WHO இன் படி, ஒவ்வொரு ஆண்டும் 23 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் ஆரோக்கியமற்ற உணவை சாப்பிடுவதன் மூலம் நோய்வாய்ப்படுகிறார்கள். மற்றொரு அறிக்கையின் படி, வானத்தில் நட்சத்திரங்கள் இருப்பதைப் போல இந்த வளிமண்டலத்தில் பலவிதமான வைரஸ்கள் உள்ளன. நம் உடல்கள் நோய் வாய்ப்படாமல் இருக்க, சிறந்த தீர்வாக நம் நோயெதிர்ப்பு சக்தியை உள்ளிருந்து கட்டியெழுப்ப வேண்டும்.
உங்கள் நோயெதிர்ப்பு சக்தியை இயற்கையாக அதிகரிக்க நீங்கள் உட்கொள்ளக் கூடிய 10 உணவுகளின் பட்டியல்
பாதாம்

1/4 கப் பால் கொண்டுள்ள அளவு கால்சியமினை 25g பாதாமானது கொண்டுள்ளது. ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, பாதாம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. குறிப்பாக வைரஸ்களுக்கு எதிராக. வைட்டமின் ஈ மற்றும் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் அவை உங்கள் இரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.
சூரியகாந்தி விதைகள்

ஒரு ஆரோக்கியமான சிற்றுண்டியான சூரியகாந்தி விதைகள் நோய் எதிர்ப்பு சக்தி ரீதியாக பார்க்கும் போது நீங்கள் எதிர்பாராத அளவு நன்மைகளைக் கொடுக்கும். அவை அல்சைமர் போன்ற பல்வேறு, நாட்பட்ட நோய்களின் அபாயத்தைக் குறைக்கின்றன. அவை உங்கள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கின்றன. மேலும் அவை நோய்கள் உருவாக்குவதையும் தடுக்கின்றன. இது குழந்தைகளை எதிர்பார்த்திருக்கும் தாய்மார்களுக்கு வரப்பிரசாதமாக உள்ளதோடு, கரு ஆரோக்கியமாக வளர உதவுகிறது.
பப்பாளி
ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த, பப்பாளி ஒரு சுவையான தேர்வாகும். இதன் நன்மைகளில் சில அழற்சியை எதிர்த்துப் போராடுவது, புற்றுநோயின் அபாயத்தைக் குறைத்தல் மற்றும் செரிமானத்தைக் கட்டுக்குள் வைத்திருத்தல் ஆகியவை அடங்கும்.
கிவி
வைட்டமின் சி, வைட்டமின் கே மற்றும் வைட்டமின் ஈ ஆகியவற்றுடன் கிவி ஆஸ்துமாவுக்கு எதிராக போராட உதவுவதோடு நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தவும் உதவும். ஜலதோஷம், காய்ச்சல் போன்ற நிலைகளையும் வராமல் தடுக்கலாம். கூடுதலாக, கிவி செரிமானத்திற்கு உதவுவதோடு பார்வை இழப்புக்கு எதிராக பாதுகாப்பாகவும் செயல்படும்.
இஞ்சி
எளிதில் கிடைக்கக் கூடிய இந்த பொருள் உங்கள் உடலுக்குள் அதிசயங்களை நடாத்தும். இது கொழுப்பைக் குறைக்கிறது, மாதவிடாய் வலியை குறைக்கிறது. மேலும் தொற்று நோய்களை எதிர்த்துப் போராடும் உடலின் திறனை அதிகரிக்கிறது.
எல்டர்பெர்ரி
எல்டர்பெர்ரிகளில் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்திருக்கின்றன, மேலும் அவை பெரும்பாலும் பல்வேறு நோய்களுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுகின்றன. இந்த ஊதா நிற பெர்ரி மன அழுத்தத்தை எதிர்த்துப் போராட உதவுவதோடு உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தின் உள் செயல்பாடுகளை மேம்படுத்துகிறது.
சிப்பிகள்
கடல் உணவு பிரியர்களுக்கு இது ஒரு பரிசு. சிப்பிகள் கலோரிகளில் குறைவாக இருந்தாலும் ஊட்டச்சத்து மதிப்பு நிறைந்தவை. அவை ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் புரதங்களின் சிறந்த மூலமாகும். சிப்பிகளை உட்கொள்வது உங்கள் நோயெதிர்ப்பு அமைப்பு தொடர்ந்து இயங்குவதை உறுதி செய்யும், அவற்றில் உள்ள துத்தநாகம் (Zinc), நீரிழிவு அபாயத்தையும் குறைக்கின்றன.
கீரை
கீரை உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது என்பதில் எந்த மர்மமும் இல்லை, ஆனால் வெளிப்படையாக, இந்த ஊட்டச்சத்து ஆதாரம் உங்கள் நோய் எதிர்ப்பு சக்திக்கு சிறந்தது. கீரை மெக்னீசியத்தின் சிறந்த மூலமாகும், இது நரம்பு செயல்பாடு, ஆரோக்கியமான இதயம், நல்ல இரத்த அழுத்தம் மற்றும் வலுவான தசைகளை பராமரிக்க தேவைப்படுகிறது.
தர்பூசணி
தர்பூசணி உங்கள் சருமத்தையும் முடியையும் ஆரோக்கியமாக வைத்திருப்பது மட்டுமல்லாமல், இது உங்கள் செரிமானத்தை மேம்படுத்துவதோடு, உங்கள் உடலில் ஏற்படும் வீக்கத்தையும் குறைக்கும்.
வைட்டமின் சி நிறைந்த பழங்கள்
ஒரு அறிக்கையின்படி, வைட்டமின் சி உங்கள் நோயெதிர்ப்பு சக்தியை 20 வழிகளில் அதிகரிக்கும்! இது உங்கள் வெள்ளை இரத்த அணுக்களை ஆரோக்கியமாக வைத்திருக்கவும், தேவையற்ற அல்லது மோசமான செல்களைக் கொல்லவும் மற்றும் எதிருடல்களின் உற்பத்தியை அதிகரிக்கவும் உதவும்.
மேலும் அறிந்து கொள்ள மேல் உள்ள தலைப்பை அழுத்தவும்
இது போன்ற சுவாரசியமான பதிவுகளுக்கும் கட்டுரைகளுக்கும் எமது உடல் ஆரோக்கியம் பக்கத்தை பார்வையிடுங்கள்.