இணைய வாசகர்களுக்கு இனிய வணக்கங்கள்!! இணையத்தில் படித்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றோம். தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்.
கர்ப்பிணிப் பெண்கள் நல்ல விஷயங்களை பார்க்க வேண்டும், கேட்க வேண்டும், சிந்திக்க வேண்டும் என கூறுவார்கள். கருவுற்று இருக்கும் பெண் மிக ஆழமாக எதைப் பார்க்கின்றாளோ, எதை நேசிக்கின்றாளோ அதுவே குழந்தையின் அகப்புறச்செயலாக அமையும்.
இன்றைய விஞ்ஞானம் கருவில் இருக்கும் குழந்தை வயிற்றுக்குள் இருந்தபடி சிறு ஓசையையும் கேட்கும் திறனை பெற்றிருக்கும்.
தொடர்ச்சியாக ஒரே மாதிரியான ஒலியைக் கருவில் உள்ள குழந்தை கேட்குமானால் பிறந்து வளரும் காலத்தில் அந்த ஓசையின் மீது மனம் அறியாமலேயே லயித்து விடும்.
அதனால் தான் எதிர்மறையான சத்தங்களை கர்ப்பிணிகள் கேட்காமல் தடுக்கப்படுகின்றன.
மரம் வெட்டும் சத்தம் எப்படி எதிர்மறை சத்தமாகும்? என சிந்திக்கலாம்
மரங்களின் இயல்பை மிக நீண்ட காலமாக ஆராய்ந்தவர்கள், மரங்கள் தங்களுக்குள் சில ஒலி அதிர்வுகளின் மூலம் பேசிக் கொள்வதாக கண்டறிந்துள்ளார்கள்.
நீர் பாய்ச்சுபவரை கண்டவுடன் ஒரு மாதிரியாகவும், மரம் வெட்டுபவரை கண்டவுடன் வேறு மாதிரியாகவும் ஒலி எழுப்புவதாக சொல்லப்படுகிறது. அந்த ஒலி அதிர்வுகள் மனித காதுகளால் கேட்க முடியாத அளவுக்கு அதிவேகத்துடன் இருக்கும்.
கர்ப்பிணிகள் ஏன் பார்க்கக்கூடாது?
மரம், தான் வெட்டப்படும்போது தனது வேதனையை பலவிதமான அதிர்வுகளாக வெளியிடும். வயிற்றுக்குள் இருக்கும் குழந்தை இந்த அதிர்வுகளை உள்வாங்கி கொள்வதில் வல்லதாக இருக்கிறது.
மரண அதிர்வுகள் குழந்தையால் உணரப்படுமேயானால் வளரும்போது குழந்தைக்கு மரண பயமும், நம்பிக்கையின்மையும், கோழைத்தனமும் அடிக்கடி மேலோங்க வாய்ப்புள்ளது. அதனால்தான் மரம் வெட்டுவதை கர்ப்பிணிகள் பார்க்கக்கூடாது என சொல்லப்படுகின்றது.
இதற்கு வேறொரு காரணத்தையும் கூறலாம். ஓங்கி உயர்ந்து நிற்கும் மரம் வெட்டப்பட்டு சாய்ந்து விழும்போது தன் மீது விழுந்து விடுமோ என கர்ப்பிணிப் பெண்கள் பயப்படலாம். திடீரென ஏற்படும் அதீதமான பயம் வயிற்றிலிருக்கும் குழந்தையின் மூளை நரம்புகளைப் பாதிக்கக்கூடும். இதனாலும் மரம் வெட்டுவதைப் கர்ப்பிணிகள் பார்க்கக்கூடாது என சொல்லப்பட்டது.