இணைய வாசகர்களுக்கு இனிய வணக்கங்கள்!! இணையத்தில் படித்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றோம். தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்.
சில வியப்பூட்டும் தகவல்கள்
திருமணத்தின்போது ஒற்றை எண்ணில் அதாவது 101, 501, 1001 என மொய் வைப்பதற்கான காரணம் என்ன?
அதாவது ஒற்றை எண்ணை நம்மால் எப்போதும் பிரிக்க முடியாது. அதேபோல் மணமக்கள் அவர்கள் வாழ்க்கையில் எப்போதும் பிரியாமல் இணைந்து வாழ வேண்டும் என்பதற்காக அவர்களை வாழ்த்தி ஒற்றை எண்ணில் மொய் வைக்கிறார்கள்.
பசுவிற்கு அகத்திக்கீரை கொடுப்பது எதற்காக?
நாம் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கிவிடும் என்பது நம்பிக்கை. எனவே வீடு கிரகப்பிரவேசம், மாட்டுப்பொங்கல் போன்ற நாட்களில் பழங்கள், அகத்திக்கீரை போன்றவற்றை கொடுக்கிறார்கள். வீடு கட்டும்போது புழு, பூச்சி போன்ற உயிரினங்களை கொன்று இருந்தால் அந்த பாவங்களை நீக்குவதற்காக வீடு கிரகப்பிரவேசம் செய்யும்போது பசுக்களை அழைத்து பூஜை செய்து, மந்திரம் சொல்லி அகத்திக்கீரை கொடுப்பார்கள்.பசுவுக்கு நாம் அகத்திக்கீரை கொடுப்பதால் அறியாமல் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கிவிடும்.பித்ரு தோஷங்கள் இருந்தால் நீங்கும் மற்றும் சுப வாழ்வு ஏற்படும்.
முதலில் விநாயகரை கும்பிடுவது ஏன்?
முதலில் விநாயகரை கும்பிடுவது வழக்கம் என்பதை அனைவரும் அறிந்ததே. விநாயகரை வழிபட்டுவிட்டு நாம் தோப்புக்காரணம் போடுவோம். அவ்வாறு தோப்புக்காரணம் போடுவதால் காதுகளில் உள்ள 200 நரம்புகளும் சீராக ஓடும். புது சிந்தனைகளை உருவாக்கி, ஞாபகச் சக்திகளை அதிகரிக்க உதவுகிறது.
காமாட்சி அம்மன் விளக்கை மட்டும் ஏன் கட்டாயம் ஏற்ற வேண்டும்?
பூமியோடு மக்கள் கஷ்டப்பட்ட காலத்தில் அவர்களை காப்பாற்றுவதற்காக காமாட்சி அம்மன் தெய்வம் மிகப் பெரிய தவம் இருந்தது. அப்போது அனைத்து தெய்வங்களும் ஒன்றுக்கூடி காமாட்சி அம்மன் தெய்வத்துடன் தவமிருந்து மக்களின் குலத்தை காப்பாற்றியது.
மேலும் அனைத்து தெய்வங்களும் ஒன்றாக இணைந்து தவம் இருந்ததால், குலதெய்வம் அறியாதவர்கள் அவர்களின் குலதெய்வமாக கருதி காமாட்சி அம்மனை விளக்கேற்றி வழிபடுவார்கள். அதேபோல் திருமணமானதும் பெண்களை அவர்கள் குலத்தை காப்பாற்றுவதற்காக முதலில் காமாட்சி அம்மன் விளக்கை ஏற்றச் சொல்வார்கள்.
காக்கைக்கு சாதம் வைப்பது ஏன்?
முந்தைய காலங்களில் ராஜா அல்லது மன்னர் குடும்பத்தில் உள்ளவர்கள் முதலில் அவர்கள் சாப்பிடுவதற்கு முன்பு வீட்டில் உள்ள சாப்பாடுகளை அங்கு உள்ள வேலைக்காரர்கள் சாப்பிட்ட பின்பு எந்த ஆபத்தும் இல்லாத பட்சத்தில்தான் சாப்பிடுவார்கள். பின்பு சிறிதுநாள் அதிக அளவிலான வேலைக்காரார்கள் இறந்ததால், அவர்கள் அதை விரும்பவில்லை. எனவே, விலங்குகளுக்கு அல்லது பறவைகளுக்கு பரிசோதிக்க யோசனை செய்து கொண்டிருந்தார்கள்.
பசுவோ விவாசாயிகளுக்கு பயன்படுவது. புறாவோ தூது அனுப்ப பயன்படுவது. இதனால் காகம் எதற்கும் பயனில்லை என்பதால் அதை வைத்து பரிசோதித்து பிறகு உண்டு வந்தார்கள். அதுவே காலப்போக்கில் நமது முன்னோர்கள் வந்து சாப்பிடுகிறார்கள் என்று பாரம்பரியமாக கடைபிடித்து வருகிறார்கள்.