இணைய வாசகர்களுக்கு இனிய வணக்கங்கள்!! நமக்கு பசியானது ஏன் வருகின்றது என்று சந்தேகம் சில வேளைகளில் எழுந்திருக்கலாம். வயிற்றிலுள்ள சாப்பாடு முடிந்தவுடன் பசி வருகிறது என்று நாம் சொல்லலாம் ஆனால் உண்மையில் பசிக்கும் பொழுது ஏற்படுகின்ற உணர்வானது எவ்வாறு ஏற்படுகின்றது?
சிலருக்கு வயிற்றிலே ஒலி எழும்பும் அந்த ஒலி எவ்வாறு உருவாகின்றது என்பதை தெரிந்து கொள்வோம். வழக்கமாக நாம் ஒரு உணவை சாப்பிடும் பொழுது அது வாயிலே நன்றாக நசுக்கப்பட்டு பிறகு தொண்டை வழியாக நம்முடைய இரைப்பைக்கு செல்லும் இரைப்பையில் அந்த உணவானது சமிபாடு அடைய வேண்டும் அல்லது கூழ்ஆக்கப்பட வேண்டும்.
இரைப்பையானது முன்னும் பின்னுமாக அசைவதன் மூலமாக தசைகளை சுருக்கி நீட்டி உணவை நசிக்கும். அந்த இரைப்பையில் ஹைட்ரோகுளோரிக் அமிலம் என்கின்ற மிகச் செறிவான ஒரு அமிலமானது உணவு வரும் முன்பு சுரக்கப்பட்டு இருக்கும் அந்த அமிலத்தை சேர்ந்து உணவானது இவ்வாறான சூழ்நிலைக்கு மாற்றப்பட்டு முன் சிறுகுடல் பெருங்குடல் என்று ஒவ்வொன்றாக சத்துக்களை உறிஞ்சிவதற்காக அனுப்பிவைக்கப்படும். ஆகவே இரைப்பையில் உணவு முடிவடைந்த பின்னர் உணவு வருவதற்காக விரிவடைந்த இரைப்பை ஆனது மீண்டும் சுருங்க ஆரம்பிக்கும்.
அவ்வாறு சிறிது சிறிதாக சுருங்குது என்ற சத்தம் தான் நமக்கு வயிற்றிலே ஒரு வகையான ஒலியாக கேட்கும். அதுமட்டுமல்லாமல் வயிற்றில் சுரக்க படுகின்ற அந்த அமிலமானது சிறிது நேரத்திற்கு பிறகு அங்கே உணவு இல்லாவிட்டால் இரைப்பையின் சுவர்களை பாதிக்க ஆரம்பிக்கும். இதுதான் வயிற்றிலே ஏற்படுகின்ற உணர்வுகளுக்குக் காரணம். பசி ஏற்பட்ட உடனேயே நாம் சாப்பிடாவிட்டால் அந்த அமிலமானது இரைப்பைச் இவர்களை உணவாக எடுத்துசமிபாடடையச் செய்யும் இதுவே அல்சர் எனப்படுகிறது நோயாக கருதப்படுகிறது. ஆகவே உங்களுடைய நேர நேரத்துக்கான உணவுகளை சரியாக பெற்றுக்கொள்ளுங்கள்.
image source:https://www.healthcentral.com/article/fibromyalgia-gastrointestinal-disorders-and-psychologic-distress