இந்த நாட்களில் ஐபோனுக்கான யூ.எஸ்.பி சி(USB type C port) வகை போர்ட்டைப் பயன்படுத்தாதது குறித்து எல்லோராலும் அதிகமாக பேசப்பட்டு வருவதை நீங்கள் ஏற்கனவே அறிந்திருக்கலாம்.
நாம் ஏற்கனவே குறிப்பிட்டது போல ஐரோப்பிய ஒன்றியம் இது தொடர்பாக
தரநிலைகளை உருவாக்க முயற்சிப்பதும், ஆப்பிள் சாதகமாக பதிலளிக்காததும் இதற்குக் காரணமாக இருக்கலாம் என கருத்தபடுகிறது.
இதற்கிடையில், சுவிஸ் ரோபோட்டிக்ஸ் மாணவர் கென் பில்லோனெல்(Ken Pillonel) வடிவமைத்த USB C வகை, ஐபோன் X இற்காக eBay இல் நடந்த ஏலத்தில் $ 86,001 வரை விற்கப்பட்டது.
அவர் ஐபோன் X இல் உள்ள நிலையான மின்னல் போர்ட்டை அகற்றிவிட்டு(standard lightning port), அதற்கு பதிலாக USB Type-C போர்ட் மூலம் போனை மறுவடிவமைப்பு செய்தார்.
இவ்வாறு மறுவடிவமைப்பு செய்யப்பட்ட iPhone X eBay இல் ஏலம் விடப்பட்டது, இதன் போது 116 க்கும் மேற்பட்ட ஏலங்கள் பெறப்பட்டது என்பது ஒரு குறிப்பிடத்தக்க ஒரு விடயமாகும்.
கடந்த வாரம் இதன் விலை $ 85,000 ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்தது, நவம்பர் 11 அன்று ஏலம் முடிவடையும் போது, அது $ 86,001 ஆக உயர்ந்திருந்ததை நம்மால் காண முடிந்தது.
இருப்பினும், சாதனத்தை வாங்கும் எந்தவொரு பயனரும் மீட்டமைத்தல்(Reset), OS ஐப் புதுப்பித்தல் அல்லது தரவை நீக்குதல் போன்றவற்றைச் செய்யக்கூடாது, அவ்வாறு செய்தால் சாதனம் வேலை செய்யாமல் போகும் அபாயம் உள்ளது என்றும் Piloner எச்சரிக்கிறார்.