மந்திரப்பழம் விளாம்பழம்
பழங்களில் அதிகமாக விரும்பப்படும் மிகவும் ஆரோக்கியம்தரக்கூடியதுமான ஒரு பழம் விளாம்பழம். விளாம்பழத்தில் உள்ளே உள்ள சதையை எடுத்து அதோடு கலந்து தனியாக உண்பவர்களும் உள்ளார்கள். அந்த சதையை மிக்ஸியில் போட்டு சிறிதளவு தண்ணீரும் சீனியும் உப்பும் விட்டு கலந்து அடித்து சாறாக அல்லது பழச்சாறாக குடிப்பவர்களும் உள்ளார்கள்.
இவ்வாறு சாப்பிட்டாலும் ஒரு விளாம்பழத்தை ஒருவர் முழுமையாக சாப்பிட வேண்டும். ஏனெனில் விளாம்பழத்தில் இருக்கும் அனைத்து விதைகளிலும் ஏதோ ஒரு விதையில் சகல நோய்களையும் தீர்க்கக்கூடிய அளவு சக்தி இருக்கும். கலந்து குடிக்கும் பொழுது அந்த விதையானது கிடைக்காமல் போக வாய்ப்புண்டு. அதனால் ஒரு பழத்தை ஒருவர் தனியாக முழுதாக குடிக்க வேண்டியது அத்தியாவசியம்.
நோய் தீர்க்கும் விளாம்பழம்
கண் பார்வை மங்கல், வாய்க்கசப்பு, பித்தவாந்தி, பித்தக் கிறுகிறுப்பு, அதிக வியர்வை ஏற்பட்டு கை கால்கள் சில்லிட்டுப் போதல், பித்த நரை, ருசி அற்றநிலை, அளவுக்கு மீறி உமிழ்நீர் சுரத்தல், தொண்டை புண், கல்லீரல் இயக்கம் சீர்குலைவு தொடர்பான பிரச்சனைகளுக்கு நன்கு பழுத்த விளாம்பழத்தை உடைத்து உட்பகுதியை மட்டும் சர்க்கரை அல்லது வெல்லம் சேர்த்து இருபத்தொரு நாட்கள் உண்டால் பூரண குணமாகும்.
இரத்தம் சுத்தமடையும்.அறிவு விருத்தியாகும். நோய்க் கிருமிகள் அழிந்து நோய் எதிர்ப்பு சக்திஉண்டாகும். எலும்புகள் உறுதியாகும். வயோதிகர்களுக்கு இந்தப்பழம் ஒரு டானிக். மூன்று நாட்களுக்கு ஒரு முறை உண்டால் எலும்புகள் பலம்பெறும். பற்களின் ஆட்டம் குறையும். இதயத்துடிப்பு சீராகும். மன சஞ்சலம் நீங்கி பேரானந்தம் கிடைக்கும்.
இதுபோன்ற ஆரோக்கிய தகவல்களை அறிய எங்கள் உடல் ஆரோக்கியம் பகுதியை நாடுங்கள்.
image source:https://parenting.firstcry.com/articles/wood-apple-during-pregnancy-health-benefits-and-side-effects/