டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான
எலான் மஸ்க் மனித வடிவிலான ரோபோவை அறிமுகப்படுத்தியுள்ளார்.
உலகின் புகழ்பெற்ற அறிவியல் தொழில்நுட்ப நிறுவனமாக உள்ளது டெஸ்லா நிறுவனம். எலான் மஸ்க் தலைமை செயல் அதிகாரியாக உள்ள இந்த நிறுவனம் காலமாறுதலுக்கேற்ப தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி புதிய கண்டுபிடிப்புகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் எந்திரன் திரைப்படத்தில் வருவது போன்ற மனித வடிவிலான ரோபோவை எலான் மஸ்க் அறிமுகப்படுத்தியுள்ளார்.
டெஸ்லா போட் என பெயரிடப்பட்ட இந்த ரோபோக்களை மனிதர்கள் மேற்கொள்ளும் அன்றாட பணிகளில் ஈடுபடுத்த முடியும் என எலான் மஸ்க்
தெரிவித்தார்.
5.8 அடி உயரமும் 20.41 கிலோ எடையும் கொண்ட இந்த வகை ரோபோக்களை கார் உற்பத்தி தொழிற்சாலைகளில் பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் இந்த வகை ரோபோக்கள் மூலம் மனிதர்கள் தங்களின் சலிப்பட்டும் வழக்கமான பணிகளில் இருந்து விடுபட முடியும் என எலான் மஸ்க் நம்பிக்கை தெரிவித்தார்.