சுல்தான் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் கார்த்தி அடுத்ததாக இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் தயாராகி வரும் சர்தார் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தில் கார்த்தியுடன் நடிகைகள் ராஷிகண்ணா மற்றும் கர்ணன் படப் புகழ் நடிகை ரஜீஷா விஜயன் என இரண்டு நடிகைகள் ஜோடியாக நடிக்கிறார்கள்.
”இரும்புத்திரை” ”ஹீரோ” ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் பி.எஸ் மித்ரன் இயக்கும் இந்த படம் குறித்து அவர் பேசுகையில் சர்தார் படம் உளவாளிகளைப் பற்றிய த்ரில்லர் திரைப்படம் இதில் நடிகர் கார்த்தி ‘மோர்ஸ் கோட்’ எனப்படும் கண்களால் உலக செய்தியைக் கடத்துபவராக நடிக்கிறார்.
இதன் அடிப்படையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் அமைக்கப்பட்டிருந்தது இதனை கண்டறிந்து ரசிகர்கள் பாராட்டியது உற்சாகத்தை அளித்தது.
படத்தில் நடிகர் கார்த்தி இரட்டை வேடத்தில் நடிக்கிறார் என்றார்.
சிறுத்தை, காஷ்மோரா ஆகிய படங்களை தொடர்ந்து நடிகர் கார்த்தி இரண்டு வேடங்களில் நடிக்கும் மூன்றாவது படமான சர்தார் படமும் ஹாட்ரிக் வெற்றியை பெறும் என்று எதிர்பார்க்கலாம்.
இதனை உறுதிப்படுத்தும் வகையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் ஒன்றரை மில்லியன் பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்திருக்கிறது.