இணைய வாசகர்களுக்கு இனிய வணக்கங்கள்!!
மே முதலாம் திகதி இன்று உலகளாவிய ரீதியிலே உழைப்பாளர்கள் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இந்த ஒருவேளை என்கின்ற பிரிவும் இல்லாமல் இந்த உலகத்திலேயே இருக்கின்ற எல்லா வகையான தொழில்களுமே சமமானவை அல்லது அவரவருக்கு மகத்தானவை என்கின்ற போக்கில் அதனை கொண்டாடும் முகமாக இன்று உழைப்பாளர்கள் தினம் கொண்டாடப்படுகிறது.
அனைத்து வருடங்களும் உழைப்பாளர்களுக்கு இந்த நாள் கிடைக்கின்ற விடுமுறையை தங்கள் குடும்பத்தோடு கழிப்பதற்கும் அன்றைய தினத்தை ஒவ்வொரு உழைப்பாளர்களை இந்த உலகத்தில் உள்ள மக்கள் நினைவுகூர்வதற்கு மான வாய்ப்பாக பயன்படுத்துகின்றோம். ஆனால் இந்த 2020 ஆம் ஆண்டு நாம் அனைவரும் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்ற இந்தத் தருணத்திலும் இந்த மே மாதம் முதலாம் திகதி ஆனது நமக்கு ஒரு விடுமுறையாக இல்லாவிட்டாலும் உண்மையான உழைப்பாளர்களை நினைவு கூறும் ஒரு வாய்ப்பாக அமைந்திருக்கிறது.
ஆம். வழக்கம் போல இல்லாவிட்டாலும் இந்த கொரோனவை எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கின்ற ராணுவவீரர்கள், மருத்துவர்கள், தாதி, அத்தியாவசிய பொருள் வழங்குபவர்கள், நகர சுத்திகரிப்பு பணியாளர்கள், அரசாங்கத்தில் நாட்டின் நடவடிக்கைகளுக்காக தொடர்ந்து உழைத்துக் கொண்டிருக்கும் ஊழியர்கள். இவர்கள் அனைவருக்கும் நாம் வீட்டில் இருந்தபடியே நம்முடைய வாழ்க்கை சுமூகமாக கொண்டு செல்வதற்கு உதவி செய்வதற்காக எமது மனமார்ந்த நன்றிகளை நாங்கள் தெரிவித்துக் கொள்ள முடியும்.
அவர்களின் நலனுக்காக ஒரு முறை பிரார்த்திக்க முடியும். இன்று உழைப்பாளர்கள் தினம் ஆனது மற்ற ஆண்டுகளைப் போன்று இல்லாவிட்டாலும்கூட, பணத்தின் மதிப்பு என்ன என்பதை நாம் மிகவும் அறிந்த ஒன்றாகவும், அதற்கான உழைப்பின் அருமையை புரிய வைத்த ஒன்றாகவும் அமைந்திருப்பது எண்ணி நாம் இந்த உலகத்திற்கு நன்றியுடன் இருப்போம்.
image source:http://www.pauldavisoncrime.com/2020/03/real-superheroes-during-covid-19-crisis.html?m=1