இணைய வாசகர்களுக்கு இனிய வணக்கங்கள்!!சைவ சமய சம்பிரதாய முறைப்படி பல்வேறு வகையான சடங்கு வகைகளை வாழ்வின் இந்துக்கள் பின்பற்றுகின்றனர். அதற்கமைய இந்தெந்த தினங்களில் செய்யக்கூடியவை செய்யக் கூடாதவை என இரு பாகங்களாக பிரித்து வைத்துள்ளனர் நம் முன்னோர்.
முன்னோர் கடைப்பிடித்த ஒவ்வொரு பழக்க வழக்கத்திற்கும் ஒரு காரண காரியம் உள்ளது என்பது உளவியல் ரீதியிலான உண்மை. இன்றைய இளசுகள் அதற்கு ”மூடநம்பிக்கைகள்” என கட்டயம் கட்டினாலும் விஞ்ஞான உலகில் விளப்பம் தெரியாத குழப்பங்கள் இருக்கத்தான் செய்கின்றன.
ஆகவே முன்னோர் கடைப்பிடித்தவற்றை மூட நம்பிக்கை எனும் ஒற்றைச் சொல்லால் பிரித்துவிட இயலாது.இலட்சுமி என இந்து மக்களால் வணங்கப்படும் செல்வத்தை வழங்கும் தேவிக்கான நாள் செவ்வாய் கிழமையாகும்.
செவ்வாய்கிழமை அன்று இலட்சுமி தேவி சைவமக்களின் இல்லங்களுக்கு அருவுருவ வடிவில் வந்தருள்வாள் என்பது ஐதீகம் அந்நாளில் சில நடவடிக்கைகளை சைவர்கள் செய்யக்கூடாது.
முடி வெட்டுதல், நகம் வெட்டுதல், ஷேவிங் செய்தல் போன்ற செயல்களை இந்நாளில் செய்யக்கூடாது. எமக்குத் தெரிந்த இந்துக்களுக்கு இதனை பரப்புதல் சாலச் சிறந்தது. எல்லா மக்களுக்கும் செல்வம் தழைத்தோங்க வேண்டும்! சைவர்கள் இதனை பின்பற்றுவதன் மூலம் நம் பாரம்பரியத்தை அடுத்த தலைமுறையினருக்கு கடத்துதல் ஒவ்வொரு இந்துவினதும் தலையாயக் கடமை.
image source:https://www.discoverparramatta.com/see-and-do/a-guide-to-guys-grooming