியானவர் சோம் என்பதை ஒவ்வொரு போட்டியாளரும் தனித்தனியாக சொன்னார்கள். தன்னுடைய அம்மா வீடியோவில் வந்து இன்ப அதிர்ச்சி தந்ததால் சோம் கூடுதலாக மகிழ்ந்தார்.
பாட்டு கண்டுபிடிக்கற டாஸ்க்ல பின்னாடியே இருந்தீங்கள் ஏன்? என்று ஆரியிடம் கமல்ஹாசன் விசாரிக்க தோள்மூட்டு வலி உள்ளிட்ட காரணத்தினால் சில டாஸ்க்குளை சரியாகச் செய்ய முடியவில்லை என்று ஆரிவிளக்கம் அளித்தார்.
இந்த வார டாஸ்க்ல பாலாஜி ரூல்ஸ் எல்லாம் நன்றாக பின் பற்றினார் அதுவே அவருக்கு பெரிய வெற்றிதான் என்று பாராட்டை கமல்ஹாசன் வழங்கினார்.
எல்லோருமே நாமினேஷன்ல இருக்கீங்க சோம் தப்பித்து விட்டார். இன்னும் ஒருவரை காப்பாற்றலாமா என்று ஆரி காப்பாற்றப்பட்ட செய்தியைச் சொன்னார். ஆரி தான் காப்பாற்றப்பட்ட செய்தியைக் கேட்டவுடன் தரையில் அமர்ந்து கையால் தட்டி நன்றி தெரிவித்தார்.
செல்போன் விற்பவனும் லாபம் பெறுகிறான் செருப்பு விற்பவனும் பணக்காரன் ஆகிறான். ஆனால் நமக்கு சோறு போடும் விவசாயி கஷ்டபடுகிறான் ஏன்? என்ற கேள்வியாக முன்வைத்த கமல்ஹாசன் பொங்கல் வாழ்த்துகளை ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். மற்றும் விருமாண்டி பட அனுபவங்களை பகிர்ந்து கொண்டார் கமல்ஹாசன்.
என்ன பாலாஜி செளக்கியமா என்று கமல்ஹாசன் விசாரிக்க, பாலாஜி முழித்து கொண்டு இருக்க நீங்கள் தப்பித்து விட்டீர்கள் என்று சொன்னார் கமல்ஹாசன் ஆரியைப் போல பாலாஜியும் கீழே விழுந்து மண்ணைத் தொட்டு நன்றி சொன்னார்.
அகம் டிவி வழியாக திரும்பி வந்த கமல்ஹாசன் நீங்கள் இங்கு இருந்து போகும் போது எடுத்து செல்லும் நன்மைகள் என்ன ? என்று கேட்டார் கமல்ஹாசன் அதுக்கு இப்படி பதில்கள் வந்தன.
- ரம்யா எனக்கு யாரும் குறைகள் சொன்னால் அதை நான் திருத்தி கொள்வேன் அதுக்கு கமல்ஹாசன் சொன்னார் விதையும் அதுவே களையும் அதுவே
- பாலாஜி கோபம் தான் என் பிரச்னை. அதை விட முயற்சி பண்ணுவேன்
- ஷிவானி பொறுமையை எடுத்துகிட்டு போவேன்
- ஆரி கேள்வி கேட்பதை விடமாட்டேன் நேரம் முக்கியம் அதை இங்கு இருந்து கற்று கொண்டேன் அதை எடுத்துகிட்டு போவேன்.
- சோம் எனக்கு அழுகை வராது. ஆனால் இங்கே வந்து அழுது இருக்கிறேன் இனி அழுவதையும் கற்றுக் கொள்வேன்.
- கேப்ரியெல்லா குறைகள் வரும் போது அதை திருத்திக் கொள்வேன்.
- ரியோ ஒருவரை எனக்குப் பிடிக்க இல்லை என்றால் அவர்களிடம் இருந்து தள்ளி இருப்பேன் அதுதான் என் வழக்கம் பிக்பாஸ் வந்த பிறகு நெருங்கி பார்த்தால் நல்ல விஷயங்கள் இருக்கும் என்பதை புரிந்து கொண்டேன்.
நீங்கள் எல்லாம் நல்ல பிள்ளைகள் கடந்த நிகழ்ச்சியில் எல்லோரும் இங்கு இருந்து போனால் செல்போன் தான் முதலில் பார்ப்போம் என்று சொன்னார்கள் என்று சொல்லி மகிழ்ந்தார் கமல்ஹாசன்.
காப்பாற்றப்பட்டவர்கள் எல்லாம் சேர்ந்து இருங்கள் என்று கமல்ஹாசன் சொன்னதும் ரியோ எழுந்து நாமினேஷன் வரிசையில் இருக்க போக ரியோ நீங்க அங்க இருக்கலாம் என்றார் கமல்ஹாசன் சொல்ல ரியோவின் வெற்றியை எல்லோரும் சேர்ந்து கொண்டாடினார்கள்.
ஏழு போட்டியாளர்களும் பரிந்துரைக்கப்பட்டனர். அவர்களில், சோம் இறுதிப் போட்டிக்கு நேரடி நுழைவைப் பெற்றார். சனிக்கிழமை எபிசோடில் அதிக வாக்கு சதவீதத்தின் அடிப்படையில் ஆரி காப்பாற்றப்பட்டார்.
பாலாஜி ஞாயிற்றுக்கிழமை எபிசோடில் சேமிக்கப்பட்டு மூன்றாவது இறுதிப் போட்டியாளரானார். பின்னர், ரியோ அதைத் தொடர்ந்து ரம்யா பாண்டியன், ஒன்றன் பின் ஒன்றாக காப்பாற்றப்பட்டனர். ஷிவானி மற்றும் கேப்ரியெல்லா ஆகியோர் ஆபத்து கட்டத்தில் கடைசி இரண்டு போட்டியாளர்களாக இருந்தனர். இறுதியில் போட்டியாளர் வெளியேற்றப்படுவதாக கமல்ஹாசன் ஷிவானியின் பெயரைக் காட்டினார்.
தனது வெளியேற்றத்தைப் பற்றி அறிந்த ஷிவானி சற்று அதிர்ச்சியடைந்தார். பாலாஜி தான் வளர்த்த செடியிலிருந்து சிவனிக்கு பூவை வழங்கினார். ஷிவானியை வெளியேறும் போது அனைத்து போட்டியாளர்களும் கூட்டாக சிங்கப்பெண்ணே சிங்கப்பெண்ணே ஊக்கப் பாடலைப் பாடினார்கள்.
கமல்ஹாசன் மேடையில் ஷிவானி நாராயணனை வரவேற்றார். கமல்ஹாசன் ஷிவானியைப் பாராட்டினார், மேலும் அவர் ஒரு அதிரடி சார்ந்த பெண், குறைவாகப் பேசுகிறார், மேலும் சிறப்பாக செயல்படுகிறார் என்று கூறினார். பணிகளை முடிக்க அதை நிரூபித்துள்ளார். அநேகமாக, ஷிவானியின் தாயார் அகிலா நாராயணன் சில வாரங்களுக்கு முன்பு வீட்டிற்குச் சென்றிருந்தால், அவர் இன்னும் இருந்திருக்க முடியும்.
வார்த்தைகள் அல்லது செயல்களால் யாரையும் காயப்படுத்தாத ஷிவானியின் தன்மையை கமல்ஹாசன் பாராட்டினார். கமல்ஹாசனிடமிருந்து பாராட்டத்தக்க தன்மைக்கான நேர்மறையான வார்த்தைகளால் ஷிவானி மகிழ்ச்சி அடைந்தார். . பிக் பாஸிடமிருந்து நிறைய விஷயங்களைக் கற்றுக்கொண்டேன் என்று ஷிவானி கூறினார். ஷிவானி எப்படி பொறுமையாக இருக்க வேண்டும், எப்போது கோபப்பட வேண்டும், அதை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்று கற்றுக்கொண்டார்.
ஷிவானி தனது பயணத்தின் வீடியோ தொகுப்பைப் பார்த்து உணர்ச்சிவசப்பட்டார். பின்னர், கமல்ஹாசன் போட்டியாளர்களுடன் கதைக்க ஷிவானிக்கு ஒரு வாய்ப்பை வழங்கினார். பின் கமல்ஹாசனிடமிருந்து தனது எதிர்காலத்திற்கு வாழ்த்துக்களைப் பெற்ற பிறகு, ஷிவானி விடைபெற்றார்.
பிக்பாஸ் டைட்டிலை வெல்லப் போவது யார்? எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்பது தான் பிக்பாஸின் மந்திரம். என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். பொறுத்திருந்து பார்ப்போம்.துபுஜிக்கு துபுஜிக்கு BiggBoss