ஒரே நாவல் மூன்று வித்தியாசமான தயாரிப்புகளாக வெளிவர உள்ளது. ஆம். பொன்னியின் செல்வன் எனும் கல்கியின் நூலை, மணிரத்தினம் படமாக்கி வரும் நிலையில், சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் சிரஞ்சீவி ஆகியோர் வெப் சீரிஸாக தனித்தனியாக வெளியிட உள்ளனர்.
விநாயக சதுர்த்தியையொட்டி, சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது புதிய வலைத் தொடரை கல்கி கிருஷ்ணமூர்த்தியின் வரலாற்று நாவலான பொன்னியின் செல்வன் அடிப்படையில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
பொன்னியின் செல்வன் – தழுவல்கள்
புது வெள்ளம் – பொன்னியின் செல்வனெனும் என்ற தலைப்பில், இந்த தொடர் எம்எக்ஸ் பிளேயர் ஒரிஜினலாக தயாரிக்கப்படுகிறது. சௌந்தர்யா வழங்கிய இந்தத் தொடரை ஷரத் ஜோதி திரைக்கதை எழுதி இயக்குகிறார். பொன்னியின் செல்வன் புத்தகத்தின் முதலாவது பாகம் புது வெள்ளம் என்ற பெயரைக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
சௌந்தர்யா டீவ்ட் செய்துள்ள படி,
“ஒவ்வொரு திட்டத்திற்கும் ஒரு பயணம் மற்றும் ஒரு விதி உள்ளது. இந்த நல்ல நாளில், பல தடைகளுக்குப் பிறகு பகிர்ந்துகொள்வதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.
நாங்கள் எங்கள் வெப் சீரிஸை , புது வெள்ளம் சீசன் இனை தயாரிக்கிறோம்.
சரத் ஜோதி தலைமையிலான எனது திறமையான குழுவுடன் அடுத்த படிகளுக்கு நகர ஆவலாக உள்ளேன் என தெரிவித்துள்ளார்.
இது பொன்னியின் செல்வனை அடிப்படையாக கொண்ட அறிவிக்கப்பட்ட மூன்றாவது திட்டம். மணிரத்னம் ஏற்கனவே இரண்டு பாகங்கள் கொண்ட ஒரு படத்தை நட்சத்திர நடிகர்கள் மற்றும் குழுவினருடன் இணைந்து இயக்கி வருகிறார். முதல் பாகம் 2022 இல் வெளியிடப்பட உள்ளது.
அதேபோல், சிரஞ்சீவி நடிப்பில் பொன்னியின் செல்வன் என்ற தலைப்பில் 125 அத்தியாயங்களை அஜய் பிரதீப் அறிவித்துள்ளார். இதற்கு இளையராஜா இசையமைக்கிறார், முறையே சாபு சிரில் மற்றும் ஆண்டனி கலை இயக்கம் மற்றும் எடிட்டிங் ஆகியவற்றைக் கையாள்வார்கள். இந்தத் தொடரை Eternitee Motion Krafte Pvt Ltd மற்றும் Eterneity Star ஆகியவை இணைந்து தயாரித்துள்ளன.
இதுபோன்ற சுவாரசியமான சினிமா செய்திகளுக்கு எமது சினிமா பக்கத்தை நாடவும்.
4000+ இதயங்களின் ஆதரவுடன் தினமும் தமிழ் சமூகத்தின் அறிவுத்தாகத்தை தீர்க்கும் நமது பக்கத்தின் பேஸ்புக் பக்கத்தில் எம்மோடு இணைந்து கொள்ளுங்கள்