Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
Likes
  • எங்களை பற்றி
Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
youtube trees

Youtube பிரபலங்கள் 20 மில்லியன் மரங்களை நடுகிறார்கள்

  • May 26, 2020
  • 435 views
Total
1
Shares
1
0
0

மரங்கள் நமது உயிருக்கு அத்தியாவசியமான விடயங்கள். இன்று மனிதன் மட்டுமல்லாமல் வேறெந்த உயிரினமும் வாழத்தகுந்த இடமாக புவியை மாற்றியிருப்பது மரங்கள்தான். நாம் எதிர்பார்ப்பதைப் போல் அல்லாமல் நீர், காற்று, உணவு என அனைத்து வகையிலும் மரங்களே நம்மைக் காக்கின்றன. அவ்வாறான மரங்கள் தற்காலத்தில் அழிவுக்கு உட்படுவது மிகவும் கொடுமையான விடயமாகும். இதனை தடுக்க youtube பிரபலங்கள் எடுத்த நடவடிக்கை மெய்சிலிர்க்க செய்வது.

இந்த தசாப்தம் முடிவடையும்போது, இந்த உலகத்துக்கு நல்ல ஒரு மாற்றத்தை உருவாக்கியிருக்க வேண்டும் – Mark Robber

யாரந்த youtube பிரபலங்கள் ?

TeamTrees என அழைக்கப்படும் ஒரு நிதிதிரட்டும் அமைப்பானது 2019 ஆம் ஆண்டு  20,000,000  மரங்களை நட முடிவு செய்தது. இந்த திட்டம் அமெரிக்க youtube பிரபலங்களான MrBeast மற்றும் MarkRober ஆகிய இருவரும் இணைந்து ஆரம்பித்தது. The Arbor Day எனப்படும் அதிக காலமாக செயற்படும், நம்பிக்கைக்குரிய, சேவை நோக்கம் கொண்ட மரம் நடும் அமைப்பானது இந்த திட்டத்தை பொறுப்பெடுத்தது.

Youtube பிரபலங்கள் 20 மில்லியன் மரங்களை நடுகிறார்கள்
டீம் ட்ரீஸ் – Mr beast குழு மற்றும் MArk robber

image source : https://www.digitalinformationworld.com/2019/12/youtubers-and-tech-executives-helped-mrbeast-raise-20-million-for-team-trees-plantation-campaign.html

நன்கொடையளிக்கப்படும் ஒவ்வொரு டொலருக்கும் ஒரு மரம் நடுவதாகவும், 2020 ஜனவரியில் ஆரம்பித்து  2022 டிசம்பருக்குள் முடிப்பதாகவும் ஒப்புக்கொண்டது. இந்தளவு மரங்களும் இணைந்து மொத்தமாக நூற்றெண்பது சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பையே பிடிக்குமெனவும், ஆனால் 1.6 மில்லியன் டன் காபனை வளியிலிருந்து உறிஞ்சுமெனவும், 116,000 டன் இரசயான வளி மாசை அகற்றுமெனவும் எதிர்வுகூறப்படுகிறது.

இந்த திட்டம் 2019 டிசம்பருக்குள் இருபது மில்லியன் டொலரைக் கடந்து சேர்த்து விட்டது. இவ்வருடம் மே மாதத்தில் 22 மில்லியன் டொலர்களை சேர்த்து விட்டது. இன்னும் பணம் சேர்கிறது. சேரச் சேர அதிகமாக நடுவோம் என்கிறார்கள்.

பின்னணி

MrBeast என அழைக்கபடும் ஜிம்மி டொனல்ட் 20 மில்லியன் Youtube சந்தாதாரர்களை பெற்றதை கொண்டாட என்ன செய்ய வேண்டும் எனக் கேட்டபோது, அவரது விசிறி ஒருவர் Reddit இல் பரிந்துரைத்த இந்த திட்டம் எல்லா வலைத்தளங்களிலும் மீம்ஸ் ஆக புகழடைய அனைவராலும் ஆதரவளிக்கப்பட்டு அவரது உறவினரும் Youtube பக்கம் நடாத்தும் முன்னால் நாஸா விஞ்ஞானியும், படைப்பாளரும், கண்டுபிடிப்பாளருமான Mark Robber இணைந்து கொள்ள இருவரும் நேரடியாக இந்த நிதி திரட்டலை ஆரம்பித்தனர்.

“இந்த தசாப்தத்தில் இயற்கை அதிக அழிவை சந்தித்து விட்டது. அமேசான் அதிகளவு எரிந்து விட்டது. அது மட்டுமல்லாமல் வெறுமனே இணையப் பகிரல் செய்யும் தலைமுறையாக நம்மை சித்தரிக்கிறார்கள். நமக்கு இயற்கை மீதுள்ள காதலை வெளிப்படுத்தும் தருணமிது.” – MrBeast

25 ஒக்டோபர் 2019 இல் இதனை விளக்கி ஓர் காணொளி பதிவிட அது Youtubeன் டிரென்டிங்காக மாற பல பிரபலங்கள் இணைந்தனர்.

எவ்வாறு செய்கிறார்கள் ?

இவர்கள் மட்டும் ஒவ்வொன்றாக கைகளால் நட்டால் மனித ஆயுள் போதாது. ஆகவே புதிய முறைகளை சிந்தித்தவர்களுக்கு drone seed எனும் நிறுவனம் கைகொடுத்தது. அவர்கள் ஆள் அளவு பெரிய ட்ரோன்களைக் கொண்டு அவற்றுக்குள் மர விதைகளை வைத்து மனிதர்கள் நடந்து செல்ல முடியாத இடங்களில் கூட வானிலிருந்து விதைகளை வீழ்த்தி முளைக்கச் செய்ய முயற்சித்தனர். எவ்வாறு ஒரு பறவை எச்சம் தானாக விழுந்து மரமாகிறதோ அதைப்போலவே இதுவும்.  ஆனால் அதிலும் நிச்சயம் எல்லா மரங்களும் வளர்வதை உறுதிப்படுத்த முடியவில்லை.

ஆக, இறுதி நேரத்தில்  The Arbor Day நிறுவனம் உதவவே இரண்டு ஆண்டுகளுக்குள் கைகளால் நட்டு முடிக்க முடிவெடுத்தனர்

Youtube பிரபலங்கள் 20 மில்லியன் மரங்களை நடுகிறார்கள்
Arbor day அமைப்பு

Image source : https://okcoop.org/oec-named-tree-line-usa-by-arbor-day-foundation/

யாரெல்லாம் பங்களித்துள்ளனர் ?

உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்புள்ள Youtube பிரபலங்களாக,

  • PewDiePie –      உலகில் அதிக சந்தாதாரர்களை கொண்டவர்.
  • Rhett & Link –           நகைச்சுவை நிகழ்ச்சிகள்
  • Marshmello –           அமெரிக்க DJ கலைஞர்
  • iJustine –         தனி நிகழ்ச்சி நடத்துபவர்
  • Marques Brownlee – தொழில்நுட்பம் சார் காணொளி பதிவாளர்
  • The Slow Mo Guys – மெது நகர் காணொளிகளை உருவாக்குவோர்
  • Ninja –           இலத்திரனியல் விளையாட்டுப் பிரபலம்
  • Simone Giertz –     கண்டுபிடிப்பாளர்
  • Jacksepticeye –     நடிப்பு மற்றும் நகைச்சுவை காணொளிகள்
  • Smarter Every Day – விஞ்ஞான விளக்கக் காணொளிகள்
  • Simply Nailogical –   அழகுசாதனப் பொருள் காணொளிகள்
  • The King of Random- வித்தியாசமான கண்டுபிடிப்புகள் மற்றும் ஆய்வுகள்
  • The Try Guys –      நகைச்சுவைத் தொடர்
  • Alan Becker –       பிரபலமான அனிமேஷன் தொடரை இயக்கியவர்
  • Alan Walker –            உலகப் புகழ் பாடகர்
  • TheOdd1sOut  –     வரைகலைஞர்
  • Linus Tech Tips –     தொழில்நுட்பம்

தொழில் வல்லுனர்களாக ,

  • Elon Musk –     SpaceX, Tesla உள்ளிட்ட 5 நிறுவனங்களின் உரிமையாளர்
  • Tobias Lütke –   Shopify எனப்படும் உலகின் தலைசிறந்த இணைய விற்பனைத் தளத்துக்கு உரிமையாளர்
  • Marc Benioff –   SalesForce நிறுவனத்தின் தாபகர்
  • Susan Wojcicki – Youtube இன் தலைமை நிறைவேற்று அதிகாரி
  • Jack Dorsey –    twitter நிறுவனத்தின் உப நிறுவனர் மற்றும் தலைமை நிறைவேற்று அதிகாரி
  • Jean-Michel Lemieux – அமெரிக்க ஓவியர்

நமக்கு தெரிந்த சில சுவாரசியமான நன்கொடைகள்,

  • டிஸ்கவரி தொலைக்காட்சி நிறுவனம், ஒரு லட்சம் பேர் TeamTrees நிதியம் பற்றிய தமது “Watch and Plant”  நிகழ்வை தொலைக்காட்சியில் பார்த்தால் , குறைந்தது, ஒரு லட்சம் டொலர்கள் அளிப்பதாக கூறியது.  அதன்படி 120,000 டொலர்களை அளித்தது.
  • PewDiePie தனது பங்காக பணமளிக்கும் போது நகைச்சுவையாக இருக்கவேண்டும் என்பதற்காக, இணைய உலகில் இரட்டை பொருளில் பயன்படும் இலக்கங்களான 69 மற்றும் 420 என்பவற்றை இணைத்து  69,420  டொலர்களை அளித்துள்ளார்.
  • இதனை உருவாக்கிய மார்க் ரொபர் 50,000 டொலர்களை அளித்துள்ளார்.
  • இதனை இணைந்து உருவாக்கிய MrBeast 100,000 டொலர்களை அளித்தபோது, Alan Walker  100,001 டொலர்களை அளித்தார். தான் ஆரம்பித்த விடயத்தில் தான் மேல இருக்க ஆசைப்பட்ட beast  100,002  டொலர்களை மீண்டும் அளித்தார். இத்தோடு இவர்களது விளையாட்டு நின்றது.
  • ட்விட்டரில் இதுபற்றி அறிந்த Elon Musk 1,000,000 அமெரிக்க டொலர்களை அளித்ததோடு, டுவிட்டரில் தனது பெயரை Treelon, அதாவது Tree + elon என மாற்றிக்கொண்டார். அது மட்டுமல்லாது, மரத்தின் படத்தை தனது முகப்படமாகவும் வைத்தார்.
View this post on Instagram

i'm not crying you're crying⠀ . Thank you #MarcBenioff!! …⠀ … Every dollar, every peso, every rupee counts.⠀ . you are #TeamTrees. ⠀ . you are making this real.⠀ . teamtrees.org #treelon #InspiredByTreelon #TheLorax #WeAreGroot

A post shared by #TeamTrees (@teamtrees) on Nov 7, 2019 at 4:51pm PST

  • இங்கு மீண்டும் சிறுபிள்ளைத்தனமான விளையாட்டை Tobias Lütke நடத்தினார். elon musk ஐ விட ஒரு டொலர் அதிகரித்து 1,000,001 டொலர்களை அளித்தார். என்ன விளையாடினாலும், காரணம் நல்லது என்பதனால் ரசிக்க முடிகிறது.
  • Plants vs. Zombies எனப்படும் செல்லிடத்தொலைபேசி விளையாட்டு நிறுவனமானது 5 லட்சம் டாலர்களை அளித்தது.

எது எவ்வாறாக இருந்தால் என்ன, இன்றைய இளம் தலைமுறையாக இருக்கும் youtube பிரபலங்கள் மற்றும் முக்கியமாக இந்த திட்டத்தை கொடுத்த அந்த விசிறியாக இருக்கட்டும், இதனை மக்களிடையே கொண்டு சேர்த்த மீம் உருவாக்கிகளாக இருக்கட்டும் அவர்கள் ஒவ்வொருவரும் தனித்தனியே இந்த உலகத்துக்கு தம் பாசத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

இதே போல உலகத்தை காக்க மார்க் மற்றும் பில் கேட்ஸ் இணைந்து வெளியிட்ட கருத்தை பாருங்கள்.



Image source: https://medium.com/get-laid-beds/what-is-teamtrees-and-how-did-youtube-persuade-elon-musk-to-donate-1-million-in-trees-4425f2294334

Post Views: 435
Total
1
Shares
Share 1
Tweet 0
Pin it 0
abiesshva

Previous Article
ஒலிம்பிக்

ஒலிம்பிக் தடகளப் போட்டிகளும் : முன்னுதாரணமான 5 கதைகளும்

  • May 26, 2020
View Post
Next Article
நீங்கள் நீண்ட நேரம் உட்கார்ந்திருந்தால், இதைப் பற்றி சிந்தியுங்கள்…

நீங்கள் நீண்ட நேரம் உட்கார்ந்திருந்தால், இதைப் பற்றி சிந்தியுங்கள்…

  • May 26, 2020
View Post
You May Also Like
இயற்கை
View Post

இயற்கை அழகுசாதனப் பொருட்களை அளவுக்கு மீறி பயன்படுத்தினால் என்ன ஆகும்?

இயல்பாய்
View Post

இயல்பாய் மலரட்டும்..!

பால்குடம்
View Post

பால்குடம் எதற்காக எடுக்கப்படுகிறது? அதன் நன்மைகள் என்ன?

இதோ
View Post

இதோ எளிய மாற்றங்களைச் செய்து உங்களது சிறந்த தோற்றத்தைப் பெறலாம்..!

ஐயப்ப
View Post

ஐயப்பனுக்கு நெய் கொண்டு செல்வது ஏன்?

ஐயப்பனின்
View Post

ஐயப்பனின் பதினெட்டு படி உணர்த்தும் குணங்கள்..!

துணையை விட்டு தனியாக உறங்குவது உங்கள் உறவைப் பலப்படுத்தும் 5 வழிகள்
View Post

துணையை விட்டு தனியாக உறங்குவது உங்கள் உறவைப் பலப்படுத்தும் 5 வழிகள்

சபரி
View Post

சபரிமலையில் நடக்கும் இந்த விஷயங்கள் உங்களுக்கு தெரியுமா?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe

Subscribe now to our newsletter

Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்

Input your search keywords and press Enter.