இணைய வாசகர்களுக்கு இனிய வணக்கங்கள்!! இணையத்தில் படித்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றோம். தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்.
ஜோதிடத்தில் பலவகையான முறையில் பலன்கள் சொல்லப்பட்டு வருகின்றன. அதில் ஒன்று தான் ‘ராசிக்கல்”. இந்த ராசிக்கல் மனித வாழ்க்கையில் இன்றைய காலகட்டத்தில் எந்த வகையில் முக்கியத்துவம் பெறுகிறது என்பதை இங்கு பார்ப்போம்.
பூமியை சுற்றி இருக்கும் ஒன்பது கிரகங்களே மனித சரீரத்தை இயக்குகிறது. ஒன்பது கிரகங்களிலிருந்து வெளிவரக்கூடிய மின்காந்த அலைகள் மனித உடலில் இருக்கின்ற ஒவ்வொரு உறுப்பையும் ஒவ்வொரு கிரகங்களும் ஆளுமை செய்கின்றன.
நாம் பிறக்கும் சமயத்தில் வான மண்டலத்தில் உள்ள நவக்கோள்களும் எந்த அமைப்பில் சஞ்சாரம் செய்துக் கொண்டிருக்கிறதோ அதுவே நமது பிறப்பு ஜாதகமாகும். இதில் எந்த கிரகத்தின் கதிர்வீச்சு குறைவாக பூமியில் விழுகிறதோ அந்த கிரகத்தின் தன்மையில் நமது சரீரத்தில் உள்ள உறுப்புகள் இயற்கையாக செயல்பட மறுக்கும்.
ஏன்? எதற்கு?
முதலில் நாம் ஒன்றை தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும். ராசிக்கல்லை எதற்கு பயன்படுத்த வேண்டும்? அதனால் என்ன பயன்? இதில் தெளிவாக இருந்துவிட்டால் ஏமாற்றுக்காரர்களிடம் இருந்து நாம் தப்பித்து விடலாம். பணச் செலவும், மன உளைச்சலும் ஏற்படாது.
நோய்
நமது உடலில் உள்ள உறுப்புகள் பாதிப்படைந்தால் அந்த கிரகத்தின் தன்மையில் கற்களை மோதிரமாகவோ அல்லது அணிகலன்களாவோ அணியும்போது உடல் உறுப்புகள் சீர்நிலை பெற்று பாதிப்பிலிருந்து (நோய்) விடுபடலாம்.
கண் திருஷ்டி
‘கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது”. கண் திருஷ்டியை அடைந்தவர்கள் வாழ்க்கையில் தான் எடுக்கும் எந்த ஒரு முயற்சிக்கும் பலன் கிடைக்காது அல்லது தாமதமாக பலன் கிடைக்கும். ராசிக்கற்களுக்கு கண் திருஷ்டியை போக்கும் வல்லமை உண்டு.
எனவே மேற்கூறிய இரண்டு விஷயங்களுக்கு பெரிதும் இந்த ராசிக்கற்கள் என்று கூறப்படுகின்ற நவரத்தினங்கள் பயன்படுகின்றன.
ராசிகள் மொத்தம் 12 என்பது இன்று ஜோதிடத்துறையில் இல்லாதவரும் அறிந்த ஒன்று. ஒவ்வொரு ராசிக்கும் ராசி அதிபதி என்று ஒருவர் இருப்பார். அவர் தன்மையில் கற்களை அணியும்போது பலன்கள் கிடைக்கும்.
ராசிப்படி நவரத்தினங்கள் அணியும் முறை
மேஷம் – பவளம்
ரிஷபம் – வைரம்
மிதுனம் – மரகதப் பச்சை
கடகம் – முத்து
சிம்மம் – மாணிக்கம்
கன்னி – மரகதப் பச்சை
துலாம் – வைரம்
விருச்சம் – பவளம்
தனுசு – புஷ்பராகம்
மகரம் – நீலம்
கும்பம் – நீலம்
மீனம் – புஷ்பராகம்
மேலே குறிப்பிட்டுள்ள ராசிக்களுக்குரிய ரத்தினங்கள் பொதுவானவை. அவரவர் பிறப்பு ஜாதகத்தில் உள்ள கிரக நிலைக்கேற்ப பலம், பலவீனம் அறிந்து, நோய்களின் தாக்கங்களை உணர்ந்து நவரத்தினங்களை அணியும்போது சரியான பலன்கள் கிடைக்கும்.
உங்கள் வீட்டில் வறுமை நீங்கி செல்வம் செழிக்க வெள்ளிக்கிழமை வழிபாடு