பொதுவான அறிவுள்ள ஒரு மனிதன் அறிந்தவற்றில் மிகவும் வேகமான/ குறுகிய கால இடைவெளியில் நடக்கும் விடயம் மின்னல் தாக்கமாக இருக்கலாம். இது 30 மைக்ரோ செக்கன்களில் நடக்கும். (0.00003s). ஆனால் நாம் அறியாத அதை விட மிகவும் குறுகிய கால அளவைக் கொண்ட நிகழ்வை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இது ஜெப்டோசெகண்டுகளில் நடைபெறுகிறது.
விஞ்ஞானிகள் இதுவரை கண்டறியப்படாத மிகக் குறுகியநேர அலகினை அளவிட்டுள்ளனர்: இது ஒரு ஒளித்துகள், ஒரு ஹைட்ரஜன் மூலக்கூறைக் கடக்க எடுக்கும் நேரம் ஆகும்.
ஜெப்டோசெகண்டு எவ்வளவு சிறியது ?
அந்த நேரம், பதிவுகளின் படி , 247 ஜெப்டோசெகண்டுகள். ஒரு ஜெப்டோசெகண்ட் என்பது ஒரு விநாடியின் பில்லியனில் மூன்றில் ஒரு பங்கு அல்லது ஒரு தசம புள்ளியைத் தொடர்ந்து 20 பூஜ்ஜியங்கள் மற்றும் 1 ஆகும் (0.000 000 000 000 000 000 247)
முன்னதாக, ஆராய்ச்சியாளர்கள் ஜெப்டோசெகண்டுகளின் உலகில் மூழ்கியிருந்தனர்; 2016 ஆம் ஆண்டில், நேச்சர் இயற்பியல் இதழில் அறிக்கையில் ஆராய்ச்சியாளர்கள் 850 ஜெப்டோசெகண்டுகள் வரை குறுகிய கால அளவிடைகளை அறிய லேசர்களைப் பயன்படுத்தினர்.
இந்த துல்லியம் 1999 ஆம் ஆண்டு நோபல் பரிசு வென்ற படைப்பிலிருந்து ஒரு பெரிய பாய்ச்சலாகும். 1996 சாதனை, முதலில் ஃபெம்டோசெகண்டுகளில் (ஒரு செக்கனின் பில்லியனின் ஒரு பங்கின் மில்லியனின் ) நேரத்தை அளவிட்டதற்கான அங்கீகாரமாகும்
வேதியியல் பிணைப்புகள் உடைந்து உருவாக ஃபெம்டோசெகண்டுகளை எடுக்கும், ஆனால் ஒளி, ஒரு ஹைட்ரஜன் மூலக்கூறு (H2) வழியாக பயணிக்க செப்டோசெகண்டுகள் எடுக்கும்.
இந்த மிகக் குறுகிய பயணத்தை அளவிடுவதற்காக, ஜெர்மனியில் உள்ள கோதே பல்கலைக்கழகத்தின் இயற்பியலாளர் ரெய்ன்ஹார்ட் டோர்னரும் அவரது சகாக்களும் பெட்ரா III இலிருந்து எக்ஸ்-கதிர்களை ஹாம்பர்க்கில் உள்ள சிறப்பு துகள் முடுக்கியான டாய்ச்ஸ் எலெக்ட்ரோனென்-சின்க்ரோட்ரான் (DESY) மீது பாய்ச்சினர்.
எக்ஸ்-கதிர்களின் ஆற்றலை ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்ட அளவில் அமைத்தனர். இதனால் ஒற்றை ஃபோட்டான் அல்லது ஒளியின் துகள், ஹைட்ரஜன் மூலக்கூறிலிருந்து இரண்டு எலக்ட்ரான்களையும் தட்டியது. (ஒரு ஹைட்ரஜன் மூலக்கூறு இரண்டு புரோட்டான்கள் மற்றும் இரண்டு எலக்ட்ரான்களைக் கொண்டுள்ளது.) ஃபோட்டான் ஒரு எலக்ட்ரானை மூலக்கூறிலிருந்து வெளியேற்றியது, பின்னர் மற்றையது, ஒரு குளத்தின் மீது ஒரு கூழாங்கல் போல தத்தி வெளியேறியது.
இந்த இடைவினைகள் குறுக்கீடு முறை எனப்படும் அலை வடிவத்தை உருவாக்கியது.இதனை டோர்னரும் அவரது சகாக்களும் ஒரு குளிர் இலக்கு மறுசீரமைப்பு அயன் மொமண்டம் ஸ்பெக்ட்ரோஸ்கோபி (கோல்ட்ரிம்ஸ்) எதிர்வினை நுண்ணோக்கி எனப்படும் கருவி மூலம் அளவிட முடிந்தது. இந்த கருவி அடிப்படையில் மிக விரைவான அணு மற்றும் மூலக்கூறு எதிர்வினைகளை பதிவு செய்யக்கூடிய மிக முக்கியமான துகள் கண்டறிதல் கருவி ஆகும்.
COLTRIMS நுண்ணோக்கி குறுக்கீடு முறை மற்றும் ஹைட்ரஜன் மூலக்கூறின் நிலை இரண்டையும் பதிவுசெய்தது.
“ஹைட்ரஜன் மூலக்கூறின் இடஞ்சார்ந்த நோக்குநிலை எங்களுக்குத் தெரிந்ததால், ஃபோட்டான் முதல் நிலையை எட்டியதும், இரண்டாவது ஹைட்ரஜன் அணுவை எட்டியதும் துல்லியமாகக் கணக்கிட இரண்டு எலக்ட்ரான் அலைகளின் குறுக்கீட்டைப் பயன்படுத்தினோம்” என்று ஜெர்மனியில் ரோஸ்டாக் பல்கலைக்கழகத்தின், இணை ஆய்வாளர் ஸ்வென் கிரண்ட்மேன் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
எல்லாம் சரி அந்த நேரம் ? இருநூற்று நாற்பத்தேழு ஜெப்டோசெகண்டுகள், அதற்கு என்ன அர்த்தம் என்று கேட்டல், ஃபோட்டான் துல்லியமான தருணத்தில் மூலக்கூறுக்குள் உள்ள ஹைட்ரஜன் அணுக்களுக்கு இடையிலான தூரத்தைப் பொறுத்து கிடைக்கும் சிறிய இடைவெளிக்குள் பயணித்த நேரம் அது. அளவீட்டு அடிப்படையில் மூலக்கூறுக்குள் ஒளியின் வேகத்தின் அளவீடு.
படம்: ஒரு ஃபோட்டான் (மஞ்சள் அம்பு) எனப்படும் ஒளியின் ஒரு துகள், ஒரு ஹைட்ரஜன் மூலக்கூறின் (சிவப்பு: கரு) எலக்ட்ரான் மேகத்திலிருந்து (சாம்பல்) எலக்ட்ரான் அலைகளை உருவாக்குகிறது. அந்த இடைவினைகளின் விளைவாக உருவாவது குறுக்கீடு முறை (ஊதா-வெள்ளை) என்று அழைக்கப்படுகிறது. குறுக்கீடு முறை வலதுபுறமாக சற்றே வளைந்து, ஃபோட்டான் ஒரு அணுவிலிருந்து அடுத்த அணிக்கு கிடைக்கும் நேரத்தை கணக்கிட ஆராய்ச்சியாளர்களை அனுமதிக்கிறது.
“ஒரு மூலக்கூறில் உள்ள இலத்திரன் ஓடு எல்லா இடங்களிலும் ஒரே நேரத்தில் ஒளிக்கு வினைபுரிவதில்லை என்பதை நாங்கள் முதன்முதலில் கவனித்தோம்” என்று டோர்னர் அந்த அறிக்கையில் கூறினார். “நேர தாமதம் ஏற்படுகிறது, ஏனெனில் மூலக்கூறுக்குள்ளான தகவல்கள் ஒளியின் வேகத்தில் மட்டுமே பரவுகின்றன” என அவர் தெரிவித்தார்.
இது போன்ற வேறுபட்ட விஞ்ஞான-தொழில்நுட்ப கட்டுரைகளை வாசிக்க தொழில்நுட்பம் பகுதிக்கு செல்லுங்கள்
எம்மை பேஸ்புக் பக்கத்தில் தொடரவும்
இந்த கட்டுரை முதலில் லைவ் சயின்ஸால் வெளியிடப்பட்டது.
பட மூலம் : டுவிட்டர்