உலகளவில் இரண்டு பில்லியனுக்கும் அதிகமான பயனர்களைக் கொண்ட மிகவும் பிரபலமான chat தளமான வாட்ஸ்அப்பை ஏற்கனவே மொபைல் செயலியாகவும் இணையப் பதிப்பாகவும் கணினிகளில் பயன்படுத்த முடியும் என்பது உங்களுக்கு ஏற்கனவே தெரியும்.
இருப்பினும், இங்குள்ள இணையப் பதிப்பின்(Web version) பயனர் இடைமுகம்( User interface) மற்றும் அம்சங்களில் நீங்கள் அவ்வளவு திருப்தி அடைய முடியாது என்பதை நீங்கள் ஏற்கனவே அறிவீர்கள்.
இதன் காரணமாக, டெஸ்க்டாப்பை ஆதரிக்கும் முழுமையான வாட்ஸ்அப் பிசி செயலியின்(WhatsApp PC App ) தேவை நீண்ட காலமாக பலரின் கவலையாக உள்ளது.
வாட்ஸ்அப்பின் பீட்டா பதிப்பு விண்டோஸுக்காக ஏற்கனவே வெளியிடப்பட்டிருந்தாலும், பிரபல இத்தாலிய இணையதளமான Aggiornamenti Lumia One வெளியிட்ட சில ஸ்கிரீன்ஷாட்கள் மற்றும் GIFகளின் அடிப்படையில், குறிப்பாக Windows மற்றும் MacOS க்காக விரைவில் மேம்படுத்தப்பட்டு வெளியிடப்படும் என்று GSMArena தெரிவித்துள்ளது.
ஏற்கனவே உள்ள வாட்ஸ்அப் வெப் பதிப்பில் உள்நுழைய(Process) சில வினாடிகள் ஆகலாம், ஆனால் இந்த புதிய பிசி ஆப்ஸ் ஒரு நொடிக்குள் திறந்து(Open) செயல்படுத்தப்படும்.
இந்த செயலியில் டச் டிஸ்பிளேவை (Touch display) ஆதரிக்கும் எனவும் இதில் வரைதல் அம்சமும் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பிசி செயலி (PC App) ஆனது General, Account, Chats, Notifications, Storage, Help என 6 வகைகளாகப் (category)பிரிக்கப்பட்டுள்ளது என்று Aggiornamenti Lumia இணையதளம் சுட்டிக்காட்டுகிறது,மேலும் WhatsApp இல் பாரம்பரிய வெளிர் பச்சை chat background உம் நீங்கள் எதிர்பார்க்கலாம்.
எனவே வாட்ஸ்அப் வெப் பதிப்பைப்(WhatsApp web version) பயன்படுத்துவதற்கான வரம்புகள் இந்த செயலி மூலம் தவிர்க்கப்படும் என்றும், விரைவில் இதைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள முடியும் என்றும் நாம் எதிர்பார்க்கலாம்.