இணைய வாசகர்களுக்கு இனிய வணக்கங்கள்!!
நமது பூகோளம் செல்லும் காலம் புரிந்தன யாவும் அலங்கோலம் அறிவியல் வளர்ச்சியில் மனித உடலின் ஏற்படும் கிளர்ச்சிகளை
நினைத்துப் பார்க்கையில் உயிர்நாடி திகைக்கிறது.
இவற்றுள் மனித வர்க்கத்தை பெரும்பாலும் பாதிப்படையச் செய்வது கையடக்கத் தொலைபேசியே என்பது ஆய்வாளர்களின் கணிப்பு.
நம் கண்களுக்குத் தெரியாத விடயங்கள் நம் உயிருக்கு ஆபத்தாக அமைகின்றன என்று சொன்னால் ஏற்றுக்கொள்ள கஷ்டமாகத்தான் இருக்கும். ஆனாலும் உலகை ஆட்டிப் படைக்கின்ற கொடிய ஆட்கொல்லி நோய்களை உருவாக்குகின்ற வைரஸ்கள் கண்ணுக்கு தெரியாதவை.
அதேபோல ஒட்டுமொத்த உலகையே அழிக்க கூடிய அணு குண்டு வெடிப்பதற்கு காரணமாக அமைகின்ற அணுப்பிளவு கண்ணுக்குத் தெரியாத ஒரு செயற்பாடு.
நம்முடைய உணவுகளையெல்லாம் பழுதடைய வைத்து நம்மை உணவு பாதுகாப்புக்காக அதிக அளவு செலவழிக்க செய்யும் பாக்டீரியா போன்ற உயிரினங்கள் கண்ணுக்குத் தெரியாது.
அதேபோலத்தான் நம் கண்களுக்கு தெரியாத இந்த கதிர்வீச்சுக்கள் என்பன மிக மிக ஆபத்தானவை.
அவை மனித உடலுக்கு பாதிப்பாக அமைவதற்கு அவற்றில் இருந்து வெளிவரும் கதிர்வீச்சுதான் முக்கிய காரணம். இதனால் புற்றுநோய், மாரடைப்பு, மூளைசார் நோய்கள் என பல உடலியல் பாதிப்புக்கள் ஏற்படுவதனை பல சுகாதார நிறுவனங்கள் ஆய்வு செய்து வருகின்றன.
ஐக்கிய அமெரிக்காவின் தொடர்பாடல் மற்றும் இணைய ஆய்வு மையத்தால் மேற்கொள்ளபட்ட கணக்கெடுப்பின்படி அந்நாட்டில் 2006 ஆம் ஆண்டின் 110 மில்லியனாக இருந்த கையடக்க தொலைபேசி பாவனையானது 2010 ஆம் ஆண்டின் போது கிட்டத்தட்ட மூன்றுமடங்காக 303 மில்லியனாக அதிகரித்துள்ளது.
தொலைபேசியில் இருந்து வெளிவரும் கதிர்வீச்சு ரேடியோ மீடிறன் என அழைக்கப்படுகிறது. சர்வதேச புற்றஉனை விழிப்புணர்வு நிறுவனம் கூறியுள்ள விடயம் யாதெனின் இக்கதிர்வீச்சானது மூளையையும் மற்ற திசுக்களையும் பாதிப்படையச் செய்வதோடு ஓமோன் சுரப்பையும் இனப்பெருக்கத்தொகுதி என்பவற்றையும் கூட பாதிக்க வல்லது என்பதனை நினைவில் கொள்ள வேண்டும் என்பதாகும்.
அண்மையில் வெளிவந்திருந்த சங்கரின்2.0 திரைப்படத்தில் கூட இவ்வாறான பாதிப்புகளால் பறவைகளுக்கு ஏற்படும் பிரச்சினைகள் தொடர்பாக விளக்கப்பட்டிருந்தது.
தூங்கும்பொழுது பக்கத்தில் செல்போனை வைத்துக்கொண்டு படுப்பது, தொடர்ச்சியாக தொலைபேசியிலேயே நிறைய நேரம் செலவழிப்பது அதனை காதில் வைத்து அதிக நேரம் கதைப்பது போன்ற விடயங்கள் மூளை மற்றும் நரம்பியல் சம்பந்தமான பிரச்சனைகளை உண்டாக்குவதில் அதிக பங்களிப்பு செலுத்துவதாகவும் இது சில வேளைகளில் புற்றுநோயாக கூட மாறக்கூடும் என்றும் கூறியிருக்கிறார்கள்.
இந்தக் கதிர்வீச்சுகளின் அபரிமிதமான சக்தி காரணமாக தொடர்ச்சியாக பயன்படுத்தும் பொழுது உங்களுடைய செல்லிடத் தொலைபேசி ஆனது சூடாகி அதன் மூலம் மேலும் கதிர்வீச்சு வெளிவர வாய்ப்பு இருக்கிறது.
எனவே எமது உயிரையும் உடல் நலத்தையும் பாதுகாப்போம்.
image source:https://nypost.com/2018/08/13/your-phone-is-blinding-you-scientists-warn/