இந்திய திரைப்படம் ஒன்றில் உலகப் புகழ்பெற்ற பிரபல குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் முதல் முறையாக நடித்த உள்ளதால் ரசிகர்கள் பெரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
நடிகர் விஜய் தேவரகொண்டாவின் லைகர் படத்தில் குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் நடிக்கிறார்.
இதற்கான அறிவிப்பை அதிகாரபூர்வமாக அறிவித்து இருக்கின்றது படக்குழு. கடந்த ஆண்டு வெளியான வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர் படத்திற்கு பிறகு விஜய் தேவரகொண்டா பிரபல இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் லைகர் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை பிரபல தயாரிப்பாளர் கரண் ஜோகர் நடிகை சார்மி பூரி, ஜெகன்நாத் இணைந்து தயாரிக்கிறார்கள்.
தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம்,கன்னடம் உள்ளிட்டப் பல மொழிகளில் வெளியாகும் இந்தப் படத்தில் சர்வதேச குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் இணைந்திருக்கிறார். முதன் முறையாக மைக் டைசன் நடிக்கும் முதல் இந்திய படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
Mixed Martial Arts நிபுணர் பற்றிய இந்த கதையில் Iron Mike எனும் முக்கியமான கதாபாத்திரத்தில் அவர் நடிக்கிறார்.
தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு கோவாவில் நடைபெற்று வருகிறது விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக அனன்யா பாண்டே நடிக்கிறார். ரம்யா கிருஷ்ணன், ரோனித் ராய், விஷ்ணு ரெட்டி , பாண்டே மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
குத்துச்சண்டை விளையாட்டின் கடவுளான மைக் டைசன் இந்தியாவிலே முதல் தடவையாக லைகர் திரைப்படத்தில் நடிப்பதாக திரைப்படத்தின் கதாநாயகன் விஜய் தேவரகொண்டா சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.