வயது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டிய வீடியோக்களை அதிகமாகப் பிடிக்க YouTube அதிகளவு செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் தொழில்நுட்பத்தை உருவாக்கி வருகிறது. இந்த தொழில்நுட்பம் மூலம் ஒரு காணொளியைப் பார்க்கும் முன் அவர்களின் வயதை சரிபார்க்க பார்வையாளர்கள் தங்கள் கணக்குகளில் உள்நுழையுமாறு கோரப்படுவார்கள்.
2017 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் வன்முறை தீவிரவாதத்தையும், தளத்தில் மிகவும் கடுமையான போக்கையும் வெளிக்காட்டும் உள்ளடக்கங்களையும், பின்னர் வெறுக்கத்தக்க நடத்தை அடங்கிய வீடியோக்களையும் கண்டறிய YouTube பயன்படுத்திய இயந்திர கற்றல் நுட்பங்களைப் போன்ற அதே அணுகுமுறையானது, குறிப்பிட்ட வயதுக்கு ஏற்றது அல்ல என்று You Tube கருதும் வீடியோக்களை தானாகக் கொடியிடவும் (முறையற்றது என அடையாளப்படுத்தல்) இந்த விஷயத்தில் பயன்படுத்தப்படும். இதன் விளைவாக, வயது வரம்புக்குட்பட்ட கட்டுப்பாடுகளுடன் அதிகமான வீடியோக்கள் பார்ப்பதற்கு முன்னர் கணக்கு உள்நுழைதலைக் கோரலாம் என YouTube எதிர்பார்க்கிறது.
YouTube இன் எதிர்பார்ப்பு என்ன ?
செயற்கை நுண்ணறிவின் மிதப்படுத்தல் தொழில்நுட்பத்தின் எந்தவொரு முன்னைய வெளியீட்டையும் போலவே, இதிலும் வகைப்படுத்தலில் சில தவறுகள் இருக்கலாம் என்ற எண்ணத்துடனே நிறுவனம் தயாராகி வருகிறது. மாற்றங்களின் ஒரு பகுதியாக, மூன்றாம் தரப்பு தளங்களில் (வேறு வலைத்தளங்களில்) பதிக்கப்பட்ட YouTube வீடியோக்களைப் பார்க்கும் நபர்கள் உள்நுழைந்து அவர்களின் வயதை சரிபார்க்க YouTube க்கு திருப்பி விடப்படுவார்கள்.
YouTube இன் கூட்டாளர் திட்டத்தில் (அவர்களின் வீடியோக்களைப் பணமாக்கக்கூடியவர்கள்) படைப்பாளிகள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய கேள்விகளில் ஒன்று, இந்த மிதப்படுத்தல் நடவடிக்கைகள் அவர்களின் பணம் சம்பாதிக்கும் திறனை பாதிக்குமா என்பதுதான். YouTube குழு அவ்வாறு நம்பவில்லை, ஏனெனில் YouTube இவ்வாறான பிரச்சனைகளை எதிர்நோக்கும் என எதிர்பார்க்கும் பெரும்பாலான வீடியோக்கள் தானியங்கி வயது கட்டுப்பாடுகளைப் பெறும்.இவை நிறுவனத்தின் விளம்பரதாரர்-நல்லிணக்க வழிகாட்டுதல்களை மீறும் காணொளிகளாகும். அடிப்படையாகவே, அந்த வீடியோக்கள் ஏற்கனவே வரையறுக்கப்பட்டவை அல்லது விளம்பரங்களுக்கு தகுதியற்றவை என்று யூடியூப் கூறுகிறது.
தவறுகள் நடக்காது என்று அர்த்தமல்ல; தவறாகப் பயன்படுத்தப்பட்ட வகைப்படுத்தல்கள் மற்றும் தரமிறக்குதல்களின் எண்ணற்ற சம்பவங்கள் மற்றும் அனைத்து வகையான பதிப்புரிமைசார் முடக்கல் சர்ச்சைகளும் கடந்த காலங்களில் காரணங்களுடன் விளக்கப்பட்டுள்ளன. ஆனால் முறையீடுகள் வரும்போது அவற்றைக் கையாள யூடியூப் அதன் முறையீட்டுக் குழுவைப் பயன்படுத்துகிறது. படைப்பாளிகளின் மற்றொரு கவலை என்னவென்றால், வயது வரம்புக்குட்பட்ட வீடியோக்கள் பயனாளர்களின் முகப்புப்பக்கத்தில் தோன்றாது. வயது வரம்புக்குட்பட்ட வீடியோக்கள் முகப்புப்பக்கத்தில் தோன்றுவதற்கான வாய்ப்புகள் குறைவாக இருந்தாலும், வயதைக் கட்டுப்படுத்துவது தானாகவே முகப்புப்பக்கத்தில் வீடியோக்கள் தோன்றுவதைத் (ரெக்கமண்டேஷன்) தடுக்காது என்று யூடியூப் தெரிவித்துள்ளது.
குழந்தைகளுக்கு பாதுகாப்பற்றதாக இருப்பதால், சம்பந்தப்பட்ட பெற்றோர் குழுக்கள் மற்றும் வக்கீல் அமைப்புகளிலிடமிருந்து உலகளாவிய விமர்சனங்களை தீர்க்க You Tube முயற்சிப்பதால் இந்த வெளியீடு வருகிறது. கூட்டாட்சி தனியுரிமை பாதுகாப்புகள் காரணமாக 13 வயதிற்கு உட்பட்ட எவருக்கும் You Tube பொருந்தாது என்று You Tube குழு எப்போதுமே கூறுகிறது. மேலும் YouTube நிறுவனம் குழந்தைகளுக்கு பாதுகாப்பான மாற்றாக YouTubeKids இனை சுட்டிக்காட்டுகிறது. இருப்பினும், இது சிறு குழந்தைகளை வீட்டிலோ அல்லது வேறு இடத்திலோ பயன்பாட்டைப் பயன்படுத்துவதைத் தடுக்காது. குழந்தைகளுக்காக குறிப்பாக உள்ளடக்கத்தை உருவாக்குவதில் மிகவும் பிரபலமான சில சேனல்கள் கட்டமைக்கப்பட்டுள்ளன. இப்போது, You Tube இன் நம்பிக்கை மற்றும் பாதுகாப்புக் குழு மதிப்புரைகளின் போது வீடியோக்களைப் பார்வையிட்டு அவற்றைக் கட்டுப்படுத்துகிறது.காணொளி 18 வயதிற்குட்பட்டவர்களுக்கு பொருத்தமற்றதாகக் கருதப்பட்டால், அதற்கு வயது வரம்பு இடப்படும்.
“எங்கள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதால் அதிகமான வீடியோக்கள் வயது வரம்புக்குட்பட்டதாக வரையறுக்கப்படுவதால், எங்கள் கொள்கைக் குழு வயது வரம்புக்குட்பட்ட உள்ளடக்கத்திற்கான எல்லையை எங்கே வரையறுக்கிறோம், என்பதை மறுபரிசீலனை செய்ய இந்த வாய்ப்பைப் பயன்படுத்தியது” என்று You Tube இன் புதிய வலைப்பதிவு இடுகை கூறுகிறது. “நிபுணர்களுடன் கலந்தாலோசித்தபின் மற்றும் பிற உலகளாவிய உள்ளடக்க மதிப்பீட்டு கட்டமைப்போடு நம்மை ஒப்பிட்டுப் பார்த்த பிறகு, சிறிய மாற்றங்கள் மட்டுமே தேவைப்பட்டன” என அந்த வலைப்பதிவில் கூறப்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள நாடுகளில் உள்ளவர்களுக்கு, புதிய விதிகள் தேவைப்படும் சில கூடுதல் படிகள் இருக்கலாம் என்றும் You Tube இன் இடுகை குறிப்பிடுகிறது. ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆடியோவிஷுவல் மீடியா சர்வீசஸ் டைரெக்டிவ் (ஏ.வி.எம்.எஸ்.டி) போன்ற வரவிருக்கும் விதிமுறைகளுக்கு ஏற்ப, சில ஐரோப்பிய பயனர்கள் தங்கள் வயதை நிரூபிக்க கூடுதல் ஆதாரங்களை வழங்குமாறு கேட்கப்படலாம். திறம்பட, யாராவது 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்பதை கணினிகளால் சரிபார்க்க முடியாவிட்டால், இடுகையின் படி, “அவர்களின் வயதை சரிபார்க்க, செல்லுபடியாகும் அடையாள அட்டை அல்லது கிரெடிட் கார்டை வழங்குமாறு” அவர்கள் கேட்கப்படலாம். இது ஒரு முறை செயல்முறை (One-Time-Process) ஆக இருக்க வேண்டும். மற்றும் தகவல் அனுப்பப்பட்ட பின்னர் YouTube அதை நீக்க வேண்டும். கூகிளின் தனியுரிமை மற்றும் பாதுகாப்புக் கொள்கைகளை பின்பற்றுவதற்காக இந்த செயல்முறை உருவாக்கப்பட்டது, என YouTube கூறுகிறது.
இந்த மாற்றங்களை மக்கள் உடனடியாகக் காணலாம், ஆனால் பெரும்பாலும், விளைவு கவனிக்கப்படுவதற்கு சிறிது நேரம் எடுக்கும். உங்கள் You Tube கணக்கில் எப்போதுமே உள்நுழைந்திருங்கள். இல்லாவிட்டால் நீங்கள் ஏகப்பட்ட வயது வரம்பு மதிப்பீடுகளை சந்திக்க வேண்டி வரலாம்.
இந்த மாற்றம் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என கீழ் உள்ள கருத்துப் பெட்டியில் பதிவு செய்யுங்கள்.
இது போன்ற புத்தம் புதிய தொழில்நுட்ப தகவல்களை வாசிக்க கீழே உள்ள உள்ள பொத்தானை அழுத்துவதன் மூலம் எமது தொழில்நுட்பம் பகுதிக்கு செல்லுங்கள்.
முகப்பு புகைப்பட உதவி : Mashable