உங்கள் வளர்சிதை மாற்றம் இயக்கப்பட்டிருப்பதற்கும், உங்கள் உடல் இயங்க வேண்டிய முறையில் செயல்படுவதற்கும் பசி ஒரு சிறந்த அடையாளமாக இருக்கலாம். ஆயினும் கூட, இயற்கையாகவே இது உணவு உண்ணத் தோண்டினாலும் , பசி என்பது சாப்பிடத் தொடங்குவதற்கான நேரத்தைக் குறிக்கும் ஒரே அடையாளமாக இருக்கக்கூடாது. உங்கள் உடலுக்கான எரிபொருள் மிகக் குறைவாக இருக்கும் போது மட்டுமே நீங்கள் சாப்பிட்டால், உங்கள் உடலுக்கான சக்தித் தேவையை பூர்த்தி செய்ய உங்கள் உடல் உங்களிடம் கெஞ்சினால், அதன் விளைவுகள் மோசமாக இருக்கும்.
பசி அதிகமாக சாப்பிடுவதற்கு வழிவகுக்கிறது.
உணவைத் தவிர்ப்பவர்கள் அல்லது ஒழுங்கற்ற முறையில் சாப்பிடுவோர் பெரும்பாலும் அவர்கள் தவறவிட்ட உணவைச் சாப்பிடுவதற்காக அதிகமாக சாப்பிடுவார்கள். வளர்சிதை மாற்ற மந்தநிலை, ஆற்றல் குறைவு, வெறித்தனம் மற்றும் பசி ஆகியவற்றைத் தவிர்க்க மனித உடலுக்கு ஒவ்வொரு 3-4 மணி நேரத்திற்கும் நிலையான ஊட்டச்சத்து தேவைப்படுகிறது. நீங்கள் உணவு இல்லாமல் நீண்ட காலம் இருந்தால், உங்கள் இரத்த சர்க்கரை அளவு குறைகிறது. இதன் விளைவாக உணவில் சர்க்கரை தேவை அதிகரிக்கிறது.
உடல் எடையை குறைக்க பசி உதவாது.
நாம் பட்டினி கிடந்தால், உடல் எடை இழக்கலாம் என்று நிறைய பேர் நினைக்கிறார்கள். ஆனால் உண்மையில், உங்கள் தினசரி ஊட்டச்சத்து திட்டம் உங்களை பசியில் வாட விட்டால் , நீங்கள் நீண்ட காலத்துக்கு அந்த திட்டத்துடன் நிலைத்திருக்க மாட்டீர்கள். மிகக் குறைந்த கலோரிகளை சாப்பிடுவது உங்கள் உடலில் அவசர பயன் முறையைத் தூண்டுகிறது. இது கொழுப்பைச் சேமித்து, குறைந்த கலோரிகளை எரிக்கும். உங்கள் உடல் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் மற்றும் எதிர்காலத்திற்கான கலோரிகளைப் பாதுகாக்க வேண்டும் என்று நினைத்து இவ்வாறு செய்வதால் எடை அதிகரிக்கும்.
நீங்கள் ஆரோக்கியமான உணவுத் தேர்வுகளைச் செய்வதற்கான வாய்ப்புகள் குறைவு.
தொலைக்காட்சி விளம்பரங்களில் ஒன்றான ஸ்னிக்கர்ஸில் இவ்வாறு வருவதைப் பார்த்திருப்பீர்கள். அந்த விளம்பரத்தில், “பசி வந்தால் நீங்கள் நீங்களாக இருக்க மாட்டீர்கள்” என சொல்கிறது. பசியோடு இருக்கும் பொழுது கிடைத்ததை உடனே உண்ண தான் பார்ப்பீர்கள் தவிர சிந்தித்து முடிவெடுக்கும் மனநிலை இருக்காது. இரத்தத்தில் சர்க்கரை அளவு குறையும் போது, மக்கள் அடுத்ததாக என்ன உண்கிறோம் என்ற சிந்தனை இல்லாமல் உணர்ச்சிவசப்பட்டு உண்கிறார்கள். அவர்கள் கண் முன்னே என்ன கிடைக்கிறதோ அதை உண்கின்றனர் , பெரும்பாலான மக்களுக்கு இது ஆரோக்கியமற்ற உடனடி உணவு / சிற்றுண்டியாக முடிகிறது.ஒட்டுமொத்தமாக, அத்தகைய உணவு மிகவும் ஊட்டமளிக்கும் வாழ்க்கை முறையை ஏற்படுத்தாது.
உங்களால் எல்லா வேளைகளிலும் பசியை அடையாளம் காண முடியாது.
2 ஹார்மோன்கள் பசி ஒழுங்கு முறையை பாதிக்கின்றன: கிரெலின், இது பசியைத் தூண்டுகிறது; மற்றும் லெப்டின், அதை அடக்குகிறது. நீங்கள் சிறிது நேரம் சாப்பிடாத போது, கிரெலின் அளவு அதிகரிக்கிறது. நீங்கள் சாப்பிட்ட பிறகு, லெப்டின் உங்கள் உடலில் அது நிரம்பியிருப்பதாகக் கூறுகிறது.
பசி அறிகுறிகள் எப்போதும் துல்லியமாக இருக்காது. சில நேரங்களில், குறிப்பாக கடுமையான உணவு கட்டுப்பாட்டுக்குப் பிறகு, சில மக்கள் தங்கள் உடல் சொல்ல வரும் உணர்வு என்ன என்பதை கண்டு பிடிக்க முடியாத நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். ஒருவரின் வாழ்க்கை முறைக்கு ஏற்ப பசியை மிதமானதாக மாற்ற மூளை கற்றுக் கொள்கிறது. எனவே எப்போதும் ஒரு நாளைக்கு ஒரு முறை சாப்பிடும் நபர்கள் எந்த விதமான பசியையும் உணராமல் தங்கள் வேலையை செய்து கொண்டிருக்கலாம். ஆனால் உடற்காக நாளுக்கு ஒரு முறை உண்பது சரி என்று ஆகிவிடாது.
பசி உங்கள் ஆரோக்கியத்திற்கு கூடாதது.
பட்டினியால் உடலில் ஏற்படும் தாக்கம், நீண்ட காலமாக, மனநலத்தை பாதிப்பதில் இருந்து நாட்பட்ட நோய்களின் அபாயத்தை அதிகரிப்பது வரை பேரழிவை ஏற்படுத்தும். நீங்கள் பசியுடன் இருந்தால், அது பெரும்பாலும் உடலால் விரும்பப்படும் உணர்வாக இருப்பதில்லை. பசியுடன் வரும் சில ஆரோக்கியமின்மை அறிகுறிகள்:
- கவனம் செலுத்துவதில் சிரமம்
- வயிற்றில் ஒரு பிழிதல் உணர்வு
- பலவீனம்
- தலைச்சுற்றல்
- குமட்டல் மற்றும் வாந்தி
- எரிச்சல்
- தலைவலி
- வயிற்று சத்தங்கள்
- தூக்க பிரச்சினைகள்
போனஸ்: உங்கள் பசியை அடையாளம் காணுங்கள்
விஞ்ஞானிகள் 3 வகையான பசியை அடையாளம் கண்டுள்ளனர்: உடல், உளவியல் மற்றும் சந்தர்ப்பவாத பசிகள். உங்கள் வயிற்றில் போதுமான உணவு இல்லாத போது சாப்பிட வேண்டிய சாதாரண பசி உடல் பசி. மாறாக, உளவியல் பசி என்பது உணர்ச்சிகளால் இயக்கப்படுகிறது, அடிப்படையில், இது உணவைத் தவிர வேறு எதையாவது விரும்புகிறது. இது நன்றாக அல்லது மகிழ்ச்சியாக உணர வேண்டும் என்ற பசி, அல்லது அது பசியாக வெளிப்படும் மற்ற வலுவான உணர்வுகளாகக் கூட இருக்கலாம்.
இறுதியாக, சந்தர்ப்பவாத பசி இருக்கிறது.உங்கள் பக்கத்தில் உணவு இருக்கிறதைக் கண்டவுடன் வரும் பசி. இதற்கு உண்மையான பசியுடன் எந்த தொடர்பும் இல்லை, ஆனால் உணவு கிடைக்கிறது, அதனால் “ஏன் சாப்பிடக்கூடாது ?” என வரும் பசி.
ஆகவே, பசி வரும்வரை காத்திருக்காமல் நேரத்துக்கு உண்ணப் பழகுங்கள்.
மேலும் அறிந்து கொள்ள மேல் உள்ள தலைப்பை அழுத்தவும்
இது போன்ற சுவாரசியமான பதிவுகளுக்கும் கட்டுரைகளுக்கும் எமது உடல் ஆரோக்கியம் பக்கத்தை பார்வையிடுங்கள்.