இணைய வாசகர்களுக்கு இனிய வணக்கங்கள்!! இணையத்தில் படித்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றோம். தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்
சில வியப்பூட்டும் தகவல்கள்
கண்ணாடி பொருட்களை உடைத்தால் தீங்கு என்று ஏன் சொல்கிறார்கள்?
அக்காலத்தில் கண்ணாடி பொருட்கள் குறைந்த அளவில் தான் இருந்தது. குறைந்த அளவு என்பதால் அதிக விலை கொண்டு விற்றார்கள். மேலும் குழந்தைகள் இருக்கும் இடத்தில் பாதுகாப்பாக பயன்படுத்த வேண்டும். இல்லையெனில் அது உடைந்து ஆபத்தாகிவிடும். இப்படி பல காரணங்களால் உடைந்துவிட்டால் வாங்க முடியாது என்பதற்காக கண்ணாடி உடைந்தால் தீங்கு என்று கூறினார்கள். மேலும் செவ்வாய்க்கிழமை வெள்ளிக்கிழமை கண்ணாடி உடைந்தால் வீட்டுக்கு தரித்திரம் என்றும் கூறினார்கள்.
108 தடவை மந்திரங்கள் எதற்காக சொல்கிறார்கள் என்று தெரியுமா?
கடவுளை 108 முறை சுற்றிவந்து தரிசனம் செய்வார்கள். மந்திரங்களை 108 முறை சொல்வார்கள். ஏனெனில், சூரியன், பூமி, சந்திரன் இவை மூன்றும் கோள்களை சுற்றிவர கூடியவை. ஒரு தருணத்தில் இவை மூன்றும் ஒரே இடத்தில் நின்றது. அப்படி நின்றபோது அதனுடைய அளவு 108 என்று கூறினார்கள். இதைதான் நம் முன்னோர்கள் கண்டுபிடித்து எந்த ஒரு காரியத்தையும் 108 தடவை செய்தால் நமக்கு நல்லது நடக்கும் என்று கூறினார்கள்.
வீட்டுக்குள் கறுப்பு குடையை விரிக்காமல் இருப்பதன் காரணம் என்ன?
நாம் வீட்டில் பூஜை செய்வது, மந்திரம் சொல்வது ஆகியவை நமக்கு வீட்டிற்குள் ஒரு நல்ல அதிர்வுகளை கொடுத்து கொண்டே இருக்கும். நாம் கறுப்பு குடையை அல்லது வேறு எந்த குடையையும் விரிப்பதால் அங்குள்ள நல்ல அதிர்வுகள் வெளியேறிவிடும். அதனால் வீட்டிற்குள் குடைகளை விரிக்கக்கூடாது.
பூனை குறுக்கே வருவது அபசகுனம் என்று ஏன் சொல்கிறார்கள்?
அக்காலத்தில் போருக்கு செல்வார்கள். அப்படி செல்லும்போது வழியில் நிறைய இடங்களில் கூடாரம் அமைத்து அவர்கள் தங்குவார்கள். பிறகு சிறிதுநேரம் கழித்து அந்த இடத்தை விட்டு வெளியேறுவார்கள். பூனை என்பது அனைவரும் இருக்கும் இடத்தில் இருக்கும் விலங்கு.
சிப்பாயோ, வீரரோ அந்த வழியாக வந்து கொண்டிருக்கும்போது, எதிரில் பூனையை கண்டால் நமக்கு முன்பு இந்த இடத்திற்கு எதிரிகள் வந்துவிட்டர்கள். எனவே வேகமாக முன்செல்லாமல் சற்று பொறுமையுடன் காத்திருந்து பிறகு செயல்பட வேண்டும். இல்லையெனில் நமக்கு ஆபத்து ஏற்படும் என்பார்கள். நம் முன்னோர்கள் கூறிய இதைதான், தற்போது பூனை குறுக்கே வந்தால் அபசகுனம் என்கிறார்கள்.
மேலும் நாம் வெளியே போகும் போது பூனை குறுக்கே வந்தால் முக்கியமான பயணம் என்றால் கொஞ்சம் வீட்டில் இருந்து தண்ணீர் குடித்து விட்டு செல்லலாம் இல்லை என்றால் பயணத்தை தள்ளி போடலாம்.
ஏன் மாலை நேரத்தில் விளக்கேற்றிய பிறகு வீடு பெருக்கக்கூடாது, நகம் வெட்டக்கூடாது என்கிறார்கள்?
முந்தைய காலங்களில் மின்சாரம் கிடையாது. எனவே, மாலை நேரம் வந்ததும் இரவிற்கு வெளிச்சம் தேவை என்பதால் விளக்கு ஏற்றிவிடுவார்கள். விளக்கு சிறிய அளவிலான வெளிச்சத்தையே கொடுக்கும். அதனால் நகம் வெட்டினால் தவறுதலாக கீழே விழுந்து குழந்தை அதை வாயில் வைத்துவிடும் என்பதை தவிர்ப்பதற்காகவும், வீடு பெருக்கினால் நமக்கு தேவையான பொருள் வெளிச்சத்தில் தெரியாமல் குப்பைக்கு சென்று விடுவதை தவிர்ப்பதற்காகவும் மாலை நேரங்களில் விளக்கேற்றிய பிறகு இத்தகைய சிறிய வேலைகளை செய்யக்கூடாது என்பார்கள். மற்றும் விளக்கேற்றிய பிறகு வீடு பெருக்கினால் வீட்டில் உள்ள செல்வம் வெளியே போகும் என்பார்கள்.
1000 பொய் சொல்லி கல்யாணம் பண்ணலாம்-னு சொல்வது ஏன்?
இதனின் உண்மையான ரகசியம் என்னவென்றால் 1000 பேருக்கு போய் சொல்லி கல்யாணத்திற்கு அனைவரையும் அழைத்து பிரம்மாண்டமாக ஆச்சரியப்படும் வகையில் திருமணம் செய்ய வேண்டும் என்பதுதான். இது காலப்போக்கில் மருவி 1000 பொய் சொல்லி கல்யாணம் பண்ணலாம் என்று மாறிவிட்டது.