Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
Likes
  • எங்களை பற்றி
Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்

கலப்படம் செய்த பேராசைக்காரன் : வாட்ஸ்அப் தத்துவக்கதைகள் | க11

  • February 13, 2021
  • 296 views
Total
1
Shares
1
0
0

அன்றைய காலங்களில் பழமொழிகளும் வாய்வழிக் கதைகளும் போல இன்று வாட்ஸ்அப் கதைகள் பரவுகின்றன. யார் உருவாக்கினார் என்பது குறிப்பிடப்படாத பட்சத்தில் தெரியாமல் இருக்கும் இக்கதைகள் பொதுவாக நகைச்சுவைகள், மக்களது வாழ்வியல் மற்றும் தத்துவங்களைக் கூறுகின்றன. அவ்வாறான சுவாரசியக் கதைகளை உங்களிடம் கொண்டு சேர்ப்பிக்கிறோம்.பதினோராவது கதை, கலப்படம் செய்த பேராசைக்காரன் இதோ,

கலப்படம் செய்த பேராசைக்காரன் : வாட்ஸ்அப் தத்துவக்கதைகள் | க11
image source

கலப்படம் செய்த பேராசைக்காரன்

ஒரு ஊரில் தினேஷ் கிஷோர் என இரு நண்பர்கள் இருந்தார்கள் இருவரும் ஒன்றாக பள்ளிக்குச் சென்று ஒன்றாக திரும்பி வருவார்கள் இருவரும் ஒருவருடன் ஒருவர் மிகவும் அன்பாக இருந்தார்கள்.

தினேஷின் அப்பா துணி வியாபாரம் செய்து வந்தார் கிஷோரின் அப்பா மளிகை கடை வைத்திருந்தார் அந்த கிராமத்திலேயே எல்லா பொருட்களும் அந்த மளிகை கடையில் மட்டுமே கிடைக்கும் அந்த ஊரில் வேறு கடையும் இல்லை அதனால் கிஷோரின் அப்பா எல்லா பொருட்களிலும் கலப்படம் செய்து விற்று வந்தார்.

கலப்படம் செய்த பேராசைக்காரன் : வாட்ஸ்அப் தத்துவக்கதைகள் | க11
image source

அரிசி பருப்பு போன்றவற்றில் கல் மண் கலப்பது மட்டமான எண்ணையை சுத்தமான எண்ணெயுடன் கலந்து சுத்தமான எண்ணெய் என்று விற்பது இப்படி எல்லாவற்றிலும் பாதிக்குப் பாதி கலப்படம் செய்து கொள்ளை லாபம் சம்பாதித்தார்

இவையெல்லாவற்றையும் அறிந்தும் அந்த ஊர் மக்கள் வேறு வழியில்லாமல் அவருடைய கடையிலேயே பொருட்களை வாங்க வேண்டி இருந்தது தன் அப்பாவின் செயலை கிஷோர் தினம் தினேஷிடம் சொல்லி மிகவும் வருத்தப்பட்டான் .

தினேஷின் அப்பா மிகவும் நேர்மையானவர் அவர் துணி வியாபாரம் செய்து வந்தார் தரமான துணிகளை நியாயமான விலையில் விற்று நேர்மையாக வாழ்ந்து வந்தார் .கொஞ்சம் ஏழையாக இருந்தால் அவர்கள் கொடுக்கும் பணத்தை துணிக்கு பெற்றுக் கொள்வார்.அதனால் மக்களிடம் அவருக்கு ஊரில் மரியாதை அதிகம் .

கலப்படம்
image source

கிஷோரின் அப்பாவுக்கு தினேஷ் அப்பாவைக் கண்டால் பிடிக்காது பக்கத்து வீடு வேறு வாழத் தெரியாதவன் உருப்பட மாட்டான் என ஏளனம் செய்வார்
சை.. இவன் முகத்தில் தினம் விழிக்க வேண்டி உள்ளதே என மனதிற்குள் முனகிக் கொள்வார்.

ஒரு நாள் நல் இரவு கிஷோரின் வீட்டில் திருடர்கள் புகுந்து கிஷோரின் அப்பாவை நன்கு அடித்து கட்டிப்போட்டு கலப்படமா செய்கிறாய் உனது பணத்தையெல்லாம் இல்லாமல் செய்கிறோம் பார் என்றுக் கூறி பணத்தையெல்லாம் அவசரமாக மூட்டை கட்டினர் அப்போது கிஷோர் அப்பாவின் அலறல் சத்தம் கேட்டு தினேஷின் அப்பா கையில் தடியோடு ஓடிவந்தார் .அவர்களை அடித்தார் திருடர்கள் கையில் இருந்த மூட்டையை பிடுங்கினார் பாதி பணம் மட்டும் கீழே விழுந்தது மீதி பணத்தை திருடர்கள் எடுத்துக்கொண்டு ஓடிவிட்டனர்.

கலப்படம் செய்த பேராசைக்காரன் : வாட்ஸ்அப் தத்துவக்கதைகள் | க11
image source

கிஷோரின் அப்பா உட்கார்ந்து அழ ஆரம்பித்தார் என் பணம் எல்லாம் திருடு போய்விட்டது பாதி பணம் தான் கிடைத்தது அது நேர்மையான பொருளுக்கானது.

நான் கலப்படம் செய்து பொருட்கள் விற்று ஊர் மக்களை ஏமாற்றினேன் கடவுள் அதற்கு தகுந்த தண்டனை கொடுத்து விட்டார் இனி கலப்படம் செய்து பொருட்களை விற்க மாட்டேன் என சத்தியம் செய்தார் கொள்ளையடித்த பணம் கொள்ளையர்களிடம் சென்றுவிட்டது என மனதுக்குள் முனகினார்.

கிஷோரின் அப்பா அன்று முதல் மனம் திருந்தி தரமான பொருட்களை நியாய விலையில் விற்பனை செய்தார்

தினேஷ் அப்பாவும் கிஷோர் அப்பாவும் நண்பர்களாகினர் கிஷோரும் தினேஷும் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர் இருவரும் எப்பொழுதும் இணைபிரியாமல் அன்போடு வாழ்ந்து வந்தனர்.

கருத்து :

நமக்கு சொந்தமில்லாத ஏதும் நம்மிடம் நிலைக்கப்போவதில்லை. எந்த வடிவத்தில் இருந்தாலும் பரவாயில்லை.

இதே போன்ற நல்ல கதையுடன் அடுத்த வாரம் சந்திக்கிறோம். அது வரை எமது பழைய கதைப் பதிவுகளை வாசிக்கலாமே

கதைகள் பகுதிக்கு செல்ல இங்கே அழுத்தவும்

எமது பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யவும்

Facebook 4K Likes
Post Views: 296
Total
1
Shares
Share 1
Tweet 0
Pin it 0
abiesshva

Previous Article
பூஜை

சோடச உபசார பூஜைகள்: இறைவனுக்கு செய்யப்படும் 16 உபசாரங்கள்

  • February 13, 2021
View Post
Next Article
கனவுகளும் பலன்களும்

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 36

  • February 14, 2021
View Post
You May Also Like
வாட்ஸ்அப் தத்துவக்கதைகள் : கடவுள் வைத்த கடிதம் | க17
View Post

வாட்ஸ்அப் தத்துவக்கதைகள் : கடவுள் வைத்த கடிதம் | க17

மீம்ஸ் டைம் | மகளிருக்கு இலவச பேரூந்து - வாங்க சிரிக்கலாம்
View Post

மீம்ஸ் டைம் | மகளிருக்கு இலவச பேரூந்து – வாங்க சிரிக்கலாம்

பல
View Post

பல வருட தேடல் ஒரு நொடி கவனச்சிறதல் குட்டிக் கதை.!!

வாட்ஸ்அப் தத்துவக்கதைகள் : ஏழை கண்டெடுத்த விலைமதிப்பில்லா சொத்து   | க16
View Post

வாட்ஸ்அப் தத்துவக்கதைகள் : ஏழை கண்டெடுத்த விலைமதிப்பில்லா சொத்து | க16

விவசாயி செய்த மகாதர்மம்  : வாட்ஸ்அப் தத்துவக்கதைகள் | க15
View Post

விவசாயி செய்த மகாதர்மம் : வாட்ஸ்அப் தத்துவக்கதைகள் | க15

கிள்ளிவளவன் : நானும் ரவுடிதான் பார்த்திபன் பெயரின் பின்னாலிருக்கும் உண்மையான அரசன் யார் ?
View Post

கிள்ளிவளவன் : நானும் ரவுடிதான் பார்த்திபன் பெயரின் பின்னாலிருக்கும் உண்மையான அரசன் யார் ?

கோபத்தோடு
View Post

கோபத்தோடு எழுபவன் தோல்வியுற்று அமருவான்.

மொக்க ஜோக்ஸ் : கொஞ்சம் சிரிக்கலாம் வாங்க | பாகம் 1
View Post

மொக்க ஜோக்ஸ் : கொஞ்சம் சிரிக்கலாம் வாங்க | பாகம் 1

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe

Subscribe now to our newsletter

Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்

Input your search keywords and press Enter.