எடை இழப்பு பெரும்பாலும் மெதுவான ஒரு செயற்பாடாகும், எனவே விளைவுகளை கொஞ்சம் விரைவுபடுத்த ஒரு வழி இருக்க வேண்டும் என்று அனைவரும் விரும்புகின்றனர். நல்லது, அதிக கலோரிகளை எரிக்கவும், உங்கள் பசியை அடக்கவும், உங்கள் தசையை மேம்படுத்தவும் டயட் செய்வதை விட பல மறைமுக வழிகள் உள்ளன.
ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றி வைக்கவும்
வெனிலா வாசனையுடைய மெழுகுவர்த்தியை கற்பனை செய்து பாருங்கள். இனிமையாக இருக்கிறது, அல்லவா? வெனிலாவானது ஐஸ்கிரீம் மற்றும் பேக்கிங்கில் ஒரு சுவை வகையாக பிரபலமானது. ஆனால் அதிசயமாக அது எடை இழப்புக்கு உதவுகிறது. ஒரு சுவையான வாசனையைச் சுற்றி நாம் நிறைய நேரம் செலவிடும் போது, அது நம் பசியைக் குறைக்கிறது.வெனிலா குறிப்பாக இனிப்புகள், அதிலும் சாக்லேட் மீதான விருப்பத்தை தடுக்கிறது. எனவே, வெனிலாவின் வாசனையுள்ள மெழுகுவர்த்தி/வாசனைப் புகை மூலம் உங்கள் வீட்டை நிரப்புவது பசியை தணிக்க ஒரு சிறந்த வழியாகும்.
தோலுரிக்காத பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுங்கள்
பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுவது உங்கள் ஆரோக்கியத்திற்கு நன்மையை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் தோலுடன் உட்கொள்ளும் போது அவை இன்னும் பலனளிக்கும். தோல்கள் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் நார்ச்சத்துக்களால் நிரம்பியுள்ளன, இது பசியைக் குறைக்க உதவுகிறது மற்றும் நீண்ட நேரம் உங்களை பூரணமாக உணர வைக்கிறது. நம் வயிற்றின் மைக்ரோஃப்ளோராவில் வாழும் நல்ல பாக்டீரியாக்களும் நார்ச்சத்துக்கு உணவளித்து கொழுப்பு அமிலங்களை உருவாக்குகின்றன, இது மனநிறைவு உணர்வை அதிகரிக்கும், இதனால் எடை இழப்பு ஊக்குவிக்கப்படும் .
போனஸாக, தோல்களை சாப்பிடுவது புற்றுநோய் மற்றும் அல்சைமர் போன்ற சில மோசமான நோய்களைத் தடுக்க உதவும்.
நீங்கள் சாப்பிடும் இடத்தில் ஒரு கண்ணாடியை வைக்கவும்
நாமே நாம் சாப்பிடுவதைப் பார்ப்பது நாம் எவ்வளவு சாப்பிடுகிறோம் என்பதில் வியத்தகு முறையில் ஆதிக்கம் செலுத்துகிறது. ஒரு ஆய்வு இதற்காக நடைபெற்றது. இந்த ஆய்வில் 185 மாணவர்கள் ஈடுபட்டனர், பாதி பேர் சாக்லேட் கேக் சாப்பிட்டனர், மற்ற பாதி ஒரு பழ சாலட் சாப்பிட்டனர். கண்ணாடியின் முன் கேக் சாப்பிட வேண்டிய மாணவர்கள், சாலட் சாப்பிடும் மாணவர்களைப் போலல்லாமல், தங்கள் உணவு நேரத்தை ரசிக்கவில்லை. வெளிப்படையாக, ஆரோக்கியமற்றதை அதிகமாக சாப்பிடுவது அல்லது சாப்பிடுவது போன்ற காட்சி உருவத்தை நாம் விரும்புவதில்லை, எனவே ஆரோக்கியமற்ற வழியில் நாம் ஈடுபடுவது குறையும்.
நேராக இருங்கள்
உங்கள் தோரணையை மேம்படுத்த நிறைய நல்ல காரணங்கள் உள்ளன. இது உங்களை மெலிதாகவும் உயரமாகவும் தோற்றமளிக்க உதவுகிறது, மேலும் இது உங்கள் வயிற்று தசைகளையும் பலப்படுத்துகிறது. இது உங்கள் ஆற்றல் அளவை மேம்படுத்தவும், உணவால் தூண்டப்பட்ட சோர்வில் இருந்து விடுபடவும் உதவும். இதனை நீங்கள் பழக்கமாக்கிக் கொண்டால், எடை இழப்பு துரிதப்படுவதோடு நீங்கள் நிற்கும் போதும் அமரும் போதும் கூட உங்கள் தசைகளிலும் எலும்பிலும் விடாது வேலை செய்து கொண்டு இருப்பீர்கள்.
ஃபிட்ஜெட் பழக்கங்கள்
தட்டுதல், ஓடுதல் ,அசைத்தல் , மாற்றுதல் மற்றும் குலுக்கல் – இந்த கூடுதல் இயக்கங்கள் அனைத்தும் நாள் முழுவதும் அதிக சக்தியை செலவழிக்கவும் அதிக கலோரிகளை எரிக்கவும் செய்கிறது. 100 முதல் 800 கலோரிகளுக்கு இடையில் கணிசமான அளவு வரை இது நடைபெறுகிறது. ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்ட பங்கேற்பாளர்களுக்கு ஒரு நாளைக்கு 1,000 கலோரிகளை அதிகமாக கொடுத்த போதும் கூட, இவ்வாறான குறும்பழக்கங்கள் எடை அதிகரிப்பதை மிகவும் திறம்பட எதிர்த்துப் போராட உதவுகிறது. எனவே,கை கால்களை அசைத்தல், பேனையை சுழற்றுதல், மேசையில் தட்டுதல் போன்ற வழக்கங்களை கொண்டு வாருங்கள்.
வைட்டமின் டி எடுத்துக் கொள்ளுங்கள்
வைட்டமின் டி உங்கள் நோயெதிர்ப்பு சக்தியை ஆதரிக்கவும், உங்கள் எலும்புகள் மற்றும் பற்களை வலுப்படுத்தவும் உதவுவது மட்டுமல்லாமல், இது உங்கள் உடல் கொழுப்பையும் பாதிக்கிறது. இது கொழுப்பு செல்கள் உருவாகுவதையும், சேமித்து வைப்பதையும் அடக்குவது மூலம் அல்லது பசியைக் கட்டுப்படுத்த உதவும் செரோடோனினை உற்பத்தி செய்வதன் மூலம், வைட்டமின் டி வேலையைச் செய்கிறது. எனவே, இந்த வைட்டமின் நிறைந்த முட்டை, காளான்கள் மற்றும் மீன்களை அதிகம் உண்ண முயற்சிக்கவும். சத்தான முறையில் உடல் எடை இழப்புக்கு இது உதவும்.
குதிக்கால் பாதணிகளை அணியுங்கள்
ஹை ஹீல்ஸ் அணிவது உங்கள் கால்களையும் முதுகெலும்பையும் ஒரு நாள் முழுமைக்கும் நெறிப்படுத்த உதவுகிறதாம். உங்கள் தோரணையை நேராக வைத்திருக்க வேண்டும் (இது ஒரு உடற்பயிற்சி) மற்றும் உங்கள் கெண்டைக்கால் தசைகளை வடிவமைக்கவும், அவற்றின் வலிமையையும் மேம்படுத்தவும் இவை உதவும். எனவே, இவற்றை அணிந்து நடக்கும் எளிய செயல் தினசரி கலோரி எரிப்பில் நியாயமான பங்கைக் கொண்டுள்ளது. ஆனால், ஹை ஹீல்ஸ் தொடர்ந்து அணிவதால் ஏற்படும் உடல்நல அபாயங்கள் குறித்து கவனமாக இருங்கள்.
அதிக காரம் சாப்பிடுங்கள்
உங்கள் உணவில் அதிக சூட்டை அறிமுகப்படுத்துவதைக் கவனியுங்கள்: காரமான உணவு பசியைக் குறைப்பதற்கும் ஆற்றல் செலவினங்களை அதிகரிப்பதற்கும் ஒரு பெரிய உதவியாக இருக்கும். எடுத்துக்காட்டாக, கறுப்பு மிளகு கொழுப்பு செல்கள் உருவாகுவதைத் தடுக்கிறது, இஞ்சி மற்றும் இலவங்கப்பட்டை இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகின்றன. மஞ்சள் மற்றும் சீரகம் கொழுப்பை எரித்து எடை இழப்புக்கு உதவுகின்றன, மற்றும் மிளகு உங்கள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும்.
மேலும் அறிந்து கொள்ள மேல் உள்ள தலைப்பை அழுத்தவும்
இது போன்ற சுவாரசியமான பதிவுகளுக்கும் கட்டுரைகளுக்கும் எமது உடல் ஆரோக்கியம் பக்கத்தை பார்வையிடுங்கள்.