கலைமகள்,அலைமகள், மலைமகள் என முப்பெரும் தேவியாரையும் கல்வி செல்வம் வீரம் வேண்டி வழிபடும் விரதமே நவராத்திரி விரதம் ஆகும்.இது இந்துக்களின் விழாக்களில் முக்கியமானதொன்றாகும்.
நவராத்திரி ஆண்டின் மிக நல்ல காலங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த பண்டிகை ஒன்பது நாட்களுக்கு உள்ளது. மற்றும் இந்த நவராத்திரி விழா உலகம் முழுவதும் உள்ள இந்து மக்களால்ஆர்வத்துடன் கொண்டாடப்படுகிறது.
கோயில்கள் அலங்கரிக்கப்பட்டு பக்தர்கள் திருவிழா நாட்களுக்கு முன் கூட்டியே தயாராகி வருவார்கள் . சுவாரஸ்யமாக நவராத்திரி திருவிழா ஒரு அழகான வரலாற்றையும் முக்கியத்துவத்தையும் கொண்டுள்ளது. இதைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள இதோ…
நவராத்திரி என்ற சொல் ஒரு சமஸ்கிருத வார்த்தையிலிருந்து உருவானது, இது ‘நவ’ ஒன்பது என்றும், ராத்ரி இரவு என்றும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் தேவியின் ஒன்பது அவதாரங்களில்.
- ஷைல்புத்ரி
- பிரம்மச்சாரினி
- சந்திரகாந்தா
- குஷ்மந்தா
- ஸ்கந்தமாதா
- காத்யாயணி
- காளராத்திரி
- மகாகௌரி
- சித்திதட்ரி என்று கூறப்பட்டுள்ளது மேலும் ஒவ்வொரு நாளும் அதனுடன் தொடர்புடைய வண்ண முக்கியத்துவம் உள்ளது.
நவராத்திரி குறித்து பல்வேறு வரலாற்று கதைகள் கூறப்பட்டுள்ளன அவற்றில் ஒன்று வருமாறு:
வரலாறு
புராணக்கதை என்னவென்றால், மகிஷாசுர என்ற அரக்கன் பிரம்மாவால் அழியாத வரத்தை பெற்று கொண்டான். அவனை ஒரு பெண்ணால் மட்டுமே தோற்கடிக்க முடியும் என்ற நிபந்தனை இருந்தது.
மகிஷா என்ற அரக்கன் பிரம்மனிடம் சாகா வரம் வேண்டி தான் ஒரு பெண்ணின் கையால் மட்டுமே இறக்க வேண்டும் என வரம் பெற்றான். பெண்கள் பூவை விட மென்மையாவர்கள் என்றெண்ணி அவன் மூவுலகத்தையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தான்.
எல்லா கதைகளிலும் வருவது போல தேவர்கள் அஞ்சி விஷ்ணு பகவானை நாடி சென்றார்களாம். ஆனால் அவரால் கூட மகிஷாசுர என்ற அரக்கனை வீழ்த்த முடியவில்லை. விஷ்ணு சிவபெருமானை நாடி நடந்ததை கூற சிவன் தன் ஞானத்தால் சந்தியா தேவி என்ற சக்தியை உண்டாக்கினார்.
நேரிடையாக போருக்கு அழைத்தால் வரமாட்டான் என்றறிந்த தேவி தன் அழகால் அவனை மயக்கினாள். எதிர்பார்த்தது போல் அவனும் தேவியை திருமணம் செய்து கொள்ள விரும்பி தூது அனுப்பினான். என்னிடம் போரிட்டு வெல்பவர் மட்டுமே தன்னை திருமணம் செய்ய முடியும் என சொல்லி அனுப்பினார் சந்தியா.
தன் வீரர்கள் ஒவ்வொருவராய் அனுப்ப எல்லோரும் தேவியிடம் வீழ்ந்து மடிய, மகிஷாசுரன் நேராக களத்திற்கு சென்றான் அவனது வரத்தை அழித்து தேவர்களை மகிழ்வித்தாள் மகிஷாசுரமர்த்தினி. பத்து நாட்கள் நடந்த போரில் அரக்கனை வென்று அழித்ததால் விஜயதசமி உருவானதாய் ஐதீகம்.
ஒன்பது நாட்களில் தேவியின் ஒன்பது வெவ்வேறு அம்சங்கள் வழிபடப்படுகின்றன. இந்த ஒன்பது நாட்களும் வாசலில் மாவிலை கட்டி வீட்டில் அரிசிமாவால் கோலம் போட்டு சர்க்கரைப் பொங்கல், அவல், கடலை, வடை, நைவேத்தியம் செய்து வழிபடுவர். இவ்வாறு செய்வதால் குடும்ப ஒற்றுமையும், செல்வமும் செழிக்கும் என்பது ஐதீகம்.
ஆகவே முக்கியமாக இந்த விரதத்தினை மாணவர்கள் கடை பிடிப்பது சக்தியின் திருவருளை பெற்று கல்வியிலும் ஏனைய துறைகளிலும் சிறந்து விளங்க வழி வகுக்கும்.
மேலும் அறிந்து கொள்ள மேல் உள்ள தலைப்பை அழுத்தவும்
இது போல் மேலும் பல சுவாரஸ்யமான தகவல்களை அறிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்..