சர்வதேச மகளிர் தினம் 2021 மார்ச் 8 இன்றைய தினம் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு சர்வதேச மகளிர் தினத்திற்கான கருப்பொருளாக #ChooseToChallenge என்பதுள்ளது. இது “சவாலான உலகம் எச்சரிக்கையாகன உலகம் என்பதையும் சவாலில் இருந்து மாற்றங்கள் உருவாகின்றது என்பதனையும் குறிக்கிறது.
பாலின சமமான உலகத்தை உருவாக்க உதவும் பல மிஷன்களை சர்வதேச மகளிர் தினம் அடையாளப்படுத்துகிறது.
பெண்களின் சாதனைகளை கொண்டாடுவது மற்றும் தெரிவுநிலையை அதிகரிப்பது, சமத்துவமின்மையைக் சுட்டிக்காட்டுவது என்பன சமத்துவத்தை அடைவதற்கான அடிப்படை வழிகள்.
#ChooseToChallenge கருப்பொருளை வெளிப்படுத்துவது எப்படி ?
ஒரு சவாலான உலகம் ஒரு எச்சரிக்கையான உலகம். தனித்தனியாக, நம்முடைய சொந்த எண்ணங்களுக்கும் செயல்களுக்கும் நாம் அனைவரும் பொறுப்பு என்பதே இம்முறைக்கான கருத்து.
பாலின சார்பு மற்றும் சமத்துவமின்மை ஆகியவற்றை சவாலுக்கு உட்படுத்த மற்றும் வெளிப்படுத்த நாம் அனைவரும் தேர்வு செய்யலாம். நாம் அனைவரும் பெண்களின் சாதனைகளைத் தேடுவதற்கும் கொண்டாடுவதற்கும் தேர்வு செய்யலாம். கூட்டாக, நாம் அனைவரும் உள்ளடக்கிய உலகத்தை உருவாக்க உதவலாம்.
சவாலில் இருந்து மாற்றம் வருகிறது, எனவே அனைவரும் சவாலை ஏற்பதை தேர்ந்தெடுப்போம். நீங்கள் உங்கள் வாழ்வில் வரும் சவால்களை ஏற்க தயார் என காட்டுவதற்கு உங்கள் கையைமேலே உள்ள படத்தில் உள்ளது போல உயர்த்தி #ChooseToChallenge எனும் hashtag உடன் பதிவிடுங்கள்.
உலகெங்கிலும் வாழும் அனைத்து மகளிருக்கும் செல்லாவின்
“சர்வதேச மகளிர் தின வாழ்த்துக்கள்”
இந்த மகளிர் வாரத்துக்காக திறமை மிக்க ஆளுமைகளுடன் இணைந்து எமது ChellaUpdates சார்பாக நாம் பதிவிட்ட சிறப்பு நேர்காணலை கீழே காணவும்
கடந்த வாரம் முழுவதும் மகளிர் தினத்துக்காக வெளியிடப்பட்ட சிறப்பு கட்டுரைகளோடு 100+ பெண்களுக்கான சிறப்புக் கட்டுரைகளை வாசிக்க பெண்ணியம் பக்கத்துக்கு செல்லவும்
தொடர்ச்சியான அப்டேட்களை பெற எமது பேஸ்புக் பக்கத்தில் எம்மைத் தொடரவும். சுவாரசியமான கலந்துரையாடல்களுக்கு எமது பேஸ்புக் குழுவில் இணையவும்.
Wall image source : IWD