அன்றைய காலங்களில் பழமொழிகளும் வாய்வழிக் கதைகளும் போல இன்று வாட்ஸ்அப் கதைகள் பரவுகின்றன. யார் உருவாக்கினார் என்பது குறிப்பிடப்படாத பட்சத்தில் தெரியாமல் இருக்கும் இக்கதைகள் பொதுவாக நகைச்சுவைகள், மக்களது வாழ்வியல் மற்றும் தத்துவங்களைக் கூறுகின்றன. அவ்வாறான சுவாரசியக் கதைகளை உங்களிடம் கொண்டு சேர்ப்பிக்கிறோம்.பன்னிரண்டாவது கதை, இட்லிக்கடை முதலாளி சொன்ன தத்துவம் இதோ,
இட்லிக்கடை முதலாளி சொன்ன தத்துவம்
இட்லிக்கடையில் நின்று கொண்டிருந்த முதலாளியிடம் சிறு குழந்தை ஒன்று வந்து ஐயா அம்மா 30 ரூபாய்க்கு இட்லி வாங்கிட்டு வரச் சொன்னாங்க காசு நாளைக்குத் தருகிறார்களாம் என்றது. அதற்கு முதலாளி ஏற்கனவே நிறைய பாக்கி வரவேண்டியது இருக்குதேம்மா.
சரி பரவாயில்லை வாங்கிட்டு போ நாளைக்கு கொடுக்கச் சொல்லிரு அப்படின்னு சொல்லிட்டு கடை ஊழியரிடம் அந்த பாப்பாவிற்கு இட்லி கட்டி கொடுக்கச் சொன்னார்.
அப்போது அந்தக் கடையில் வாடிக்கையாக சாப்பிடும் ஒரு நபர் கடை முதலாளியிடம் ஏற்கனவே நிறைய பாக்கி இருக்குதுனு சொல்றீங்க மேலும் மேலும் ஏன் கொடுக்குறீங்க அப்படினு கேட்டாரு.
அதற்கு அந்த முதலாளி அந்த அம்மா தன்னோட குழந்தை பசிக்குதுனு சொன்னதால கடனாக போய் வாங்கிட்டு வான்னு சொல்லி இருப்பாங்க. நான் அந்த இட்லியை கொடுத்துவிடலைன்னா பசிக்காக அந்தக் குழந்தை ஏதாவது திருட்டு வேலையில் இறங்கி இருக்கும். அப்படி இல்லேன்னா அந்த குழந்தையோட பசிக்காக அந்த தாய் ஒரு தவறான பாதையில் போயிடுவா.
நான் உழைப்பை நம்பி தொழில் நடத்துறேன். நம்ம பணம் எங்கேயும் போயிராது. வந்துடும். இப்போதைக்கு எனக்கு ரெண்டு பேர் செய்யப்போற தப்பை தடுத்திருக்கேன் அப்படிங்கிற நிம்மதி போதும் என்றார்.
வந்தவரால் முதலாளியின் கருத்துக்கு மாற்றுக் கருத்து கூற இயலவில்லை. இறைவா இவரை மாதிரி சில நல்லவர்களால் தான் இந்த பூமி இன்னும் இயங்கிக் கொண்டு இருக்கிறது என மனதில் எண்ணிக்கொண்டே நடக்க ஆரம்பித்தார்.
கருத்து :
கொடுத்துக் கெட்டார் எவருமில்லை
இதே போன்ற நல்ல கதையுடன் அடுத்த வாரம் சந்திக்கிறோம். அது வரை எமது பழைய கதைப் பதிவுகளை வாசிக்கலாமே
எமது பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யவும்